Home » » ராஜீவ் காந்திக்கு பிரபாகரன் எழுதிய இரண்டாவது கடிதம்.

ராஜீவ் காந்திக்கு பிரபாகரன் எழுதிய இரண்டாவது கடிதம்.

Written By DevendraKural on Monday, 9 March 2009 | 15:37

ராஜீவ் காந்திக்கு பிரபாகரன் எழுதிய இரண்டாவது கடிதம்.

இந்திய இராணுவத்திற்கும் புலிகளிற்கும் யுத்தம் தொடங்கியதும் பிரபாகரன் அவர்கள் அன்றைய இந்தியப்பிரதமர் ராஜீவ்காந்திக்கு 12.10.1987 அன்று முதலாவது கடிதத்தினைஎழுதியிருந்தார்.அதற்கு ராஜீவ் காந்தியிடமிருந்து எவ்வித பதிலும் வராத காரணத்தினால் மீண்டும் இரண்டு நாட்களின் பின்னர் நீண்டதொரு விளக்கக் கடிதத்தினை பிரபாகரன் அவர்கள் மீண்டும் ராஜீவ் காந்திக்கு எழுதியிருந்தார். அக்கடிதம் கீழே தருகிறேன்.


தலைமைச்செயலகம்
தமிழீழ விடுதலைப்புலிகள்
யாழ்ப்பாணம்.
14.10.1987கனம் ராஜீவ் காந்தி அவர்கள்
இந்தியப் பிரதமர்
புதுடில்லி

கனம் பிரதம மந்திரி அவர்களே
தமிழ்ப்பகுதிகளில் சாவும் அழிவுமாக நிலைமை படு மோசமடைந்து வருவதனால் நான் மீண்டும் உங்களுடன் தொடர்பு கொள்ள விரும்புகிறேன்.இந்திய அமைதி காக்கும் படையினர் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகளினால் நெருக்கடி நிமைமை தீவிரமடைந்து வருவதுடன் யாழ்ப்பாணக்குடாநாட்டில் பொதுசன உயிரிழப்பும் பொருந்தொகையில் அதிகரித்துள்ளது.கண்மூடித்தனமான பீரங்கித்தாக்குதல்கள்.மோட்டார் எறிகணை வீச்சு. விமானக்குண்டுவீச்சு காரணமாக இதுவரை 150 அப்பாவிப் பெர்துமக்கள் அனியாயமாகக் கொல்லப்பட்டதுடன் 500 பேர்வரை காயமடைந்துள்ளனர்.அத்துடன் விடுதலைப்புலிகள் இயக்க போராளிகள் பலரும் கொல்லப்பட்டுள்ளனர்.போர்க்கைதிகளாக 18 அமைதிப்படைச் சிப்பாய்கள் எம்மது பாதுகாப்பில் உள்ளனர்.

போர் மிகவும் உக்கிரமடைந்து தீவிரமடைவதால் பல்லாயிரக்கணக்கான அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர்.காவரையற்ற ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்து வருவதால்அத்தியாவசிய உணவுப்பொருட்களிற்கு பெரும் தட்டுப்பாடு எழுந்துள்ளது.இதனால் எமது மக்கள் தாங்கொணாத்துன்பத்திற்கு இலக்காகியுள்ளனர். எமது மக்களின் பாதுகாப்பைப் பேணி சமாதானத்தையும் இயல்பு நிலையையும் நிலைநாட்டுவதற்காக எமது தாயகம் வந்த இந்திய அமைதிப்படையினர் ஒரு மூழு அளவிலான யுத்தத்தினை ஆரம்பித்து எமது மக்கள் மீது மனிதாபிமானமற்ற கொடுமைகளை புரிவது மிகவும் வேதனைக்குரிய துன்பியல் நிகழ்வாகும்.

