திராவிட அரசுகள் தேவேந்திர மக்களுக்கு தந்த வலிகள் ...

Latest Post

கந்துவட்டி!!

Written By DevendraKural on Monday, 23 October 2017 | 22:30

கந்துவட்டி தடுப்பு சட்டமும்குண்டர் தடுப்பு சட்டமும்...

" அவர் இறந்துவிட்டார் என்று சொன்னதும் ஓடிப் போய் பார்த்தேன். நான் அதை பார்த்திருக்கக் கூடாது. அவர்தூக்கு மாட்டிய மின் விசிறி என் கண்களுக்கு சினிமா ரீல் மாதிரி தெரிந்தது. தூக்கு போட்ட அங்கவஸ்திரம்சினிமா பிலிம் மாதிரி இருந்தது. அவர் மண்டியிட்டிருந்த நிலையைப் பார்க்கும்போது இந்த நிலை யாருக்கும் வரக்கூடாது என்று தோன்றியது "

இப்படி பேசியது யார் தெரியுமா சூப்பர் ரஜினிகாந்த் தான். பிரபல இயக்குநரும், தயாரிப்பாளருமான ஜி.வி என்ற  ஜி.வெங்கடேஸ்வரன் 2003ம் ஆண்டு கந்துவட்டிக்கும்பலால் தற்கொலை செய்து கொண்ட போது திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நடந்த இரங்கல் கூட்டத்தில் தான் இப்படி ரஜினி பேசினார்.  ஆனால், தற்போது  ஒரு பெண், 2 குழந்தைகள்  கலெக்டர் அலுவலகத்தில் சுடர்விடும் நெருப்பென எரிந்து செத்துப் போனார்கள். சூப்பர் ஸ்டார்களோ, கலைஞானிகளோ ஓடோடி போகவில்லை.

கொடி கட்டிப் பறக்கும் கந்துவட்டி தொழில்
======================================
தமிழகத்தில் கந்துவட்டி தொழிலால் ஏராளமான குடும்பங்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளன. பலர் கொலை செய்யப்பட்டுள்ளனர். பல ஆயிரம் குடும்பங்கள் ஊரை விட்டு தலைமறைவாகியுள்ளன. பல பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். பலருடைய சொத்துக்கள் கபளீகரம் செய்யப்பட்டுள்ளன. எண்ணற்றோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

தமிழகத்தின் பிரபலமான தயாரிப்பாளர் .ஜி.வி கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்டது போலவே, நெல்லையைச் சேர்ந்த இசக்கி முத்து குடும்பத்தை சேர்ந்த மூவர் தீக்குளித்து இறந்து போய் உள்ளனர்.


கந்து வட்டி தடைச் சட்டம்
========================

தமிழகத்தில் 2003ல் கந்து வட்டி தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது.  இச்சட்டம் ஓரளவு ஜெயலலிதா ஆட்சியின் போது அமலில் இருந்து உண்மை தான். ஜி.வி. தற்கொலை செய்து
கொண்டதன் பின்னனியில் தென்மாவட்டத்தை சேர்ந்த பெரும்புள்ளி பின்னிருந்ததாக பரபரப்பாக பேசப்பட்டது.

இதை மையப்படுத்தி மதுரையில் நடக்கும் கந்துவட்டி கும்பல்கள் குறித்து தீக்கதிரில் நான் எழுதிய ஒரு கட்டுரையைத் தொடர்ந்து பலர் மீது வழக்கும் தொடுக்கப்பட்டது.

நீதிபதியின் கடிதம்
==================
ஆனால், இச்சட்டம் முழுமையாக அமலாகவில்லையென்பதே நிதர்சமான உண்மை. கடந்த 2013ம் ஆண்டு  அப்போதைய தலைமை நீதிபதியாக இருந்த ராஜேஷ்குமார் அகர்வாலுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் ஒரு கடிதம் எழுதினார்.

அந்த கடிதத்தில், " தமிழ் நாளிதழில் திருப்பூர் மாவட்டத்தில் கந்து வட்டி கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து செய்தி வெளியாகியுள்ளது.  எனவே, தமிழகத்தில் 2003ம் ஆண்டு இயற்றப்பட்ட தமிழ்நாடு கந்துவட்டி தடுப்பு சட்டத்தை தீவிரமாக அமல்படுத்தவும், இந்த சட்டத்தின்கீழ் 2003ம் ஆண்டு முதல் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கையை அரசிடம் இருந்து பெறவேண்டும். இந்த கந்துவட்டி கொடுமை குறித்து தகுந்த நடவடிக்கையை  உயர்நீதிமன்றம் மேற்கொள்ள வேண்டும்" என வலியுறுத்தியிருந்தார்.

இந்த கடிதத்தையே பொதுநல மனுவாக தாமாக முன்வந்து பதிவு செய்த தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வால், இதுகுறித்து பதிலளிக்கும்படி தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபி, திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோருக்கு நோட்டீசு அனுப்பினார். மேலும், இந்த வழக்கில் ஐகோர்ட்டுக்கு உதவும் விதமாக மூத்த வக்கீல் ஆர்.முத்துகுமாரசாமியை நியமித்தும் உத்தரவிட்டார்.அவரும் ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார்.

இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு மிக மிக முக்கியமானது.

குண்டர் தடுப்பு சட்டம்
======================
கந்துவட்டி குறித்து புகார் வந்தால் போலீசார் தீவிரமாக நடவடிக்கை எடுப்பதாக அரசு பிளீடர் எஸ்.டி.எஸ்.மூர்த்தி  கூறினார். ஆனால், கந்து வட்டி கும்பல் கடன் தொகையை வசூலிக்க குண்டர்களை பயன்படுத்துகின்றனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், போலீசார் வேடிக்கை பார்க்கின்றனர் என்ற குற்றச்சாட்டு உள்ளது.


கந்து வட்டி தடுப்பு சட்டம் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, அனைத்து வகையான ஊடகங்கள், சினிமா தியேட்டர்கள் மூலம் விளம்பரம் வெளியிட வேண்டும். இதற்காக தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும் அரசு  பயன்படுத்திக் கொள்ளலாம்..

இந்த கண்காணிப்பு கமிட்டி , கந்து வட்டி தடுப்பு சட்டத்தின்கீழ் பொதுமக்கள் கொடுக்கும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? இதுபோன்ற புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் கந்து வட்டி கும்பலுடன், போலீசார் கூட்டு சேர்ந்து செயல்படுகின்றனரா? என்பதை கண்காணிக்காக மாவட்டம் மற்றும் தாலுகா அளவில் கண்காணிப்பு கமிட்டிகளை உருவாக்க அரசு பரிசீலிக்க வேண்டும்.

மேலும், கந்து வட்டி தொழிலில் முக்கிய நபர்களாக செயல்படுபவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுப்பது குறித்தும் தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும். கந்து வட்டி கொடுமை வழக்குகளின் விசாரணை மாநகர போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் நேரடி கண்காணிப்பில் நடத்தப்பட வேண்டும்.
அமல்படுத்த வேண்டும்

யார் மீது பாய்ந்தது சட்டம்?
=========================
கந்து வட்டி வழக்கில் கோர்ட்டு மூலம் தண்டனை பெறுபவர்களின் விவரங்களை அவ்வப்போது உயர்நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்ய வேண்டும் என்று  நீதிபதிகள் கூறியிருந்தனர்.
ஆனால், தமிழகத்தில் தாலுகா அளவில் கண்காணிப்பு கமிட்டிகள் உருவாக்கப்படவேயில்லை.

அத்தடன், கந்துவட்டி நடத்தும் நபர்கள் மீது  குண்டர் தடுப்பு சட்டம் பாய்ச்சுவதற்குப் பதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு யார் மீது இந்த சட்டத்தை பயன்படுத்தியது தெரியுமா?

சென்னை மெரினாவில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த வந்த மே பதினேழு இயக்கம் திருமுருகன் காந்தி, டைசன், அருண்குமார், இளமாறன் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்ட்ம் பாய்ச்சப்பட்டது. ஓஎன்ஜிசிக்கு எதிராக துண்டுபிரசுரங்களை விநியோகித்த சேலம் மாணவி வளர்மதி மீது குண்டர் சட்டம் பாய்ச்சப்பட்டது. இப்படி உரிமைக்காக போராடும் மக்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தை பாய்ச்சும் தமிழக அரசு, கந்துவட்டி கும்பல் மீது எப்படி இச்சட்டத்தை பாய்ச்சும்?

உயிர் கொடுத்த  தோழர் வேலுச்சாமி
=================================

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியில் கந்து வட்டிக் கும்பலால்  இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அதை வீடியோ எடுத்து இணையதளத்தில் வெளியிட்டனர். இக்கொடுமைக்கு எதிராக களத்தில் நின்று போராடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் தோழர் வேலுச்சாமியை   2010 மார்ச் 10ம் தேதி   7 பேர் கொண்ட கந்துவட்டி கும்பல் படுகொலை செய்தது.அத்துடன் இவ்வழக்கில்  முக்கிய குற்றவாளியான ஆமையன், அப்ரூவராக மாறியதால் அதே கும்பல் அவனை தலை துண்டித்து கொலை செய்து காவிரியில் வீசியது.

கந்துவட்டி கும்பலின் கொட்டத்தை அடக்க இதுவரை ஆண்ட தமிழக அரசுகளால் உருப்படியான நடவடிக்கைகள் இல்லை.  இந்த நிலையில் தான் கந்துவட்டிக்கும்பலால் பாதிக்கப்பட்டு  மனதிற்குள் வெம்பிச் சாக முடியாமல் தீயிடம் இசக்கி முத்து குடும்பம் தங்களை ஒப்படைத்தது. 

முன்வந்து வழக்கை எடுக்குமா உயர்நீதிமன்றம்?
============================================

தொலைக்காட்சியில் காட்சிகளைப் பார்க்க பார்க்க நெஞ்சு கொதிக்கிறது. எதுவுமறியாத பிஞ்சு குழந்தைகள் அகல் தீபங்கள் போல எரியும் கொடுமையை காணாச்சகிக்கவில்லை.  பலமுறை கலெக்டரிடம் மனு கொடுத்து நடவடிக்கை எடுக்காததோடு, கந்துவட்டிக்குமபலோடு சேர்ந்து காவல்துறை அதிகாரிகள் மிரட்டியதால் இசக்கி முத்து  இந்த நிலையை எடுத்துள்ளார்.

