Home » » ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும்

ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும்

Written By DevendraKural on Thursday, 17 July 2008 | 22:17

ராமன் ஆண்டா என்ன ராவணன் ஆண்ட என்ன நம்ம பாடுபட்டாத்தான் சோறு. மக்கள உழைத்து சம்பாதிப்பதை விட இலவசமா ஏதும் கிடைத்தால் அவர்கள் அடையும் ஆனந்தம் ஆலாதியானது. எட்டு மணிநேரம் வேலை செய்வதினால் கிடைக்கும் 60 அல்லது 70 ருபாயைவிட 5ருபாய் கர்ச்சிப் இலவசாமாக வாங்குவதை பெருமையாக நினைப்பான் அதற்காக நாள் முழுவதும் வரிசையில் காத்து நிற்பான்.அதை பெரிய சாதனையாக மற்றவர்களிடம் தம்பட்டம் அடிப்பான்
5ருபாய் கர்ச்சிப்பிற்காக காத்துக் கிடந்த நேரத்தில் வேலைக்கு சென்றிருந்தால் 70 ருபய் சம்பளம் கிடைத்து இருக்குமே என்ற உணர்வு இல்லாமல்,உழைப்பின் மேன்மை தெரியாமல்.ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் அப்படித்தான் மக்களை மூலைச்சலவை செய்து வைத்துள்ளார்கள்.அவர்களுக்கு நாட்டுநலனை விட அவர்களுடய நலனே மேலானது. ஆளும் கட்சினருக்கு ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதும், எதிர்கட்சியினர் ஆட்சியை பிடிக்க முயல்வதும். இந்த இலவச திட்டங்களின் மூலம்தான்.இலவசமாக போடுகிற சோத்துக்கு வந்த கூட்டத்தை பார்த்து தான் விஜயகாந்துக்கு கூட கட்சி ஆரம்பிக்கதுனிவும் முதல்வராகவேண்டும் என்ற ஆசையும் வந்தது என்று கருதுகிறேன்பிறந்த குழந்தைக்கு பேர்வைப்பதில் இருந்து விபத்தில் இறந்து போகின்றவர்களுக்கு உதவி சேய்கிறேன் என்ற பெயரில் பணம் கொடுப்பதுவரை அரசியல் ஆதயமும் விளம்பரமும் தான் இருக்கின்றதே தவிர மனிதாபிமனாம் இருப்பது என்பது மிகவும் குரைந்துவிட்டது என்பதுதான் நிதர்சனமான உண்மை இதற்கு காரணம் மக்களிடமுள்ள இலவச மோகம்.மக்களிடமுள்ள இலவசமோகம், அடிமைத்தனம், ஜனனாயகக் கடமை செய்யாதது இது போன்றவை தான் இன்று மிகுதியாகக் காணப்படுகிறது. மாறாதவர்களை மாற்ற முயற்சிக்காமல் மாறவில்லை என்று சொல்வது மடத்தனமில்லையா?. அரசியல்வாதிகளை மாற்ற முயல்வோம் .பிச்சைக் காசுக்கும்,இலவச துண்டுக்கும் ஆசைப்பட்டுஅடுத்தவனை தலைவன் என்றும்முதாலளி என்றும் அழைப்பதில்ஆனந்தம் அடைபவனே
நீ தலைவன் ஆவது எப்போதுமுதலாளி ஆகவாவது முயற்சிசெய் இப்போது!!!
Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்