11 ம் நாள் காலை இந்திய அதிரடிப்படையினர் யாழ்ப்பாண நகருக்கு சமீபமாகவுள்ள பிரம்படியில் பல்கலைக்கழக மாணவர்கள் .பெண்கள் குழந்தைகளென 40 அப்பாவிப் பொதுமக்களை படுகொலை செய்துள்ளனர்.மக்களிற்கு சேவை செய்யும் பொது நிறுவனங்கள் மீதும் இந்திய அமைதிப்படைகள் தாக்குதல் நடத்தியமை எமக்கு அதிர்ச்சியை தந்திருக்கின்றது.ஈழமுரசு . முரசொலி ஆகிய இரு தினசரிதமிழ்ப் பத்திரிகை காரியாலயத்தினுள் புகுந்துஅமைதிப்படை சிப்பாய்கள் வெடிகுண்டுகளை வைத்து அச்சு இயந்திரங்களை தகர்த்துள்ளனர்.12 நாளன்று வடமாகாணத்தின் ஒரேயொரு வைத்திய நிறுவனமான யாழ்ப்பாண மருத்துவ மனைமீது கோட்டையிலுள்ள இந்தியப்படையினர் பீரங்கித்தாக்குதலை நடத்திபெரும் சேதம் விழைவித்துள்ளனர். நேற்று விமானக்குண்டு வீச்சு காரணமாக யாழ்ப்பாண பல்கலைக்கழக கட்டிடங்கள் பலத்த சேதத்திற்கு உள்ளாகி இருக்கின்றன.

இந்தப் போரில் கனரக ஆயுதங்களையோ விமானங்களையோ பாவிக்கவில்லையென இந்திய அரசாங்கம் பரப்புரை செய்து வருகின்றது.ஆனால்.அதேவேளை இலங்கை இந்திய விமானங்களும் உலங்குவானூர்திகளும் குடியிருப்புப் பகுதிமீது கண்மூடித்தனமான தாக்குதலை நடாத்தி வருகின்றது. இந்தியாவின் இந்த நடவடிக்கையானது எமது மக்களிற்கு அதிர்ச்சியையும் ஆழ்ந்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்திய இலங்கை ஒப்பந்த விதிகளின் பிரகாரம் அமைதிப்படையினர் அமைதியை பேணவேண்டும்.பொது மக்களிற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். இதுவே அவர்களிற்கு வழங்கப்பட்ட ஆணையாகும். மக்கள் ஆணைபெற்ற ஒரு அரசியல் இயக்கத்திற்கு எதிராக ஒரு முழுஅளவிலான யுத்தத்தை தொடுப்பதற்கு அமைதிப்படைக்கு சட்டரீதியான அதிகாரம் எதுவும் இல்லை.அமைதிப்படையின் அட்டுளியங்கள் பற்றி நாம் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை விசாரித்து அறிவதற்கும்.உண்மையை உலகிற்கு எடுத்து சொல்வதற்கும் வழிசெய்யும் வகையில் சர்வதேசப்பத்திரிகையாளர்கள். மனிதஉரிமை நிறுவனப்பிரதிநிதிகள். இந்திய எதிர்க்கட்சி பிரமுகர்கள் ஆகியோரைக்கொண்ட ஒரு பார்வையாளர் குழு யாழ்ப்பாணம் வர அனுமதிக்குமாறு உங்களை வேண்டிக்கொள்கிறேன்.