அவரது மனைவி சுப்புலட்சுமி, குழந்தைகள் மதி ஆருண்யா, அக்‌ஷயா என்கிற பரணிகா  ஆகியோரின்  உயிர் பிரிந்ததற்கு காரணம், உயர்நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காத தமிழக அரசு தான். காவல்துறையைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்வர் தான் காரணம்.

எனவே, இவ்வழக்கை தானாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை எடுத்து விசாரிக்க வேண்டும். அரசு நிர்வாகத்தை கூண்டில் ஏற்ற வேண்டும். இது எரிந்தவர்களுக்கு மட்டுமல்ல, இனிமேல் எரிய  நினைப்பவர்களுக்கும் நியாயம் சேர்க்கும். செய்யுமா உயர்நீதிமன்றம் ? 
- ப.கவிதா குமார்

அந்தக் கால தீபாவளி! இந்தக் கால தீபாவளி!

Written By DevendraKural on Tuesday, 17 October 2017 | 23:55

அந்தக் கால தீபாவளி! இந்தக் கால தீபாவளி!

அந்தக் கால தீபாவளி! ஃப்ரேம் போட்டோக்கள் செல்ஃபிக்களாக மாறி, கிரீட்டிங் கார்டுகளெல்லாம் வழக்கொழிந்து போன 'மெர்சல்' தீபாவளி காலத்தில் இருக்கிறோம். முன்பு தீபாவளி எப்படியிருந்தது, அதன் அடுத்தடுத்த வெர்சன்களில் என்னென்ன மாற்றங்களாகி இருக்கின்றன என்று மக்களிடம் தீபாவளி ச்சாட் ( chat) செய்தோம். 

            
"ஏழைக் குடும்பங்களில் தீபாவளி, பொங்கலின்போது மட்டுமே இட்லி, இனிப்புகள் புது ஆடைகள் கிடைக்கும். தீபாவளி நெருங்க நெருங்க, அப்பாக்களை பிள்ளைகள் துளைத்தெடுப்பார்கள். புது ஆடை பட்டாசு வாங்க... அவர்களே, தங்கள் நில முதலாளிகளிடம் முன் கூட்டியே முன்பணம் கடனாக கேட்டு வைப்பார்கள். எவ்வளவு முன்னாடியே கேட்டாலும்கூட தீபாவளிக்கு சில நாட்கள், ஏன் சில முதலாளிகள் தீபாவளிக்கு முதல் நாள் தான் பணம் கொடுப்பார்கள்.

இதற்காக அப்பாக்கள், அவர்கள் வீட்டுக்கு தினமும் சென்று காத்துகிடந்து வாங்கி வருவார்கள். பணம் வந்தவுடன் பிள்ளைகளுக்கு மனசெல்லாம் ஒருவித படபடப்பு ஏற்படும். அப்பாக்கள் கையை பிடித்தபடி நகரம் நோக்கி பயணம் செய்வார்கள். எந்த உடையை வாங்குவது என யோசனை பலமாக இருக்கும். அப்போதெல்லாம் ரெடிமேடு கிடையாது. துணியாக எடுத்து தைக்க வேண்டும் என்பதால், டைலர் கடைகளில் கூட்டம் அலைமோதும், அவர்களிடம் கெஞ்சி தீபாவளிக்குள் உடைகளை தைத்து வாங்கி தீபாவளியன்று போட்டுக்கொள்ள படாதபாடுபட வேண்டும். வீடுகளில் புத்தாடை பட்டாசு வந்தாச்சி... அம்மாக்கள் இட்லி மாவரைத்து வைத்திருப்பார்கள்.

தீபாவளி முதல் நாள் இரவு எப்போது விடியும் என, தூக்கமே வராது. நெஞ்சமெல்லாம் படபடப்பாக இருக்கும். இரவு 12 மணிக்கு மேல் ஆங்காங்கே டமால்.. டூமீல்... என்ற வெடிச்சத்தம் கேட்டுக்கொண்டே இருப்பதால் எப்படிங்க தூங்க முடியும். தீப்பெட்டி மண்ணெண்ணெய் விளக்கோடு வெடிவெடிக்க கிளம்பினால், வீட்டில் இருப்பவர்கள், டேய் இன்னும் விடியல... ஏண்டா தூக்கத்தை கெடுக்கிற என மீண்டும், மீண்டும் சத்தம் போடுவார்கள்.
Image result for தீபாவளி


தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டு, புரண்டு படுத்தப்படியே காத்திருந்து ஒரு வழியாக விடியற்காலை வந்தவுடன் எண்ணெய் தேய்த்து குளித்து புதுசட்டை போட்டுக்கொண்டு கையில் வெடிகளோடு வீதியில் படபடவென வெடிகளை வெடித்து கிளப்புவார்கள். பலத்த சத்தத்தோடு கிளம்பும் புகையை பார்த்து, டேய் பார்த்துடா, கை, கால்ல பட்டுடப்போகுது என சொல்வார்கள். அப்புறம் வெடிக்காத வெடிகளை காலில் தேய்த்து அது வெடிக்கும்போது காலில் காயமும், சுற்றாத சங்கு சக்கரத்தை மீண்டும் கிட்ட போய் கையில் எடுக்க அது சீரிய சீரலில் கையில் காயம், இப்படி எல்லாம் செய்த பிறகு தனது பட்டாசு தீர்ந்ததும், அக்கம் பக்க வீட்டில் பிள்ளைகள் வெடிக்கும் காட்சிகளை வீதிவீதியாக சென்று பார்த்து வியப்படைவது, இப்படிப்பட்ட தீபாவளி கடந்த காலங்களில் ஏராளம். இப்போதெல்லாம் உடைகள் முதல் பலகாரம் வரை எல்லாமே ரெமேட் தான்" என்கிறார் பெரியசாமி.

தீபாவளி பலகாரங்கள்

"இனிப்பு, கார வகைகள் என ஆண்டுக்கு ஒருமுறை தீபாவளியின்போது தான் சாப்பிட முடியும். விவசாய வேலைகளால் அவைகளை ஆரஅமர உட்கார்ந்து அவைகளை செய்ய நேரம் கிடைக்காது. ஆகையால் தீபாவளி ஒருவாரம் முன்பே, முறுக்கு, லட்டு, அதிரசம், சீடை, பொரிவிளங்காய், சோமாசி, ஜிலேபி, காரவத்தல், காரசேவு, சிலேபி என அந்தக் கால காரங்கள்.

கலர் கலரான வகைகளில் இந்தக் காலத்தில் நெய் கேக், குலோப்ஜாம், பாதாம் கோகோ, பாதாரம் குல்கந்த், போலி, பாதுஷா, சோம்பப்புடி கேக் என ஏகப்பட்ட வகைகள் தயாரிக்கப்படுகின்றன.இப்படிப்பட்ட பல காரங்களை ஒரு குடும்பத்தில் ஒருவரே செய்ய முடியாது. கூட்டுக்குடும்பத்தினர் ஒரே இடத்தில் சேர்ந்து செய்வார்கள். தனிக் குடும்பத்தினரில் உள்ள பெண்கள், அக்கம் பக்கம் உள்ள உறவுப் பெண்களை அழைத்து வந்து செய்வது வழக்கம். அவர்களுக்கு இவர்கள் போய் செய்து கொடுத்து மாற்றாள் உதவி செய்து பலகாரங்களை செய்து குவிப்பார்கள்.

பல நாட்கள் பலகார பரிமாற்றங்கள் உறவுகளுக்குள் அக்கம், பக்கம் வீடுகளுக்குள் நடக்கும். பிள்ளைகளோடு சாப்பாட்டை விட பலகாரங்களே சாப்பாடு பள்ளிக்கு போகும்போது புத்தகப் பைகளில் திண்பண்டங்கள் நிரம்பி வழியும். தலை தீபாவளிக்கு வரும் திருமண தம்பதிகள் பலகாரவகைகளை தின்று திக்குமுக்காடி போவார்கள். குடும்பங்களின் குதூகலம் கும்மாளம் சந்தோஷம் என அந்தக் கால தீபாவளியை மறக்க முடியுமா?", என்கிறார் செம்மணங்கூர் சிந்தாமணி பாட்டி.

இந்தக் கால தீபாவளி

"எல்லாவற்றிலும் அவசரம். துணியாக எடுத்து வைத்து போட நேரமில்லை. ரெடிமேடு கடைகளில் அலைமோதும் கூட்டம், அதேபோல் புதுப்புது பலகார வகைகள் கேள்விப்படாத பெயர்களில் ஸ்வீட், கார வகைகள், எந்த விதமான சுவை இது என நமக்கு உணர முடியாத சுவைகள் என கண்ணைப் பறிக்கும் கலர்கலரான பலகாரங்கள் அடுக்கப்பட்டுள்ளன. வாங்க முண்டியடிக்கும் இக்கால மக்கள் முன் கூட்டியே ஆர்டர் கொடுத்து பலகாரம் செய்து வாங்கும் பெரிய பெரிய குடும்பத்தினர்கள். இதை இல்லாமல் தீபாவளிக்கு என சீட்டு பிடித்து அதன் மூலம் தீபாவளிக்கு இனிப்பு, பட்டாசு, புத்தாடை வழங்கும் சீட்டு கம்பெனிகள், வீதிக்கு வீதி முளைத்துள்ளன. (இதிலே பணம் கட்டி ஏமாற்றியவர்களும், ஏமாந்தவர்களும் ஏராளம்).சென்னை போன்ற பெருநகரங்களில் இருந்து தீபாவளி விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்கு சென்று திரும்புவதற்குள் பாடாய் படுத்தும் போக்குவரத்து நெருக்கடி. இதனால் இப்படிப்பட்டவர்களுக்கு தீபாவளி சந்தோஷமே இல்லாமலும் போகிறது. எனவே அப்பட்டவர்களுக்கு பலகாரங்கள் செய்ய நேரம் ஏது. அதனால கடைகளில் வாங்கிக் கொள்கிறோம். மேலும் வீட்டில் செய்தால் ஒன்றிரண்டு பலகாரமே செய்ய முடியும். கடைகளில் பலவிதமான ஐட்டங்களை வாங்கி சாப்பிட்டு சுவை பார்க்க முடிகிறது. அவசர உலகம் அதற்கு தகுந்த மாதிரி நம்மை தயார் படுத்திக்கொள்ள வேண்டுமல்லவா. எப்படியோ நாங்களும் அவசர சந்தோஷத்திலும் சந்தோஷமாக தீபாவளியை கொண்டாடுகிறோம்" என்கிறார்கள் இப்போதைய குடும்பத் தலைவி திருமதி கீதா இளவரசன், சிவசக்தி ஆகியோர்.

