Home » » பீத்தோவனின் மன வலிமை

பீத்தோவனின் மன வலிமை

Written By DevendraKural on Tuesday, 29 July 2008 | 22:54


நிழலாகத் தொடர்ந்த சோகத்திலும், அதை வென்று சாதனை படைத்த மனிதர்ஒருவர் இருந்திருக்கிறார். சரித்திரத்தில் இடம் பிடித்து இன்று பலருடைய மனதிலும்அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.அவர்தான் இசை மேதை பீத்தோவன்!


உலக சரித்திரத்தில் இடம் பிடிப்பது என்பது என்ன சாதாரணமான விஷயமா?சாதித்துக் காட்டினால் அல்லவா சரித்திரம் வசப்படும்!உலக இசை மேதைகளுக்கான தர வரிசையில் இன்றைக்கும் அவர் இரண்டாவதுஇடத்தில்தான் இருக்கிறார்.(முதல் இடம் மொசார்ட்டிற்கு)
பீத்தோவனுக்கு விதி அவரைப்பல முறை காயப்படுத்தியது ,ஆமாம்! ஒரு முறை தன் உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றவர், இசையின் மேல்தான் கொண்ட தீராத காதலால் மரணத்தின் விளிம்புவரை சென்றுவிட்டுத் திரும்பியிருக்கிறார்.கொடிது, கொடிது இளமையில் வறுமை என்பார் அவ்வையார்.
பீத்தோவனுக்குஇளம் வயதில் பசியே பாடமாகவும், வறுமையே வாய்ப்பாடாகவும், இருந்திருக்கிறது.ஒருபக்கம், தினமும் குடித்துவிட்டு அகால நேரங்களில் வீட்டுக்குத் திரும்பிவந்துஅனைவரையும் அடித்துத் துவைக்கும் தந்தை. மறுபுறம், ஏழு குழந்தைகளைப்பெற்றுஅதில் மூன்று குழந்தைகளை வறுமைக்குத் தாரைவார்த்துவிட்டு, மிச்சம் இருக்கும்குழந்தைகளுடன் போராடிக்கொண்டிருக்கும் தாய் மரியா.சந்தோஷத்தையே அறியாத வாழ்க்கை!பீத்தொவனின் தந்தை ஜோஹன் ஜெர்மெனி நாட்டின் பான் (Bonn) நகரில் இருந்தஇசை அரங்கம் ஒன்றில் வாத்தியக்காரராகப் பணியாற்றிக் கொண்டிருந்திருக்கிறார்.அது ஒன்றுதான் சற்று ஆறுதலான விஷயம்.
தன் தந்தையிடம், அவர் நல்ல மனநிலையில் இருக்கும்போது பியானோ வாசிக்கக் கற்றுக்கொண்ட பீத்தோவன்,தன்னுடைய எட்டாவது வயதிலேயே தனிக் கச்சேரி செய்யும் அளவிற்கு இசையில்ஒரு மேதைத்தனத்தை எட்டிப்பிடித்திருக்கிறார்17.12.1770 ஆம் ஆண்டு பிறந்த பீத்தோவன், தனது 20வது வயதில் ஜெர்மெனியைவிட்டுக் குடிபெயர்ந்து, வீயன்னா நகருக்குத் (Vianna, Austria) தன் நண்பன் ஒருவனுடன்போய்ச்சேர்ந்திருக்கிறார்.
அங்கே பல அரங்கங்களில் வாசித்ததோடு, இசைக்கான'இசைக் குறிப்பேடுகளை' (Notes) எழுதிக் கொடுத்தும் பிரபலமடைந்திருக்கிறார்.அவர் இசைக்கு மயங்காதவர்களே இல்லை என்னும் நிலை ஏற்பட்டிருக்கிறதுஎன்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.பியானோ இசைக்கலைஞன், இசையமைப்பாளர், இசைப் பயிற்சியாளர் என்றுதன்னுடைய பல்முனைத் திறமைகளை வெளிக்காட்டி மக்களை அசரவைத்தவர்அவர். அந்தக் காலத்தில் இருந்த இசைக்கலைஞர்களைப் போல தேவாலயம்(Church) எதிலும் வேலைக்குச் சேர்ந்து பிழைப்பைக் கவனிக்காமல், கடைசிவரைதன்னிச்சையாகவே இருந்து வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகளோடு போராடியமாமனிதர் அவர். இசைப் புரவலர்களால் (Patrons) அவருடைய பணத்தேவைகள்நிறைவேற்றப்பட்டுள்ளது.
