Home » » இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம் இணைந்தே இன்னும் பல தமிழர்களை கொல்வோம்!

இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம் இணைந்தே இன்னும் பல தமிழர்களை கொல்வோம்!

Written By DevendraKural on Thursday, 27 August 2009 | 03:09இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம் இணைந்தே இன்னும் பல தமிழர்களை கொல்வோம்!இணையத்தை பயன்படுத்தும் தமிழர்கள் அனைவருக்கும் அந்த காணொளியை காணும் வாய்ப்பு கண்டிப்பாக கிடைத்து இருக்கும். நிர்வாணமானநிலையில் கரங்கள் கட்டப்பட்டு கும்பல் கும்பலாக தமிழர்களை சிங்கள சிப்பாய்கள் சுட்டு வீழ்த்தி பிணக்காடாக மாற்றி வைத்திருக்கும் கொடுமையை சேனல் 4 என்னும் இங்கிலாந்து ஊடகம் அம்பலத்தி இருப்பதை. உண்மையிலேயே தமிழ் தாய்க்கு பிறந்த எவனுக்கும் கண்களில் கண்ணீர் துளிர்த்து இருக்கும், எனக்கும் அப்படித்தான்.( வேறு நம்மால் என்ன செய்ய முடியும்?.)

தமிழன் என்றாலே ஆடைகளை அவிழ்த்து பார்ப்பது சிங்களன் வழக்கம் போல. சில மாதங்களுக்கு முன்னே போரில் செத்துவிழுந்த தமிழ்போராளிபெண்ணை நிர்வாணப்படுத்தி இணையதளங்களில் உலவவிட்டான் சிங்களகாடையன் என்ன செய்ய முடிந்தது நம்மால்? முத்துகுமார் போன்ற உணர்வாளர்கள் தீக்குளித்து உயிர்விட்டதுதான் மிச்சம். அடைக்கலம் கேட்ட தமிழ்மக்களை நிர்வாணப்படுத்தி நடக்கவைத்தான் சிங்களன் என்றபொழுதும் நம்மால் வாய்திறக்க முடியவில்லையே?. கொத்து கொத்தாக தமிழர்கள் மீது குண்டுவிழுந்த பொழுது நம்மில்பலர் “யுத்தத்தை நிறுத்துங்கள் என்று இலங்கையை நிர்பந்தியுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தோம். “இறையாண்மை மிகுந்த இலங்கையில் இந்தியா தலையிடாது” என்று பதில் வந்ததே தவிர தமிழனுக்காக இந்திய அரசாங்கம் குரல் எதுவும் கொடுத்ததா?

தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களை அழுத்தம்குடுங்கள் என்றால் கடிதம் எழுதியே காலம் கடத்தினார்கள் காலம் கடந்தபின் உண்ணாவிரத நாடகமும் நடத்தினார்கள். போர் முடிந்துவிட்டது என்றார்கள் செத்ததமிழர்களின் எண்ணிக்கையை காட்டிய பொழுது மழைக்கு பின்னே துவானம் என்று சாவுவீட்டில் சங்கத்தமிழில் விளையாட்டு காட்டினார்கள். போரில் சிங்களன் செய்த மனித உரிமைமீறல்களை விவாதத்திற்கு எடுத்து கொள்ளவேண்டும் என்று ஐநாவில் வாக்கெடுப்பு வந்தபொழுது உலகத்தமிழன் அனைத்து நாடுகளிடமும் மண்டியிட்டான் சில நாடுகள் செவிசாய்த்து. தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் இந்தியாவோ தமிழனின் கண்ணீரில் நியாமில்லை! உலக அரங்கில் உரக்க சொன்னது. தமிழக முதல்வர் வழக்கம் போலவே இறையாண்மை மிக்க இலங்கைக்கு எதிராக வாக்களிங்களேன்! என்று கடிதம் எழுதிவிட்டு கலட்டி கொண்டார். ஐநா நடத்திய வாக்கெடுப்பில் இந்தியா, சீன பாகிசுதான் துணைகொண்டு மீண்டும் ஒருமுறை தமிழனை வீழ்த்தி காட்டினான் சிங்களன்.காந்தி தேசம் கொடுக்குதே புத்ததேசம் கொல்லுதே! என்று தொண்டைதண்ணி வத்த நாமும் எவ்வளவோ குரல்கொடுத்தோம். நம்மில் சிலர் தங்கள் உயிரினையே கொடுத்தார்கள் ஒன்றும் நடக்கவில்லை. இலங்கையில் தமிழன் செத்தொழியவேண்டும் என்ற ஆசை இந்திய அரசிற்கும் உண்டு என்று நமக்கு தாமதமாகதெரிய வந்தது.