இப்போது சாதாரண ஏழை எளிய மக்கள் முதல் பெரிய வசதி படைத்த குடும்பங்கள் வரை ரெடிமேடு தீபாவளியையே விரும்புகிறார்கள். 

"அதைவிட தீபாவளி சீட்டு பிடித்து ஒரு ஆண்டு முடிந்ததும், 600 ரூபாய் மதிப்புள்ள பிராந்தி பாட்டில் 2, பீர் 2, 1 லிட்டர் வாட்டர் பாக்கெட், பெப்சி 2 லிட்டர், சோடா 3, உருளை சிப்ஸ் 1 பாக்கெட், பிளாஸ்டிக் கிளாஸ் 8, சிக்கன் 65, ஒரு கிலோ ஸ்வீட் பாக்ஸ், ஊறுகாய் ஒரு சரம் என,. 10 அயிட்டங்கள் கொடுக்கப்படும் என ஸ்ரீசாய் பசித்திரா ஆண்கள் தீபாவளி பண்டு மந்தைவெளி சென்னை 28 என்ற முகவரியை செல்போன் செல்போன் எண்ணோடு வழங்கியுள்ளனர். இது குடிமன்னர்களின் தீபாவளி கொண்டாட்டமாம்", என்கிறார் வேலைக்குப்போகும் சிந்தாமணி.

நண்பர்கள் பார்ட்டி வைத்தும், நகர மக்கள் பட்டாசு வெடித்தும், கிராம மக்கள் பிள்ளைகளோடும், உறவினர்களோடும் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர்.

மொத்தத்தில் ஒளியின் சிறப்பை உணர்த்துவது தீபாவளி. தீபங்களின் வரிசை என்பதே தீபாவளி. வெளியுகலத்திலுள்ள இருள் மட்டுமில்லாமல், மனதில் இருக்கும் தீமை என்றுமே அகன்று, இருளும் நீங்க தீபாவளி வழிகாட்டுகிறது. புத்தாடை, பலகாரம், பட்டாசு, உறவினர்களைச் சந்திப்பது என வெறும் கொண்டாட்ட நாளாக மட்டுமில்லாமல் தன்னையோல பிறரை நேசிக்கும் அன்பு மனம் நமக்கு வேண்டும் என்பதை உணர்த்துகிறது. எளியவர்களுக்கு இயன்ற உதவி செய்யும் நன்னாளாக  அமைந்துள்ளது.

எஸ்.பி.சேகர்.

அரசியல் சார்பின்றி இருப்பேன்: கவர்னர் பன்வாரிலால் முதல் பேட்டி

Written By DevendraKural on Friday, 6 October 2017 | 01:36

தமிழக அரசு, கவர்னர், பன்வாரிலால் புரோஹித், அரசியல், சட்டம்சென்னை: "செயல்பாடுகளை பொறுத்து தமிழக அரசுக்கு தனது அதரவு இருக்கும்", அரசியல் சார்பின்றி இருப்பேன் என்றும் தமிழக கவர்னராக பதவியேற்ற பின்னர் பன்வாரிலால் நிருபர்களுக்கு அளித்த முதல் பேட்டியில் கூறினார்.
கவர்னர் மேலும் கூறியதாவது: 
அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுவதில் உறுதியாக இருப்பேன். அரசியல் சட்டத்தை காப்பது எனது முதல் கடமை. அரசியல் சார்புடன் எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்க மாட்டேன். செயல்பாட்டை பொறுத்து தமிழக அரசுக்கு எனது ஆதரவு இருக்கும். அரசின் நிர்வாகத்தில் முழு அளவில் வெளிப்படை தன்மை உறுதி செய்யப்பட வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்

புதிய கவர்னர் உள்ளும் – புறமும்!


ஓராண்டுக்கு பின் தமிழகத்துக்கு புதிய கவர்னர் நியமிக்கப்பட்டுள்ளார். பெரும் சர்ச்சைகளுக்குள் சிக்கிய தமிழகத்தின் பொறுப்பு கவர்னரான வித்யாசாகர்ராவ் விடுவிக்கப்பட்டு புதிய கவர்னராக பன்வாரிலால் புரோகித் நியமிக்கப்பட்டுள்ளார்.

1940 ஏப்ரல் மாதம் 16ந்தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜின்ஜின் என்கிற கிராமத்தில் பகவான்தாஸ்க்கு மகனாக பிறந்தார் பன்வாரிலால் புரோகித். புரோகித் என்பது சாதிப்பெயர். வட இந்திய பார்ப்பனர் சாதியை சேர்ந்தவர். இவர் பிறந்தது கிராமமாகயிருந்தாலும் படித்தது, வளர்ந்ததுயெல்லாம் மகாராஷ்ட்ரா மாநிலம் நாக்பூரில்.

நாக்பூரில் உள்ள ஜீ.எஸ் கல்லூரில் பி.காம் படித்தவர் ஆரம்பத்தில் பார்வார்டு பிளாக் கட்சியில் இருந்தார். அதன் பின்பே காங்கிரஸ் கட்சிக்கு வந்தார். முதல் முறையாக அதாவது 1978ல் கிழக்கு நாக்பூர் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக தேர்வானார். 1980ல் தெற்கு நாக்பூர் தொகுதியில் போட்டியிட்டவர் இந்த முறை ஊரக வளர்ச்சி துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். 1984ல் வந்த பாராளமன்ற தேர்தலில் நாக்பூர் தொகுதியில் போட்டியிட்டு எம்.பியாக வெற்றி பெற்றார். 1989லும் அதே தொகுதியில் இருந்து எம்.பியாக தேர்வானார். அதன்பின் இவருக்கும் முன்னால் பிரதமர் ராஜிவ்காந்திக்கும் முட்டள் மோதல் வந்தது. இதனால் கட்சியில் இருந்து ஒதுங்கி வைக்கப்பட்டு இருந்தார்.

இந்த நேரத்தில் தான் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ஆர்.எஸ்.எஸ் தீவிரமாக இருந்தபோது, அதற்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்ததோடு பண உதவியும் பெருமளவில் செய்தார். இதனால் காங்கிரஸ் கட்சியில் இவருக்கு எதிர்ப்புகள் அதிகரித்தால் கட்சியில் இருந்து விலகினார். பாஜகவில் இணைந்து 1996ல் பாஜக சார்பில் எம்.பி தேர்தலில் நின்று மூன்றாவது முறையாக எம்.பியாக தேர்வானார். பாஜகவின் முன்னால் பிரதமர் வாஜ்பாயின் நம்பிக்கைக்குரிய மத்திய அமைச்சராகவும், பாஜகவின் நிதி பாதுகாவலராகவும் இருந்த பிரமோத்மகாஜனுடன் மோதல் வந்து பாஜகவில் இருந்து விலகி 2003ல் விதர்பா ராஜ்ய கட்சி என்கிற கட்சியை சொந்தமாக தொடங்கி நடத்த துவங்கினார் பன்சாரிலால். 

விதர்பா பெயரில் கட்சி தொடங்கினாலும் அந்த விதர்பா பகுதியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துக்கொண்டு மடிந்துப்போனதுக்கு பெரியதாக எந்த உதவியும் செய்யாதவர் இவர். 2009ல் தனது கட்சியை மீண்டும் பாஜகவிலேயே இணைந்துவிட்டு 2009 எம்.பி தேர்தலில் சீட் வாங்கி நின்று தோல்வியை சந்திக்க அமைதியாகிவிட்டார். 2014ல் அதே நாக்பூர் தொகுதி வேண்டும்மென கேட்டார் தரப்படவில்லை.  பாஜக மீண்டும் பதவிக்கு வர ஆர்.எஸ்.எஸ் ஆதரவுடன் 2016 ஆகஸ்ட் 17ந்தேதி அசாம் கவர்னராக பொறுப்பு ஏற்றுக்கொண்டார். கடந்த ஆண்டு மேகாலயா கவர்னராக இருந்த சண்முகநாதன் பாலியல் சர்ச்சையில் சிக்கி பதவியை விட்டு விலகியதால் மேகாலயா கவர்னர் பதவியையும் கூடுதலாக பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில் தான் தமிழக கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.

1959 ஜீலை 14ந்தேதி புஷ்பாதேவி என்கிறவரை திருமணம் செய்துக்கொண்ட பன்சாரிலால்க்கு இரண்டு மகள்கள், ஒரு மகள். பெரும் தொழிலதிபர். கண்ணாடி தொழிற்சாலை, சிமெண்ட் தொழிற்சாலை, ஆட்டோமொபைல்ஸ், கல்லூரிகள் என பல தொழில்கள் நடக்கின்றன. இந்துத்துவாதியும், காங்கிரஸ்காரராக இருந்து நாட்டு விடுதலைக்காக போராடிய கோபால கிருஷ்ணா கோகலே தொடங்கிய தி ஹிட்டவாடா பத்திரிக்கை இவர் கட்டுப்பாட்டில் இருந்தது, இப்போது இவரது மகன் ராகேஷ் நடத்துகிறார்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்சின், இந்திய பார்வார்டு பிளாக் கட்சியில் தனது அரசியல் வாழ்வை தொடங்கி, காங்கிரஸ் கட்சிக்கு வந்து கலந்தாலும், அவரது ரத்தத்தில் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம் தான் ஓடிக்கொண்டு இருந்தது. இதை எப்போதும் அவர் மறைத்துக்கொண்டதில்லை. அதனால் தான் காங்கிரஸ்சில் இருந்து விலகி பாஜகவில் அடைக்கலமானபோதும், அடைக்கலமாகி பின்பு தனி கட்சி நடத்தியபின்பு அதுவும் போணியாகாமல் மீண்டும் பாஜக கதவை தட்டியபோது, மீண்டும் இணைத்துக்கொண்டு கவர்னர் பதவி வரை தந்துள்ளது பாஜக.

