Home » » மனிதாபிமானம்????

மனிதாபிமானம்????

Written By DevendraKural on Friday, 5 September 2008 | 01:53

பீகாரின் கோசி நதி கரைகளை உடைத்துக்கொண்டு 12 லட்சம் பேர் தங்கள் வீட்டையும், உடமைகளையும் இழந்து நிற்கின்றனர்.
இந்நிலையில் சமூகத்தின் எல்லாப் பிரிவுகளுக்கான சலுகைகளும் தாழ்த்தப்பட்டவர்கள் கடைசியாகக் கிடைப்பதுபோல, வெள்ள மீட்புப் பணியில் உயர் சாதிக்காரர்கள் காப்பாற்றப்பட்டு இறுதியாக தாழ்த்தப்பட்டவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
பர்வான் என்னும் 43 வயதான தாழ்த்தப்பட்ட கிராமத் தலைவர் என்பதால் முதல் மீட்புப் படகில் அழைத்து வரப்பட்டார். அவருடைய மனைவி மற்றும் நான்கு குழந்தைகள் பின்னர் வருவார்கள் என்று உறுதி கூறப்பட்டும் அவர் காத்துக் கிடந்ததே மிச்சம்.
ஆறு நாட்களாகியும் அவரது குடும்பத்தினரும் சமூகத்தினரும் கிராமத்திலிருந்து அழைத்து வரப்படவேயில்லை. திரிவேணிகஞ்சில் தாழ்த்தப்பட்ட குடும்பத்தினர் அனைவரும் பாலத்தின் மூலையில் தள்ளி நிற்கவைக்கப்பட்டு கிராமத்தின் உயர் சாதியினர் மற்றும் பணக்காரர்கள் மட்டுமே படகில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
நாள்கணக்கில் 200 பேருக்கு மேல் உணவு, நீரின்றி கூரைகளின் மேல் தவித்து கிடக்க இரண்டு குழந்தைகள் தவறி விழுந்து வெள்ளத்தில் மூழ்கி இறந்துள்ளனர். பஞ்சாபில் பணியாற்றும் ஒரு தாழ்த்தப்பட்ட கூலித் தொழிலாளி தனது கிராமத்துக்கு விரைந்து தனது குடும்பத்தினரைப் பார்க்க முயன்றும் முடியவில்லை. காரணம் தாழ்த்தப்பட்டவர்கள் வாழும் கிராமங்களுக்கு படகுகள் அனுப்பப்படவில்லை.
ஆனால், தாழ்த்தப்பட்டவர்கள் பொய் சொல்வதாக ஒரு மாநில அரசு அதிகாரியும் தாழ்த்தப்பட்டவர்கள் புறக்கணிக்கப்படுவது உண்மைதான் என்று மற்றொரு அதிகாரியும் கூறுகின்றனர். இப்படிப்பட்ட பெரும் வெள்ளச் சூழ்நிலையில் ஏழை, பணக்காரர் யார் என்று அடையாளம் கண்டுபிடிக்க முடியாது என்று மற்றொருவர் கூறுகிறார்.
இந்தியாவில் சாதி உணர்வுகள் மேலோங்கி இருப்பதால் மீட்புப் பணியாளர்கள் தங்களுடைய சாதியினருக்கே முக்கியத்துவம் அளிப்பதாக புதுடில்லி சாதிப் பிரச்சனை ஆய்வாளர் சந்திரபன் பிரசாத் தெரிவிக்கிறார்.
அரசு அதிகாரிகளால் புறக்கணிக்கப்பட்ட பல தாழ்த்தப்பட்டவர்கள் தங்கள் குடும்பத்தினரைத் தேடி கழுத்தளவு நீரில் அவர்களைத் தேடி செல்கின்றனர். காந்தி கூறடியபடி நாங்கள் எல்லாம் ஹரிஜன்கள் தானே என்று தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கூறியுள்ளார்.
மனிதர்கள் வெள்ளத்தில் உயிருக்கு பிணங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும்போதுகூட ஏழ்மையானவன், பணக்காரன், தாழ்த்தப்பட்டவன், உயர் ஜாதிக்காரன் என பிரித்துப்பார்க்கும் சமூகத்தில் எப்படித்தான் வாழ்வதோ?
Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்