அவர் பிறந்த தேதி தெரிய வந்ததில் கூட ஒரு சுவாரசியமான தகவல் இருக்கிறது.அவர் மிகவும் பிரபலமானவுடன், அவருடைய பிறந்த நாளைத் தெரிந்து கொள்ளவிரும்பிய ரசிகர்களுக்கு, அவர் பிறந்த கிராமத்தையும், வருடத்தையும், மாதத்தையும்மட்டுமே சொல்ல ஆள் இருந்திருக்கிறது. தேதியைச் சொல்ல ஆளில்லை.விடுவார்களா ரசிகர்கள்? பிறந்த குழந்தைக்கு அது பிறந்து 24 மணி நேரங்களுக்குள்ஞானஸ்தானம் செய்யும் வழக்கம் இருந்ததால், அவர் பிறந்த கிராமத்திலுள்ளதேவாலயத்தின் பதிவேடுகளில் இருந்து, அவருடைய பெற்றோர்களின் பெயரைச்சொல்லித் தேதியை கண்டுபிடித்திருக்கிறார்கள்.
ஒருவனுக்கு ஒரே நேரத்தில் இரண்டு விபத்து ஏற்பட்டால் எப்படி இருக்கும்?அப்படி ஒருஇரட்டை விபத்து பீத்தோவனின் வாழ்க்கையில் அவருடைய முப்பதாவது வயதில்ஏற்பட்டது.மிகவும் விரும்பிக் காதலித்த பெண்ணை அவர் மணந்து கொள்ள முடியாமல்போனது முதல் விபத்து. அவள் பெரிய செல்வந்தர் வீட்டுப் பெண். அவளுடையபெற்றோர்கள் காட்டிய சிவப்புக் கொடியில் பித்தோவனின் காதல் காணாமல்போய்விட்டது. மனமுடைந்த அவர், தனது இறுதி மூச்சுவரை திருமணமேசெய்து கொள்ளவில்லை.அதே காலகட்டத்தில் அவருடைய செவிகள் கேட்கும் திறனை கொஞ்சம்கொஞ்சமாக இழக்க ஆரம்பித்து, பாதி செவிகள் பழுதாகி விட்டன.அடுத்தடுத்த ஆண்டுகளில் அது தொடர்ந்து, கடைசியில் செவிகளுள் இரண்டும்முழுவதும் பழுதாகிவிட்டன.எவ்வளவு கொடுமை பாருங்கள். இசை கேட்கச் செவி வேண்டும். இசைப்பவனுக்குஅது இல்லாமல் கெட்டுக் குட்டிச்சுவராகப் போய்விட்டது என்றால் அவன் எப்படிஇசைப்பான்?ஆனாலும் இசைத்தார். அதுதான் பீத்தோவனின் மன வலிமை.காது கேட்ட காலத்தில் அவர் இசைத்த இரண்டு சிம்பொனிகளை விட, காதுபழுதான பிறகு அவர் இசைத்த மூன்று புது சிம்பொனிகள் அற்புதமாக அமைந்தன.அவருக்கு சரித்திரத்தில் இடத்தை ஏற்படுத்திக் கொடுத்தன!

மெழுகுவர்த்தி உருகித்தான், தன்னை எரித்துக்கொண்டுதான் ஒளியைக் கொடுக்கிறது பீத்தோவனும் அப்படித்தான் தன்னுடைய உருக்கத்தில்தான் இந்த உலகிற்குஅற்புதமாக இசையைக் கொடுத்துவிட்டுப் போனார். அவருடைய சோகங்கள்தான்சுகமான இசையாக வெளிப்பட்டன!.

"இறைவனால் படைக்கப்பெற்ற மனிதர்களில். மகிழ்ச்சி மறுக்கப்பட்ட மனிதன் நானாகத்தான் இருக்க முடியும்"

---------பீத்தோவனின்
Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்