அரசியல் விளையாட்டில் தேர்ந்தயிவர். பின்னணி பேரம் நடத்துவதில் கைதேர்ந்த பிஸ்னஸ்மேன். 1989ல் ஆர்.எஸ்.எஸ் கரசேவை தொடங்கும் முன்பு பல கட்சிகளிடம் ஆதரவு கேட்டது. அப்போது முன்னால் பிரதமராக இருந்த இராஜிவ்காந்தியை ஆர்.எஸ்.எஸ் தலைவர் பாலாசாகோப் ரகசியமாக சந்தித்து ஆதரவு கேட்டார். இரு தலைவர்களை ரகசியமாக சந்திக்க வைத்ததை பின்னாளில் பெருமையாக அரசியல் அரங்கில் வெளிப்படுத்தியவர், ஆர்.எஸ்.எஸ்க்கு மறைமுகமாக ராஜிவ்காந்தி ஆதரவு தந்தார் என்றார். இன்று தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு குழப்பத்தின் உச்சத்தில் உள்ளது. மத்தியில் ஆளும் பாஜக தன் விரும்படியெல்லாம் அதை ஆட்டிவைத்துக்கொண்டுள்ள சூழ்நிலையில் தமிழக கவர்னராக வந்துள்ளார் பன்வாரிலால் புரோகித்.

புரோகித் என்கிற புரோகிதர் வகுப்பை சேர்ந்த கவர்னர், தமிழகரசு நடக்க அதிமுக அரசுக்கு சுபகாரியம் செய்ய போகிறாறா அல்லது காரியம் செய்து வைத்து சுத்தமாக முடிக்கபோகிறாறா என்பது இனிதான் தெரியவரும்

பிறருக்காக வாழ வேண்டும் என்ற மனித வாழ்வியல் நெறியைக் கொண்ட நாடு ஜப்பான்.

Written By DevendraKural on Wednesday, 4 October 2017 | 04:05

'டைட்டானிக்’ திரைப்படம் பார்த்திருப்பீர்கள். அந்தப் படத்தில் காட்டப்படாத ஒரு சம்பவம் இருக்கிறது.

கப்பல் பழுதடைந்து கடலில் மூழ்கிக்கொண்டிருக்கும். அவர்களைக் காப்பாற்ற பல படகுகள் வரும். முதலில் கப்பலில் இருந்து படகுக்குப் பெண்களும், குழந்தைகளும் மட்டுமே செல்ல வேண்டும் என்று முடிவெடுக்கிறார்கள். அப்படி, கப்பலில் இருந்து படகுக்கு செல்லும்போது ஒரு ஜப்பானியன் பெண்களோடு கலந்துபோய் படகில் ஏறி தப்பித்துக் கொள்கிறார். அந்த நபர் தன்னுடைய நாடான ஜப்பானுக்குச் செல்லும்போது, அந்த மக்களும் நாடும் அவரை வரவேற்கவில்லை. மாறாகப் புறக்கணிக்கிறார்கள்.

அதற்கு காரணம் ஜப்பானியர்களுக்கு ஒரு பண்பாடு உண்டு. அதை விளக்க அங்கிருக்கும் பள்ளிகளில் ஒரு குட்டிக் கதை வைத்திருக்கிறார்கள். ஒரு ராணுவப் படை வீரர்கள் குதிரையில் கும்பலாக வருகிறார்கள். கண்ணில் பட்டவர்களையெல்லாம் வெட்டிச் சாய்க்கிறார்கள். மக்கள் அலறியபடி பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓடுகின்றனர். தெருவில், இரண்டு கைக்குழந்தைகளுக்கு ஒரு பெண் சாதம் ஊட்டிக் கொண்டிருக்கிறாள். ராணுவப்படை வருவதை அறிந்து குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு ஓடுகிறாள். ராணுவம் பக்கத்தில் வந்துவிட்டது. 

இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தையை இறக்கிவிட்டு ஓடினால்தான் அவள் தப்பிக்க முடியும். இரண்டு குழந்தைகளின் முகத்தையும் பார்க்கிறாள். சற்று நேரத்தில் ஒரு குழந்தையை இறக்கிவிட்டு ஒரு குழந்தையை தூக்கிக்கொண்டு ஓடுகிறாள்.
இறக்கிவிடப்பட்ட குழந்தை அவள் கண்முன்னே வெட்டப்பட்டு மரணிக்கிறது. அவளிடம் ஒரு பெரியவர் கேட்கிறார். ' ஒரு தாய்க்கு இரண்டு குழந்தைகளும் சமமானதுதானே! அப்படி இருக்கும்போது எதை வைத்து ஒரு குழந்தையை பலிகொடுக்கத் துணிந்தாய்?’ என்று.

அந்த பெண் கண்ணீருடன் சொன்னாள்... 'என் குழந்தைக்கும், பக்கத்து வீட்டுக் குழந்தைக்கும் சாதம் ஊட்டிக் கொண்டிருந்தேன். அப்போதுதான் ராணுவம் வந்தது. பக்கத்து வீட்டுக் குழந்தையை இறக்கிவிட எனக்கு அதிகாரம் கிடையாது. அதனால் என் குழந்தையை இறக்கிவிட்டு பக்கத்து வீட்டுக் குழந்தையைக் காப்பாற்றினேன்!’ என்று சொன்னாள். அந்தப் பெரியவர் கண் கலங்கினார்.

நமக்காக வாழாமல் பிறருக்காக வாழ வேண்டும் என்ற மனித வாழ்வியல் நெறியைக் கொண்ட நாடு ஜப்பான். அந்த நாட்டில் பிறந்த ஒருவர் கோழையாகத் தப்பி வந்ததை அந்த மக்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இது போன்ற ஏராளமான பாடங்களை வரலாற்றில் இருந்துதான் நாம் கற்றுக் கொள்ள முடியும்!'' படித்து பகிர்தது..

ஜெயலலிதா கைரேகை மூலம் சொத்துகள் கைமாறியுள்ளது!

Written By DevendraKural on Saturday, 5 November 2016 | 08:24

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தெரியாமல் அவரின் கை ரேகை மூலம் சொத்துகள் கைமாறுகிறது என திமுக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஜெயலலிதா செப்டம்பர் 22ம் திகதி முதல் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது உலகறிந்ததே.
தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மூன்று தொகுதயில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் படிவத்தில் ஜெயலலிதா கைரேகை இடம்பெற்றிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, இதற்கு அதிமுக தரப்பில் விளக்ம் தரப்பட்டதை தொடர்ந்து தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில், தருமபுரியில் தி.மு.க. மாவட்டச் செயலாளர் தடங்கம் சுப்பிரமணி இல்லத் திருமண விழாவில் ஸ்டாலின் உட்பட கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்துக்கொண்டனர்.
விழாவில் பேசிய துரைமுருகன், ஜெயலலிதாவுக்கு தெரியாமல் பல சொத்துக்களுக்கு கைரேகை மூலம் உருட்டப்பட்டு கைமாறுகிறது.
ஜெயலலிதா எழுந்து வந்தால், யார், யார் உள்ளே செல்வார்கள் என்பது தெரியும் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ஜெயலலிதா….இன்னும் 10 நாட்களில்.! வெளியான தகவல்கள்

தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்னும் 10 நாட்களில் வீடு திரும்பி சிறப்பான வகையில் பணி புரிவார் என மதுரை ஆதினம் தெரிவித்துள்ளார்.
சென்னை அப்பல்லோவில் நேரில் வந்து முதல்வரின் உடல் நலம் குறித்து விசாரித்த பின்னரே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா அக்டோபர் மாதம் 22ம் திகதி முதல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்.
சமீபத்தில் அப்பல்லோ நிர்வாக தலைவர் பிரதாப் ரெட்டி, முதல்வர் வேகமாக குணமடைந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் எப்போது வீடு திரும்ப வேண்டும் என அவர்தான் முடிவு செய்வார் என கூறி மகிழ்ச்சியை ஏற்படுத்தினார்.
இந்நிலையில், மதுரை ஆதினம் கூறியதாவது, நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை, அண்ணா திமுக அவைத்தலைவர் மதுசூதனன் ஆகியோரிடம் அரை மணி நேரம் முதல்வர் உடல் நிலை குறித்து விசாரித்தேன்.
அப்போது அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியான வகையில் அம்மாவின் உடல் நலம் குறித்த முன்னேற்ற செய்திகளை என்னிடம் தெரிவித்தார்கள்.
இன்னும் 10 நாட்களில் இல்லம் திரும்பி சிறப்பான வகையில் பணி புரிவார் என கூறியுள்ளார்.

நாகரீக தோற்றத்தின் அர்த்தம் உள்ள பெயர் கொண்ட தமிழ் சாதி

பள்ளன் என்றால் புனிதமானவன் பிராகிருதமொழியில் தெய்வங்கள் அக்குலத்தில் தோன்றியதால்.
பள்ளன் என்றால் வீரன் சிந்துசமவெளி நாகரீகத்தை தோற்றுவித்த தமிழர்கள் அடையாளம். உலகம் முழுவதும் பள்ளர் பெயர் கொண்ட வெளிநாட்டினர் நாகரீகத்தை வேளாண்மை இரும்பு நாகரீகத்தை கற்று தந்த பள்ளர் பெயரை குடும்ப பெயராக பயன்படுத்திவருகின்றனர்.
தமிழ் நாட்டில் பள்ளர் சங்ககாலங்களில் மள்ளர் என்று அழைக்கப்பட்டுள்ளனர் ஏனெனில் சங்க தமிழ் அர்த்தத்தோடு பள்ளர்களை மள்ளர்கள் என்றது.
மள்ளன் என்றால் செல்வமுடையவன்
மள்ளன் என்றால் திண்மையுடையவன்
மள்ளன் என்றால் உழவர்
மள்ளன் என்றால் பலமுடையவன்.
வேந்தன் வழிவந்தோர்.
இஃது வரலாற்று அடிப்படையில் சங்க தமிழ் அடிப்படையில் மள்ளர் என்று பெருமையாக கூறி கொள்வதில் என்ன தவறு?
எமது பெயரை யாம் பயன்படுத்தாமல் வேறு யாரை பயன்படுத்த சொல்கின்றீர்?
எமக்கு பெருமை சேர்க்கும் பல பெயர்கள் உண்டு. அது எம் முன்னோர்கள் சிறப்பாக வாழ்ந்த அடையாளம்.
ஆட்சி செய்து வேந்தர் என்று பெயர் வாங்கியவர்கள் எம் முன்னோர்.
வேந்தர்
மள்ளர்
உழவர்
பள்ளர்
தேவேந்திரகுலத்தான்
இந்திரகுலம்
தெய்வேந்திரர்
தேர்வேந்தர்
பாண்டியர்
குடும்பர்
வாரியர்
மூப்பர்
காலாடியர்
கடையர்
பண்ணாடி
மண்ணாடி
வயற்காரன்
பண்ணைகுடும்பன்
வன்னியகுடும்பன்
பணிக்கன்
பலகான்
மல்லர்
மல்லாண்டவர்
தேவேந்திர சக்ரவர்த்தி
தேவேந்திரகுலவேளாளர்
நெல்லினமக்கள் மல்லர்
தேவேந்திர பள்ளர்
மள்ளசாதி குடும்பன்
கரையாளன் கரையான்
வங்கபள்ளர்
வாதிரியர்
குளத்து குடும்பன்
அளத்துபள்ளர்
வீர நாட்டார்
சீவந்தி வளநாட்டார்
கொற்க்கை குடவளநாட்டார்
அம்மாபள்ளர், ஆத்தாபள்ளர்,அஞ்ஞாபள்ளர், ஆயி பள்ளர், ஈசன்பள்ளர், ஈஸ்வரி மரபு என வேறு பல பெயர்களும் உண்டு !
என எண்ணிலடங்கா பெருமை கொண்ட பெயர்கள் உள்ளது எம்மினம்.
ஒவ்வொரு பெயரிலும் மனித நாகரீக தோற்றத்தின் அர்த்தம் உள்ள பெயர் கொண்ட தமிழ் சாதி நாங்கள்

எவரையும் விட்டுவைத்ததில்லை கரண் தபார்..!

