Home » » மதுரையில் மே-12 ல் உண்ணாவிரதப் போராட்டம்-புதிய தமிழக

மதுரையில் மே-12 ல் உண்ணாவிரதப் போராட்டம்-புதிய தமிழக

Written By DevendraKural on Saturday, 8 May 2010 | 08:21

புதிய தமிழகம் கட்சியின் 6-வது மாநில பொதுக்குழுக் கூட்டம் திருச்சியில் செவ்வாய்க்கிழமை தலைவர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

“மனித உரிமை மீறல்கள் எதிர்த்து குரல் கொடுத்த காரணத்துக்காக, கடந்த 1957-ல் பரமகுடியில் கொலையுண்ட தியாகி இம்மானுவேல் சேகரன் பெயரை மதுரை விமான நிலையத்துக்கு சூட்டவேண்டும்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி, முதல் கட்டமாக மே-12 ல் மதுரையில் தலித் அமைப்புக்களை திரட்டி உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கட்சியின் செயல் திட்டங்களில் மாற்றம் கொண்டுவருவது, மத்திய,மாநில அரசுகளின் மனித உரிமை மீறல்கள்,ஈழத்தமிழர்கள் உள்ளிட்ட சர்வதேச தமிழ் மக்களுக்கு ஏற்படும் பாதுகாப்பற்ற நிலை, உள்கட்சித் தேர்தல்,விலைவாசி உயர்வு ஆகியவை குறித்து புதன்கிழமை நடைபெறும் கட்சியின் செயற்குழுவில் விவாதிக்க உள்ளதாக தலைவர் தெரிவித்தார்.
Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்