வடக்கு கிழக்கு மாகாணத்தில் ஒரு இடைக்கால அரசை அமைக்குமாறு இந்திய சிறீலங்கா அரசுகள் எமது இயக்கத்தை கேட்டுக்கொண்டன என்பதை அறிவீர்கள். தமிழ் மானிலத்தில் விடுதலைப்புலிகள் இயக்கமே மக்கள் ஆதரவு பெற்ற முதன்மையான அரசியல் அமைப்பு என்பதை இரு அரசுகளும் அங்கீகாரம் வழங்கியமைக்கு இது ஒப்பாகும்.இடைக்கால அரசு அமைக்கப்பெற்றதும் எம்மிடம் எஞ்சியுள்ள ஆயுதங்களை கையளித்து விடுவதாக நாம் வாக்குறுதி அளித்திருந்தோம். ஆனால் கிழக்கு மாகாணத்தில் தலைதூக்கிய வன்முறைச்சம்பவங்களை சாக்காகக் காட்டி இந்திய அரசாங்கம் எமமீது ஒரு யுத்தத்தை கட்டவிழ்த்துவிட தீர்மானித்துள்ளது.இது மிகவும் துரதிஸ்டவசமானதாகும். கிழக்கு மாகாணத்தில் தலைதூக்கிய வன்முறைச்சம்பவங்களிற்கும் எமக்கும் எவ்வித தொடர்புமில்லை. இதனை நாம் திட்டமிட்டு செயற்படுத்தியதாகக் கூறுவதும் தவறானதாகும்.எமது இயக்கத்தின் திருகொணமலைத் தளபதி புலேந்திரன். முன்னாள் மட்டக்களப்பு தளபதி குமரப்பா ஆகியோரின் மரணத்தின் விளைவாகவே தன்னிச்சையாக இவ்வன்முறைசம்பவங்கள் தலைதூக்கின.

எமது தளபதிகளின் மரணத்தால் பாரதூரமான விளைவுகள் ஏற்படலாமென நாம் ஏற்கனவே இந்தியத் தூதுவர் திரு.டிக்சித்திடம் கூறியிருந்தோம்.இதன் விளைவுகள் பற்றி திரு.டிக்சித்தும் ஜனாதிபதி ஜெயவர்த்தனாவிற்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். எமது மக்களிற்கு தமது அரசியல் தலைவிதியை தாமே நிர்ணயித்துக்கொள்ளும் சனநாயக உரிமை இருக்கிறது. இந்த உரிமையை மீறும் வகையில் இந்தியா போன்ற ஒரு சனநாயக நாடு தனது சொந்த அபிலாசைகளை ஆயுத முனையில் எமது மக்கள் மீது திணித்துவிட முயல்வது நியாயம் ஆகாது.இந்த ஒப்பந்தம் பற்றி எமக்கு தனித்ததொரு நிலைப்பாடு இருந்தபொழுதும். எமது மக்களின் நலன் பேணப்படுமானால் அதனை அமுல்படுத்துவதில் இந்தியாவிற்கு ஒத்துளைப்பு வழங்க நாம் முன்வந்தோம்.அப்படியிரந்தும் தமிழ்மக்களின் உண்மையான பிரதிநிதிகளான எம்மை பூண்டோடு அழித்து விடுவதற்கு நீங்கள் மேற்கொண்டுள்ள ?ராணுவ நடவடிக்கை நியாயமற்றது. ஆகவே இந்த இராணுவ நடவடிக்கையை நிறுத்தி சமாதானத்தையும் இயல்பு நிலைமையையும். இன ஐக்கியத்தையும் உருவாக்க வழிகோலும் வகையில் விடுதலைப்புலிகள் இயக்த்துடன் பேச்சு வார்ததைகளை நடத்துமாறு உங்களை பணிவன்புடன் வேண்டிக் கொள்கிறேன்.

வே.பிரபாகரன்
தலைவர்
தமிழீழ விடுதலைப்புலிகள்.

அன்ரன் பாலசிங்கம் அவர்கள் எழுதிய போரும் சமாதானமும் புத்தகத்திலிருந்து. ,இறுதியாகவும் மூன்றாவதாகவும் ஒரு கடிதத்தினையும் பிரபாகரன் அவர்கள் ராஜீவ் காந்திக்கு எழுதியிருந்தார் அதனை பின்னர் பதிவிடுகிறேன் நன்றி வணக்கம்.
Share this article :

+ comments + 1 comments

28 March 2009 at 13:31

thanks for putting a valuable news about Eealm conflict..... proud to see that our "Samaugam' is back on tamil desiyam.... My humble request that we should not do discrimantion...

Post a comment
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்