"நான் ஆக்ஸ்போர்டில் தத்துவத்தில் பட்டயப்பயிற்சி முடித்த நிலையில் பத்திரிகைத் துறையில் எனக்குப் பணியாற்ற ஆர்வமிருக்கிறது என ஆறு ஆங்கில நாளேடுகளுக்குக் கடிதம் அனுப்பினேன். நான்கு பத்திரிகைகள் அதற்குப் பதிலளிக்கவில்லை, ஒரு பத்திரிகை என்னை ஏளனம் செய்து கடிதம் அனுப்பியது. ஒருவர் மட்டும்தான் இப்படியொரு கடிதத்தை நான் பார்த்ததே இல்லை என்று பதிலளித்து தன்னை வந்து சந்திக்குமாறு கூறினார். அவர்தான் டைம்ஸ் பத்திரிக்கையின் தலைவர் ஹ்யூம். பத்திரிகைத் துறை பற்றி ஒன்றுமே அறிந்திராத என்னை நைஜீரியாவுக்கு அனுப்பி செய்திகள் சேகரிக்கச் சொன்னார். அவர்தான் பத்திரிக்கை உலகில் எனது குருவும் கூட. அன்று அப்படியொரு கடிதம் எனக்கு வந்திருக்காவிட்டால் நான் ஏதோ ஒரு பள்ளியில் ஆசிரியராக இருந்திருப்பேன்”, 
"நீங்கள் பத்திரிகைத்துறையில் சேர்ந்திருக்காவிட்டால் என்னவாகி இருப்பீர்கள்?" என அவுட்லுக் இதழ் கேட்ட கேள்விக்கு கரண் தபார் அளித்த பதில் இது. 
செய்திகளுக்கு என்றே ஐம்பதுக்கும் அதிகமான சேனல்கள் இருக்கும் காலகட்டம் இது. இந்தியச் செய்தித் தொலைகாட்சிகள் என்றாலே  தூர்தர்ஷன் மட்டுமே செய்திகளுக்கான ஒரே ஊடகமாக இருந்த 90-களின் தொடக்கத்தில்  அன்றைய நிலையில் பிர்லா குழுமத்தின் 'ஹிந்துஸ்தான் தொலைகாட்சி நிறுவனம்' செய்தி மற்றும் அரசியல் நிகழ்வுகளை தூர்தர்ஷன் வழியாக ஒளிபரப்பத் தொடங்கி இருந்தபோது அதன் தூணாக இருந்து அதனுடன் வளர்ந்தவர் கரண் தபார். செய்திச் சேனல்கள் உருவாக அடித்தளமாக இருந்தது இவர்கள் ஒளிபரப்பிய செய்தி நிகழ்வுகள்தான்.
அரசியல்வாதிகளுடனான நேர்முகப்பேட்டி  என்றாலே ஊடகவியலாளர்கள் கேள்விகளால் துளைத்தெடுப்பார்கள் என்று இன்றைக்கு உருவாகி இருக்கும் அடையாளத்துக்கு கரண் தபார்  ஒரு முன்னோடி எனலாம். இத்தனைக்கும் ஹிந்துஸ்தான் நிறுவனத்துடன் இணைவதற்கு முன்பு அவர்  பி.பி.சி மற்றும் லண்டன் வீகெண்ட் ஆகிய இரு பெரும் நிறுவனங்களில் பணியாற்றியவர். அவருக்கு அங்கே பத்து வருட காலப் பணி அனுபவமும் இருந்தது. ஆனால் இந்தியா ஊடகங்களின் வழியாக அரசியல்வாதிகளை நேர்காணல் செய்யத் தொடங்கியதில் இருந்துதான் அவரது அடையாளமும் வளர்ந்தது. அன்றைய பிரதமர் நரசிம்மராவ், பாகிஸ்தான் பிரதமர் பெனாசிர் பூட்டோ, மறைந்த ஜனாதிபதி வெங்கடராமன், சிவசேனா தலைவர்  பால் தாக்ரே பேட்டி என அவர் நேர்காணல் காணாத அன்றைய தலைவர்களே இல்லை எனலாம்.
ஆப்கானிஸ்தான் போர் நிலவரங்களை நேரலையில் ஒளிபரப்பியது, தான் பிறந்து வளர்ந்த மாநிலமான காஷ்மீர் பற்றிய பிரச்னைகளின் மீதான ஆழ்ந்த விசாரணை அணுகுமுறைகள் குறித்த செய்தித் தொகுப்புகளை எடுத்து ஒளிபரப்பினார். பின்னாளில் சி.என்.என், சி.என்.பி.சி, பி.பி.சி, இந்தியா டுடே உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றியபோது மோடி, ஜெயலலிதா, ராம் ஜெத்மலானி உள்ளிட்டவர்களை பேட்டி எடுத்தபோது அவர்கள் பேட்டியிலிருந்து பாதியிலேயே எழுந்து செல்லும் நிலைக்கு ஒரு வித வீச்சுடன் கேள்விகளைத் தொடுத்தவர் கரண் தபார்.அவரின் பாணியே பிற்காலத்தில் செய்தி ஊடகத்துறையில் பலர் பின்பற்றிய அடையாளமாகவும் இருந்தது. 
கரணும் நிஷாவும்!
அவரது பெரும்பாலான பேட்டிகள் பாதியில் நின்று போனது போலவே, அவரது வாழ்வின் வசந்த காலமும் பாதியிலேயே முடிந்தது. 80-களில் லண்டனில் தங்கி இருந்தபோது, அங்கு வங்கி ஊழியராக வேலைபார்த்த நிஷாவை காதலித்தார் கரண். இரு வருடங்கள் ஒன்றாக வாழ்ந்தவர்கள்,  பிறகு கிறிஸ்தவ முறைப்படி அங்கேயே திருமணம் செய்துகொண்டனர். அவர்களது திருமண வாழ்க்கை பத்து ஆண்டுகள் மட்டுமே நிலைத்தது. 91-ல் ’என்செபாலிடிஸ்’ எனப்படும் மூளை வீக்க நோயால் பாதிக்கப்பட்டு லண்டன் மருத்துவமனையில் இறந்து போனார் நிஷா. கரண் லண்டனிலிருந்து இந்தியாவுக்குத் திரும்ப நிஷாவின் இறப்பும் ஒருகாரணம். 
பெனாசிர் உடனான நட்பு
கரண் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் படிப்பு படித்து வந்த காலத்தில் கேம்பிரிட்ஜின் ஆசிய கூட்டமைப்பின் துணைத்தலைவராக இருந்தவர் பெனாசிர். அப்போது தொடங்கி பெனாசிருடன் கரண் நல்ல நண்பராக இருந்தார். கரணின் மனைவி நிஷா இறக்கும் தருவாயில் கரணுக்கு இரண்டு நாட்களுக்கு ஒரு முறையாவது அழைப்பு விடுத்து நிஷாவின் நிலைமை பற்றி கேட்டுவிட்டு கரணுக்கு மன தைரியம் அளித்துவந்திருக்கிறார். பெனாசிர் கொலை செய்யப்பட்டு இறக்கும் தருவாய் வரை அவர்களது நட்பு நீடித்தது.“பிழைப்பின் அடிப்படையில் நாம் இருவரும் வெவ்வேறு துருவங்கள் என்றாலும். தனிப்பட்ட முறையில் நாம் நல்ல நண்பர்கள்” என்று பலமுறை கரணிடம் கூறிவந்திருக்கிறார் பெனாசிர், இந்தியா-பாகிஸ்தான் நாடுகளிடையேயான தேசிய அரசியலில் பல முரண்கள் இருந்தாலும் இருநாட்டு மக்களிடையே இழையோடும் மெல்லிய நட்பைப் போன்று இவர்களது இழையோடி இருந்திருக்கிறது.
கரண் மீது எழுந்த விமர்சனங்கள்!
தனி மனித அடையாளங்களைத் தொடர்ந்து எழும் விமர்சனங்கள் என்றுமே தவிர்க்க முடியாதது. அந்த வகையில் கரண்தபார் மீதும்விமர்சனங்கள் எழாமல் இல்லை. தபாரின் தந்தை எல்லையில் ராணுவ வீரராக இருந்தவர். கூடவே காங்கிரஸ் ஆதரவாளரும்கூட அதனால் கரணும் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர் என்கிற பிம்பம் எழுந்தது. மேலும் பேட்டிகளின்போதே தலைவர்கள் அவர் மீது தீவிர விமர்சனங்களை முன்வைத்தார்கள்.  பால்தாக்ரே தனது ஒரு பேட்டியில் "நீங்கள் எதிரில் இருப்பவரை வில்லனாகச் சித்தரிக்கத் தெரிந்தவர் என்றார். ராம் ஜெத்மலானி "நீங்கள் என்றுமே திருந்தப் போவதில்லை" என்று காட்டமாக விமர்சனம் செய்துவிட்டு தன் வீடு என்பதுகூட நினைவில் இல்லாமல் பேட்டி அறையை விட்டு வெளியேறினார். "உங்களைச் சந்திப்பது என்றுமே எனக்கு மகிழ்ச்சி இல்லை" என்று கூறிவிட்டு வேகமாக தலைமைச் செயலகத்தை விட்டு வெளியேறினார் ஜெயலலிதா. இப்போது, இன்போடைன்மெண்ட் என்னும் தன்னுடைய நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனம் வழியாக தான் வேலைபார்த்த அனைத்து தொலைக்காட்சிகளுக்கும் நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்குகிறார்.  
வெறுத்தாலும் புகழ்ந்தாலும் அரசியல்வாதிகளால் தவிர்க்க முடியாத,  ஊடகம் தாண்டிய ஒரு தனி நபர்தான் கரண் தபார்.