ஆறரைகோடி தமிழன் இருக்கிறான் என்று சொல்லும் இந்தியா சிங்களஇனவெறியனை நட்புகரம் கூப்பி அழைக்கிறது. “காங்கிரசிற்கு வாக்களிக்காதே!” என்று தமிழர்களிடம் நாம் வைத்த கோரிக்கைகள் எல்லாம் கடலில் கரைத்த பெருங்காயம் ஆனது. இப்பொழுது ஈழம் என்ற சொல்லே உச்சரிக்க கூடாது என்று இந்திய-தமிழக கூட்டு அறிக்கை சொல்லுகிறது. இலங்கையில் அகதிமுகாமில் தமிழன் மழையால் அல்லல்படும் பொழுது சுமுகமானநிலை வந்ததே பாருங்கள்! என்கிறார் தமிழர்களின் முதல்வர்.

முதல்வரின் உண்ணாவிரத நாடகத்தை இடைவெளி இல்லாமல் ஒளிபரப்பிய தமிழினதலைவரின் குடும்ப ஊடகங்கள் இந்த ஆதாரங்களை வெளியிடுமா? என்றால் வெளியிடாது. வடக்கிந்திய ஊடகங்கள் பத்தி நாம் சொல்லவேண்டிய அவசியமே இல்லை. தமிழின உணர்வாளர்கள் ஏதேனும் போராட்டங்கள் செய்தால் “கலகக்காரர்கள்” என்றும் “பிரிவினைவாதிகள்” என்று ஏசுவதற்கு தமிழக ஊடகங்கள் தாயாராக உள்ளன.

இந்தியா இலங்கைக்கு எப்படி எல்லாம் உதவியது என்று ஆதாரப்பூர்வமான செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன. ஆம் கொடுத்தோம் அவர்கள் பாதுகாப்பிற்காக! என்று பாதுகாப்புஅமைச்சகம் பெருமிதத்தோடு சொல்கிறது. இந்தியா சிங்களன் உதவியுடன் செய்த தமிழினபடுகொலைகள் பத்தி நாம் வாய்திறக்ககூடாதாம். இந்திய இறையாண்மையின் பெயரினால் தொடர்ந்து அச்சுறுத்தப்படுகிறோம்.

தமிழகதமிழர்கள் அனைவருமே மந்திரி பதவியின் பொருட்டு ஏற்கனவே அடகு வைக்கப்பட்டு விட்டார்கள் என்பது நிதர்சன உண்மை. நாம் ஏதேனும் பேசினால் “சிங்களன் கோவித்து கொள்வான் “என்கிறார் முத்தமிழ் அறிஞர். தமிழனை காப்பதைவிட தலையாய கடமை ஒன்று இருக்கிறது அதுதான் இந்தியாவின் இறையாண்மையை பாதுகாப்பது.தாயகதமிழனும் இந்தியாவின் செயல்களை அமைதியாக வேடிக்கை பார்பதன் மூலம் தமிழன படுகொலைகளில் தனக்கான பங்கினை ஆற்றிக்கொண்டு ‘இந்தியன்’ என்ற பெருமிதத்தோடு இருக்கிறான்(இருக்கிறோம்).

இந்தியர் என்பதில் பெருமிதம் கொல்வோம்
இணைந்தே இன்னும் பல தமிழர்களை கொல்வோம்!
Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்