Home » » உங்கள் வெற்றிக்கு நீங்களே அளவுகோல்

உங்கள் வெற்றிக்கு நீங்களே அளவுகோல்

Written By DevendraKural on Tuesday, 13 October 2009 | 02:21

நம் அனைவருக்கும் நன்கு பரிச்சயமான கதைதான் வினாயகப் பெருமா‎ன் ஞானப்பழம் பெற்ற கதை. உலகை யார் முதலில் சுற்றி வருகிறாரோ அவருகே பழம் எ‎ன்ற அம்மையப்பர் கட்டளையி‎ன் அடிப்படையில் முருகப் பெருமான் மயிலேறி ஊர் சுற்றக் கிளம்பஇ வினாயகரோ சற்றும் யோசிக்காமல் 'அம்மையப்பரே உலகம்' எ‎ன்று கூறி அவர்களைச் சுற்றி வந்து பழத்தைப் பெற்றுக் கொண்டார். விநாயகரை வெற்றி கொண்டுஇ உலகைச் சுற்றி வந்து பழம் வெல்வே‎ன் என்று ‏வேகத்துடன் கிளம்பிய முருகனுக்கோ ஏமாற்றமே மிஞ்சியது. அண்ணனோ தம்பியைப் பி‎ன் தொடர்ந்து சென்று அவரைத் தோற்கடிக்க வேண்டும் எ‎‎‎ன்று வரிந்து கட்டாமல்இ வேறு வழி யோசித்தத‎ன் பலன் - பழத்தைக் கைப்பற்றினார். விநாயகர் நிச்சயமhக முருகனை வெற்றிகொள்ள நினைக்கவில்லை! மாறாகஇ முருகன்தான் அண்ணனை வெற்றிகொள்ள வேண்டும் எ‎ன்ற வேகத்தில் கிளம்பினார். எனவே நாம் வெற்றி பெற அடுத்தவரைத் தோற்கடிக்க வேண்டும் எ‎ன்ற கட்டாயமில்லை என்பது தெளிவாக நமக்கு புலப்படும். அப்படியெ‎ன்றால் நாம் ஏ‎ன் நமது குறிக்கோளை அடுத்தவருடைய குறிக்கோளுட‎ன் ஒப்பிட்டு நமது வெற்றியை முடிவெடுக்க வேண்டும்?? "நமக்கு நாமே வெற்றி இலக்கை நிர்ணயித்துக் கொண்டு அதை அடைவதும் அடுத்த முறை நம்முடைய சாதனையை நாமே உடைத்து மீண்டுமொரு வெற்றியை அடைவதுதான் உண்மையான சாதனை".
சரி நம் வெற்றியை அடுத்தவருடைய வெற்றியோடு ஒப்பிட்டு பார்க்கக் கூடாது என்பதற்கான என்னவென்று தெரியுமா?? ஏனெனில் ஒருவரது வெற்றியானது அவரவர்களுடைய பல்வேறு காரணிகளை அடிப்படையாக கொண்டு அமைவதே காரணமாகும். அந்த காரணிகள் என்னென்னவென்று காண்போம். 1. குடும்பச்சூழல், 2. கல்விநிலை, 3. நண்பர்கள், 4. வளர்ப்பு முறை, 5. வெற்றியை அடைய அவர் முயற்சிக்க ஆரம்பித்த காலகட்டம், 6. ஆலோசனைகள், 7. குடும்பப் பண்புக் கூறுகள் போன்றவை. இப்படியான பல்வேறு காரணிகளின் மூலம் ஒருவரை போல் மற்றவர் கண்டிப்பாக இருக்க முடியாது என்பதை உணர்கிறீர்கள் அல்லவா?? அதே போல் நீங்கள் அடுத்தவரை வெற்றி கொள்ள நினையாத போது ஏற்படும் நன்மைகள் என்னென்னவென்று பார்க்கும் போது, 1. அனைவரும் நண்பர்களாவர்கள், 2. நம்மை பற்றிய நல்லெண்ணம் உருவாசும், 3. குழுவாக செயல்படும் வாய்ப்பு கிட்டும், 4. எல்லாவற்றிற்கும் மேலாக மனமகிழ்ச்சி, மனத்தெளிவு, இனிமையான பேச்சு, நேர்மறை எண்ணங்கள், நிம்மதி என்று இன்னும் பல அனுபவங்கள் அனுபவத்தினால் உங்களுக்கு உருவாகும். எந்தவொரு செயலை செய்யும் போதும் அதற்கான அளவுகோலை நீங்களே நிர்ணயித்துக் கொள்ளுங்கள். ஒன்று முடிய மற்றது என உங்களை எப்போதும் உயர்த்தக்கூடிய வேலைகளிலேயே நீங்கள் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் போது உங்கள் வெற்றி உங்களுக்கு மகிழ்ச்சியையும், அதே நேரத்தில் உங்களது தோல்வி கூட உங்களை பாதிக்காது உங்களை முன்னேற்ற மட்டுமே யோசிக்க வைக்கும். ஏனெனில் உங்கள் வெற்றிக்கு நீங்களே அளவுகோல்.. எனவே உங்களுக்கு எது பிடிக்கிறது.. எது உங்களுக்கு சரியான தேர்வு என்பதை தெளிவாக தேர்ந்தெடுங்கள். உங்கள் தெரிவுகளையோ, முடிவுகளையோ கூட பிறரோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டாம்.


நாதி இல்லாமல் நம் சமுதாயம் .
ஓற்றுமைப்படு ஒன்றாய் நில் .
ஒருகுடையின் கீழ் வா .
நான்கு திசைகளிலும்
பிரிந்துநின்று பெறமுடியாததை
சேர்ந்தால் சாத்தியப்படுவதை உணர்வாய் ........

விழித்திடு விழித்தெழு
.


Suresh Kumar.

DYWA-Chennai
Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்