விவசாயி மகனின், வித்தியாசமான விவசாய கண்டுபிடிப்பு!

Written By DevendraKural on Tuesday, 7 July 2015 | 22:43

விவசாயி மகனின், வித்தியாசமான விவசாய கண்டுபிடிப்பு!"இந்தியாவில் டாய்லெட்களின் எண்ணிக்கையைவிட, மொபைல் போன்களின் எண்ணிகை அதிகமாகி விட்டது. இதை வைத்து ஆக்கப்பூர்வமான பல விஷயங்களை உருவாக்க முடியும். அதில் ஒன்றுதான் மொபைல் போன்களை வைத்து இயக்கக்கூடிய இந்த கண்டுபிடிப்பு" என்கிறார் ஐரோப்பிய அணு ஆராய்ச்சி கழகத்தின் விஞ்ஞானி முனைவர் விஜயராகவன்.
இவர் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்து, முறையாக படித்து, இன்று வெளிநாட்டில் ஆராய்ச்சி விஞ்ஞானியாக பணிபுரிந்து வருகிறார். இருந்தாலும் பிறந்த ஊரில் விவசாயிகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற உந்துதலோடு விவசாயம் சம்பந்தமான புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளார். இந்த கண்டுபிடிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டால் விவசாயத்தில் பல வேலைகள் எளிதாகிவிடும். இன்று செல்போனை வைத்துக் கொண்டு, பல வேலைகளை இருக்கும் இடத்திலிருந்து இயக்கி கொண்டிருக்கிறோம். அதுபோன்று விவசாய பணிகளையும் செய்ய முடியும் என்கிறார் விஜயராகவன் விஸ்வநாதன். செக் குடியரசு நாட்டிலிருந்து தொலைபேசி வாயிலாக நமக்கு அளித்த பேட்டியிலிருந்து,

"எனக்கு சொந்த ஊரு விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம். எங்கப்பா விஸ்வநாதன் தென்னை மர விவசாயி. எட்டாவது வரைக்கும்தான் படிச்சிருக்கார். அதனால எல்லா அப்பாக்கள் மாதிரியும் புள்ளைங்கள நல்லா படிக்க வைக்கணுங்கற, கனவு அவருக்கு உண்டு. அதனால அக்கா, நான், தங்கச்சி மூன்று பேரையும் முதுநிலை பட்டதாரிகள் ஆக்கியுள்ளார். இவ்வளவுக்கு அவருக்கு வங்கி கணக்கில் பணம் செலுத்தக்கூட தெரியாது. ஆனால், எங்கள பட்டப்படிப்பு படிக்க வைக்கிறதில ரொம்ப அக்கறை எடுத்துக்கிட்டார். பனிரெண்டாவது முடிச்சிட்டு கோவை, அமிர்தா இன்ஜினீயரிங் கல்லூரியில எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் பாடத்தை எடுத்து படித்தேன்.
கல்லூரியில் நுழையும்போது எனக்கு ஆங்கில மொழியறிவு குறைவாகத்தான் இருந்தது. வகுப்பில் பாடங்கள் ஆங்கிலத்தில்தான் நடக்கும். ஆசிரியர்கள் கேள்விகள் கேட்டால் கண்ணில் தானாகவே நீர் வழியும். கூனி குறுகி நிற்பேன். மொழி பிரச்னையால் முதல் செமஸ்டரில் நான் பெற்ற மதிப்பெண்ணும் குறைவுதான். பிறகு ஆங்கில பேராசிரியர் மினி மேனன், ஆங்கிலத்தை பேசுவதற்கு உதவினார். இரண்டாம் ஆண்டில் குடும்ப கஷ்டத்தால் படிக்க முடியாத நிலை. படிப்பை அப்படியே நிறுத்திக் கொள்ளலாமா? என்று இருந்தேன். அப்போதுதான் பி.வி.கோபி என்ற பேராசிரியர் மூலம் ஸ்காலர்ஷிப் கிடைக்கப்பெற்று, மீண்டும் படிப்பை தொடர்ந்தேன். முதலில் என்னை யாரும் சட்டையே செய்யவில்லை. இருந்தாலும் கிடைத்த ஒவ்வொரு செமஸ்டரிலும் என்னுடைய திறமையை வெளிப்படுத்திக் கொண்டிருந்தேன். இன்ஜினீயரிங் படித்த 4 ஆண்டுகளில் 1 நாள் கூட விடுமுறை எடுத்தது கிடையாது. ஏன்? 1 மணி நேரம் தாமதாமாககூட வந்தது கிடையாது. கல்லூரி இறுதியாண்டின்போது, 100 சதவிகித வருகை பதிவேட்டுக்காக பாராட்டினார்கள். இன்ஜினீயரிங் கடைசி செமஸ்டரில் 88 சதவிகித மதிப்பெண். மொத்தமாக 79 சதவிகித மதிப்பெண்களுடன் வெளியே வந்தேன்.

கல்லூரியில் 3ம் ஆண்டில் நடந்த கேம்பஸ் இண்டர்வியூவில் எல் அன் டி நிறுவனத்தின் வேலைக்கு தேர்வானேன். இதற்கிடையில, மேலும் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளுக்குள் தகித்துக் கொண்டிருந்தது. ஒரு ஜெர்மன்காரர் வெளிநாட்டில் இருக்கும் படிப்புகளை பற்றியும், அதற்கு கிடைக்கும் ஸ்காலர்ஷிப் பற்றியும் கல்லூரியில் பேசினார். அதை பற்றி தெரிந்து கொண்டு 2007ல் ஸ்காலர்ஷிப் மூலமாக வெளிநாட்டில் படிக்க முயற்சி பண்ண ஆரம்பிச்சேன்.

வெளிநாட்டு படிப்புக்கு ஸ்காலர்ஷிப் இருந்தாலும், படிச்சி முடிச்சி வர்றதுக்கு அன்றைய நிலவரப்படி 15-20 லட்சம் ஆகும்னு சொன்னாங்க. அப்போ கோவை, ராஜபாளையம்னு பல வங்கிகளை கல்வி கடனுக்காக அணுகினோம். எந்த வங்கியிடமிருந்தும் சரியான பதிலே இல்லை. ‘உன் பேர்ல என்ன இருக்கு? நீ கடனை வாங்கிட்டு வெளிநாட்டு போயிட்டா பணத்தை யார் கட்டுவது?’ என்று பல கேள்விகள் கேட்டார்கள். அப்போதுதான் புரிந்தது வங்கிக் கடன்களுக்கும், நாம் வாங்கும் மார்க்குக்கும் சம்பந்தமில்லை என்பது.

அந்த நேரத்துல சென்னை, எழும்பூரில் இருக்கிற டபில்யூ யு எஸ் (வேர்ல்டு யுனிவர்சிட்டி சர்வீஸ்)க்கு அடிக்கடி வருவேன். அங்கே தங்கி, வெளிநாட்டு படிப்புகள், அதற்கான ஸ்காலர்ஷிப், எங்கெங்கு என்னென்ன கல்லூரிகள் என்பது பற்றி தேடுவேன். பல முயற்சிகள், தேடல்களுக்கு பிறகு இந்தோ-இத்தாலி 100 சதவிகித ஸ்காலர்ஷிப் மூலம் செப்டம்பர் 2007-ல் இத்தாலியில் படிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. இதற்கு எங்க மாமா ஜெயராமன் உட்பட பலரும் உதவி செய்தனர். அதிகம் வெளியில் போகாதவன், இத்தாலியில் என்னமாதிரியான சூழல் நிலவும் என்பது கூட தெரியாமல் போய் மிலன் நகரில் இறங்கி விட்டேன். அங்கு குளிர் வாட்டி எடுத்தது. என்னிடம் குளிருக்கு போட்டுக்கிற ஜாக்கெட் கூட இல்ல. பணம் பற்றாக்குறையால் வாங்காமல் இருந்தேன். அதனால நிமோனியா காய்ச்சல் வந்துடுச்சு. இதை பார்த்த ஒரு சீன மாணவர் அவருடைய ஜாக்கெட்டை கொடுத்து உதவினார்.
முன்னாள் ஜனாதிபதி, விஞ்ஞானி அப்துல் கலாம் ‘இனி வரும் காலங்களில் நேனோ டெக்னாலஜி முக்கிய வரவேற்பை பெரும்’ என்று பல கூட்டங்களில் பேசியிருக்கிறார். அதை வைத்து ‘மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் அன்டு நேனோ டெக்னாலஜி’ என்ற 2 ஆண்டு படிப்பை தேர்ந்தெடுத்தேன். இத்தாலி, பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து என்று மாறி மாறி வகுப்புகள் நடக்கும். இரண்டாண்டு முடிவில் 110க்கு 108 மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றேன்.

பிறகு நானோ எலக்ட்ரானிக்ஸ், 3டி வடிவமைப்போடு கூடிய படங்கள் எடுக்கக்கூடிய கேமராக்கள் உற்பத்தி குறித்து பி.எச்.டி. படிக்க ஆரம்பிச்சேன். இதற்கு பிரெஞ்சு அரசு, கல்வி நிறுவனம், தொழிற்சாலைகளின் கூட்டு முயற்சியோடு இந்த படிப்பு தொடர்ந்தது.

இந்த நேரத்தில் ஐரோப்பிய கமிஷன் மூலம் ஐரோப்பிய அணு ஆராய்ச்சி கழகம் (சிஇஆர்என்) ஒரு ப்ராஜக்ட்டை அறிவித்தது. அதாவது அட்வான்ஸ் ரேடியேஷனை கண்டறிவது பற்றிய ப்ராஜக்ட். இதற்கு பகுதி நேரமாக ஆராய்ச்சி வேலைகளில் ஈடுபடுவதற்கு விண்ணப்பித்து இருந்தேன். இந்த நேரத்தில் லேட் நைட்டில் வந்து படிப்பேன். மீண்டும் அதிகாலையில் எழுந்து பணிக்கு சென்று விடுவேன். 2012, அக்டோபரில் பி.எச்.டி. படிப்பை முடித்தேன். அப்படியே சி.இ.ஆர்.என்னில் ஆராய்ச்சி வேலைகள் தொடர்ந்துகிட்டிருந்தது. அந்த நேரத்தில் ராஜபாளையத்துக்கு ஒருமுறை வந்திருந்தேன். தண்ணீர் பற்றாக்குறை, தண்ணீரில் சுவை குறைவு, அதிக ரசாயன உரங்கள் பயன்பாடு ஆகியவை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்ததை பார்த்தேன். இதுதான் விவசாயம் குறித்து என்னுடைய ஆராய்ச்சியை தூண்டியது. தொடர்ந்து விடுமுறை நாட்களில் இந்த ஆராய்ச்சிக்காக தனியாக வேலை செய்தேன்" என்றவர் அந்த கண்டுபிடிப்பை பற்றியும் பேசினார்.

"ஸ்மார்ட் அக்ரி (நேர்த்தியான விவசாயம்) என்ற பெயரில் இதை ஆய்வு செய்து வருகிறேன். அதாவது நிலத்திலுள்ள மண்ணின் கீழ் சென்சாரை வைத்துவிட வேண்டும். இந்த சென்சார் பூமிக்கு அடியில் இருக்கும் மண்ணின் ஈரப்பதம், வெப்பநிலை, கார-அமில நிலை (பி.எச்.) ஆகியவற்றை அளந்துவிடும். இந்த சென்சாரிலிருந்து வரும் தகவல்கள் பண்ணையிலேயே கிணற்றுக்கு அருகில் வைக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாட்டு அறைக்குள் இருக்கும் ஜி.எஸ்.எம். மோடத்துக்கு வந்துவிடும். மோடத்திலிருந்து செல்போன் டவர் மூலமாக சர்வருக்கு செல்லும். சர்வரிலிருந்து கம்ப்யூட்டருக்கு வந்துவிடும். கம்ப்யூட்டரிலிருந்து நம்முடைய மொபைல் போனுக்கு தகவல்கள் வந்தடையும். இதெல்லாம் ஒரு சில நொடிகளில் நடந்துவிடும்" என்றவர் இதனால் ஏற்படும் பலன்களை பற்றியும் சொன்னார்.
"இப்போது இந்தியாவில் மழையளவு, வெப்பநிலை, காற்றின் ஈரப்பதம் ஆகியவற்றை அளந்து காட்டும் காலநிலை அறியும் கருவி பயன்படுத்தப்படுகிறது. ஆனால், பூமிக்கடியில் தகவல்களை சேகரித்து கொடுக்கும் கருவி அறிமுகப்படுத்துவது இதுவே முதல்முறை. பூமிக்கடியில் இணைப்பின் மூலம் செயல்படுவது இந்த கருவியின் சிறப்பு. இந்த கருவியின் மூலம் மண்ணில் உள்ள ஈரப்பதத்தை அறியும்போது, அந்த நிலத்துக்கு ஈரத்தை பொறுத்து எவ்வளவு தண்ணீர் கொடுக்கலாம் என்பதை முடிவு செய்து கொள்ளும். அதாவது ஏக்கருக்கு 10 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது என்றால், ஈரப்பதத்தை பொறுத்து 5 ஆயிரம், 7 ஆயிரம், 3 ஆயிரம் லிட்டர் தண்ணீரை கொடுக்கலாம். இதனால் மோட்டாரை இயக்கும் மின்சாரத்தின் அளவும் குறையும். அதேமாதிரி மண்ணின் வெப்பநிலையை அறிந்து அதற்கேற்ப தண்ணீரை அதிகம் கொடுக்க வேண்டிய பயிர்களுக்கு கொடுக்கலாம். இதனால் பயிர்கள் வாடிப்போவதை தவிர்க்கலாம். கார-அமில நிலையை அளவிடும்போது, மண்ணுக்கு என்ன சத்துக்கள் பற்றாக்குறையாக உள்ளதோ, அதை மட்டும் கொடுத்தால் போதுமானது. அதாவது உரம், யூரியாவை தேவைக்கேற்றாற் போல் கொடுத்து அளவிட முடியும்.

இந்த தகவல்களை வைத்து, ஒரு பண்ணையை நிர்வகிக்க கூடிய முடிவுகளை நாம் இருக்கும் இடத்திலிருந்தே கையாள முடியும். இன்று இந்தியாவின் முக்கிய பிரச்னை தண்ணீரும், உரங்களும்தான். இந்திய அரசு உரங்களுக்கென்று பல ஆயிரம் கோடிகளை ஆண்டுதோறும் செலவு செய்து வருகிறது. விவசாயிகளும் மண்ணுக்கு தேவையோ, இல்லையோ உரங்களை கொட்டி வருகிறார்கள். நல்ல மண் என்று தெரிந்தால் எதற்கு உரங்களை கொட்டவேண்டும். ஓரளவு வளமான மண்ணுக்கு உரங்களின் அளவையாவது குறைத்து கொள்ளலாம் இல்லையா? தண்ணீர் வளமுள்ள மண்ணுக்கு குறைந்தளவு தண்ணீர் கொடுத்து, தண்ணீர் இல்லாத பகுதிக்கு தண்ணீரை வழங்க முடியும்.

ஸ்விட்சர்லாந்தின் கிளைமேட்-கிக் என்ற அமைப்பு புதுமையான கண்டுபிடிப்பு என்று அங்கீகரித்திருக்கிறது. இதன் மூலம் மண்ணில் கார்பனின் அளவை குறைக்க முடியும் என்று அறிவுறுத்தியிருக்கிறது. இதுகுறித்து மேன்மேலும் ஆராய்ச்சிகள் தொடர நிதிவுதவியும் அளித்து வருகிறது.
ஐரோப்பா மற்றும் பிற நாட்டினர் பங்குபெற்ற ஸ்விஸ் நேஷனல் வர்த்தக போட்டியில் இந்த கண்டுபிடிப்புக்காக முதல் பரிசை பெற்றுள்ளேன். இது ஆய்வுக்கூட வேலை மட்டும் அல்ல. இது நடைமுறையில் செயல்படுத்தக்கூடியது என்று இதில் கலந்து கொண்ட ஜூரிகள் தெரிவித்திருக்கிறார்கள். ஜப்பான், டோக்கியோ பல்கலைக் கழகத்தில் இதுகுறித்து மாணவர்களிடத்தில் விளக்கியுள்ளேன்.

இந்தாண்டு ஐ.நா. சர்வதேச தொலைதொடர்பு துறை 150 ஆண்டு விழாவை கொண்டாட இருக்கிறது. அதையொட்டி 150 இளம் விஞ்ஞானிகளை உலகம் முழுவதுமிருந்து தேர்ந்தெடுத்திருக்கிறது. இதில் முதல் 15 இளம் கண்டுப்பிடிப்பாளர்களில் நானும் ஒருவன்.

நிறைய வெளிநாட்டு கம்பெனிகள் இந்த கண்டுபிடிப்பை நடைமுறைப்படுத்த ஆர்வம் காட்டி வருகிறது. கடந்த ஜனவரி மாதம் இதுகுறித்து இந்தியாவிலும் பேசியிருக்கிறேன். ஆராய்ச்சி நிலையிலிருந்து, கருவியை உருவாக்கிவிட்டோம். அடுத்து கள ஆய்வு சோதனை மட்டுமே இருக்கிறது. இந்த கருவியை 40-50 ஆயிரம் ரூபாய்க்குள் வாங்கி செயல்படுத்தக் கூடியதாக இருக்கும். ஆனால், இதன் நன்மைகள் பன்மடங்கு. இந்திய அரசு மனது வைத்து உதவினால் இதை விரைவில் நடைமுறைப்படுத்துவிட முடியும். அரசுக்கும், விவசாயிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். இந்த அங்கீகாரம், விருதுகள் எனக்கு மட்டுமல்ல. என்னோடு பணிபுரியும் குழுவினருக்கும் பங்கு உண்டு. இந்த தொழில்நுட்பம் விவசாயிகளை சென்றடைய வேண்டும் என்பதே என் குறிக்கோள்" என்று சத்தமில்லாமல் சொல்லி முடித்தார் இந்த சாதனை மனிதர்.

'அன்றைக்கு தேவைப்பட்ட பிராபகரன் இன்றைக்கு தேவைப்படவில்லையா?' - ஆவேச சீமான்

Written By DevendraKural on Saturday, 6 June 2015 | 03:53

'அன்றைக்கு தேவைப்பட்ட பிராபகரன் இன்றைக்கு தேவைப்படவில்லையா?' - ஆவேச சீமான்
நாகை மாவட்டம், வேளாங்கண்ணியை அடுத்த தெற்கு பொய்கைநல்லூரில் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து நிறுவிய  விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் சிலையை காவல்துறையினர் நேற்று இரவோடு இரவாக அகற்றினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ்  உள்ளிட்ட தலைவர்கள் தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். 

பிரபாகரன் சிலை விவகாரம் ஒருபுறம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்க, இதே பிரபாகரன் படம் அண்மையில் திருச்சியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் மாநாட்டில் வைக்கப்பட்ட நிலையில், அதனையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினார்கள். 

இரண்டு நிகழ்வுகளும் அடுத்தடுத்து நடந்துள்ள நிலையில், தேர்தல் பிரசாரத்தின்போது வாக்கு கேட்டபோது அதிமுகவுக்கு தேவைப்பட்ட பிரபாகரன் படம், இப்போது ஆட்சியில் இருக்கும்போது தேவைப்படவில்லையா? என்று ஆனந்த விகடனுக்கு அளித்துள்ள பேட்டியில் பொங்கி தீர்த்துள்ளார். 

''வாரிசு அரசியல் பின்னணியோ, அரசியல் கட்சிப் பின்புலமோ இல்லாமல், முதல் தலைமுறையாக சாதாரண ஒரு கிராமத்தில் இருந்து வந்த என்னை, பொதுவெளியில் களமாடவைத்தது ஈழ அரசியல். ஈழப் படுகொலைகளில் இருந்து பிறந்தவர்கள் நாங்கள். இந்த மண்ணில் தமிழ்த் தேசிய அரசியலின் தேவையை உணர்ந்து, 'நாம் தமிழர் கட்சியை உருவாக்கினோம். சில காலமாகவே முதல் மாநாட்டுக்கான வேலைகளைத் திட்டமிட்டுக்கொண்டு இருந்தோம். மாநாட்டுக்கு ஏக அரசுக் கெடுபிடிகள். கடைசி நேரத்தில் தலைவர் பிரபாகரனின் படங்களை அப்புறப்படுத்தினார்கள்.
இதே பிரபாகரனின் படத்தின் கீழ் நின்று வாக்குகள் கேட்டபோது, அதை வரவேற்றது அ.தி.மு.க அரசு. அன்றைக்குத் தேவைப்பட்ட பிரபாகரன், இன்றைக்கு ஆட்சியாளர்களுக்குத் தேவைப்படவில்லை. அவை அனைத்தையும் சமாளித்துச் சாகசம் நிகழ்த்தியிருக்கிறார்கள் எங்கள் பிள்ளைகள். லட்சம் இளைஞர்கள் திருச்சியில் திரள, பிரபாகரன் என்ற பெருநெருப்பே காரணம்'' என்று கூறிய சீமான் தொடர்ந்து அளித்த பேட்டியின் சில முக்கிய பகுதிகள் இங்கே... 

தேர்தல் நெருங்கும் சமயம், கூட்டம் திரட்டி தேர்தல் போட்டியில் இடம்பிடிப்பதுதான் உங்கள் மாநாட்டின் நோக்கமா?

கருணாநிதியை தீவிரமாக விமர்சிக்கும் அளவுக்கு நீங்கள் அ.தி.மு.க அரசையோ, முதலமைச்சர் ஜெயலலிதாவின் செயல்பாடுகளையோ விமர்சிப்பது இல்லையே... ஏன்?

''கருணாநிதி, ஜெயலலிதா... இருவரையும் சமஅளவில் வைத்துதான் விமர்சிக்கிறோம். என்னுடைய நான்கு ஆண்டு காலப் பேச்சில் அம்மையாரையும் சாடியிருக்கிறேன். இப்போது தனித்துப் போட்டியிடுவதே ஜெயலலிதாவுக்கு எதிரான நிலைப்பாடுதானே? கடந்த 50 ஆண்டு கால தமிழ்நாடு அரசியலின் மையம் கருணாநிதி என்பதால், அவர் மீதான விமர்சனங்கள் தீவிரமாக இருக்கின்றன. கருணாநிதி மட்டும் காமராஜர், கக்கன் போல இருந்திருந்தால், எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் தமிழ்நாட்டு அரசியலில் உருவாகியே இருக்க மாட்டார்கள்.''

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுவிக்கப்பட்டிருப்பது, முன் எப்போதும் இல்லாத பலத்த விவாதங்களைக் கிளப்பியிருக்கிறதே... அந்தத் தீர்ப்பு பற்றி உங்கள் பார்வை என்ன?
''அது எப்படி, தீர்ப்பு சரியா... தப்பா என நாம் சொல்ல முடியும்? சட்டம் படித்த மேதைகள் அந்தத் தீர்ப்பை விமர்சிக்கிறார்கள். நான் இந்த அமைப்பையே மாற்ற வேண்டும் எனப் போராடுகிறேன். இந்தியாவே விற்பனைப் பண்டமாகிவிட்ட நிலையில், நீதியும் விற்கப்படுவதில் ஆச்சர்யம் இல்லை. அதனால் இந்த வழக்கு, அது தொடர்பான தீர்ப்பு பற்றி நான் பேசுவது சரியாக இருக்காது.''


திருச்சி மாநாட்டில் ஹிட்லர் படம் வைத்திருந்தீர்களே... என்ன காரணம்?

''அந்தப் படத்தை ஆர்வத்தில் சில தம்பிகள் வைத்துவிட்டார்கள். வழிகாட்டும் தலைவர்கள் படத்தில், புத்தர் படம்கூட வைத்திருந்தார்கள். நேற்று இலங்கையிலும் இன்று பர்மாவிலும் புத்தரின் பெயரால்தான் சிறுபான்மை மக்களை அழித்தொழிக்கிறார்கள் அதற்காக புத்தரை ஃபாசிஸ்ட் எனச் சொல்ல முடியுமா? மாநாடுகளில் வைக்கப்படும் விளம்பரப் பலகைகளை வைத்து அரசியல் முத்திரை குத்தத் தொடங்கினால், எல்லா அரசியல் கட்சிகளைப் பற்றியும் இப்படி ஆயிரம் அபத்தங்களை அடுக்க முடியும்.''

'சீமான், முருகன் வழிபாட்டில் தொடங்கி ஹிட்லர் வழிபாடு வரை செய்துகொண்டிருப்பதற்கு ஒரே காரணம் ஈழம் பிசினஸ் படுத்ததுதான்’ என்கிறாரே தி.மு.க முகாமைச் சேர்ந்த எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன்?

''எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன் பிசினஸ் செய்யும் கட்சியான தி.மு.க-வில் இருந்துகொண்டு இதைப் பார்த்தால்,  பிழையாகத்தான் தெரியும். தி.மு.க என்பது, கட்சி அல்ல; ஒரு தொழில்நிறுவனம். தேர்தல் நேரத்தில் நிதி கேட்பார்கள். வேட்பாளர் தேர்வு நேர்காணலின்போது, 'கட்சிக்கு எவ்வளவு நிதி கொடுப்பாய்?, தொகுதிக்கு எவ்வளவு செலவு செய்வாய்?’ என்றுதான் கேட்பார்கள். இப்படி தேர்தலை வைத்துத் தொழில் செய்யும் ஒரு கட்சியைச் சேர்ந்தவர், அனைத்தையும் வணிகமாகத்தானே பார்ப்பார். இத்தனைக்கும் ஈழத்தை வைத்து வியாபாரம் செய்ததே தி.மு.க-தான். ஆனால், ஈழத் தமிழர்களுக்கு தி.மு.க செய்த துரோகங்களால் அதன் ஈழ வியாபாரம் படுத்துவிட, இப்போது கடையைத் தொடர்ந்து நடத்த முடியாமல் டெசோ என்ற டம்மி அமைப்பைத் தூக்கிக்கொண்டு கிளம்பிவிட்டார்கள்.

நான் ஹிட்லரை வைத்திருப்பது இருக்கட்டும். தி.மு.க தலைவர் தன் மகன் கருணாநிதிக்கு 'ஸ்டாலின்’ என ஏன் பெயர் வைத்தார்? 'ஸ்டாலின் ஒரு ஃபாசிஸ்ட்’ எனச் சிலர் சொல்கிறார்களே. மனுஷ்ய புத்திரன் இது பற்றி கேட்டுச் சொல்லட்டும். அப்படியே, கலைஞர் தொலைக்காட்சியில் ஹிட்லர் தொடரை ஏன் ஒளிபரப்பினார்கள் என்றும் கேட்டுச் சொல்லட்டும்.''

தமிழ்நாட்டை தமிழன் ஆட்சி செய்தால், அதன் பிரச்னைகள் சரியாகிவிடுமா?

''சரி நான் கேட்கிறேன்... தமிழ்நாட்டை தமிழன் ஆட்சி செய்யவில்லை என்றால், அனைத்துப் பிரச்னைகளும் தீர்ந்துவிடுமா? நாங்கள் ஆந்திராவையோ, கேரளாவையோ, கர்நாடகத்தையோ ஆள வேண்டும் எனச் சொல்லவில்லையே. எங்கள் அமைப்புக்கு 'நாம் திராவிடர்’ எனப் பெயர் வைத்திருந்தால், சீமான் நல்லவனாகியிருப்பானா? 'நாம் தமிழர்’ என்ற பெயர்தான் இங்கு பிரச்னையா?

ஆனால், ஆந்திராவில் என்.டி.ஆர் கட்சி தொடங்கும்போது 'திராவிட தேசம்’ என்றா பெயர் வைத்தார்? 'தெலுங்கு தேசம்’ எனத்தானே பெயர்வைத்தார்! இதெல்லாம் யாருக்கும் பிரச்னை இல்லை. அரசியலாகத்தான் தெரியும். ஆனால், நாங்கள் தமிழ்த் தேசியம் பேசினால், அது பக்கவாதமாகவும் முடக்குவாதமாகவும் இருக்கும். ஆக, அனுபவங்களின் அடிப்படையில் சொல்கிறேன்... உணர்வுள்ள தமிழன் வந்தால், இங்கு எல்லாம் சரியாகிவிடும். இதை நான் சத்தியம் செய்து சொல்கிறேன். அதற்குத்தான் வாய்ப்பு கேட்டு வருகிறோம். ஏனென்றால், நாங்கள் தேர்தல் கூட்டணியில் இருந்து விலகி நிற்கிறோம். அதனால் அற்ப தேர்தல் நலன்களுக்காகக் கட்சிகளிடம் சரணடையும் தவறை, நாங்கள் செய்ய மாட்டோம்.''

திராவிடம் என்ற வார்த்தையோ, திராவிடர் என்ற அடையாளமோ, இன்றைய காலச்சூழலுக்குப் பொருந்தவில்லையா?

''எந்தக் காலத்துக்கும் பொருந்தவில்லை; அதற்கான தேவையும் இல்லை என்பதே எங்கள் நிலைப்பாடு. மலையாளிகள், கன்னடர்கள், தெலுங்கர்கள்... யாரும் தங்களை திராவிடர்களாக அடையாளப்படுத்தாதபோது, நமக்கும் அது தேவை இல்லை என்றே சொல்கிறேன். உடனே, 'தமிழன் என்று சொன்னால், பிராமணர்களும் தமிழன் என்று நம்மோடு வந்துவிடுவான்’ என்கிறார்கள் ஒரு தரப்பினர். நாங்கள் கட்சி தொடங்கி நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுவரை ஒரு பிராமணர்கூட 'நானும் தமிழன்தான்’ என வரவில்லை. ஆனால், அவர்கள் திராவிட இயக்கங்களில் இணைந்திருக்கிறார்கள். ஆக, தமிழர்களின் மான உணர்வைச் சிதைத்து ஐயாவின் காலில் விழும், அம்மா பயணிக்கும் ஹெலிகாப்டரின் நிழலில் விழுந்து வணங்கும் அடிமை அரசியலைத்தான் திராவிடம் இங்கே கொண்டுவந்தது.''
 
டி.அருள் எழிலன்
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்