Home » » யார் போராளி?

யார் போராளி?

Written By DevendraKural on Monday, 23 August 2010 | 06:31


யார் போராளி?

ஒட்டிய வயிற்றுடன், கோபமாக பேசிக்கொண்டு, வீட்டில் தண்ணீர் தெளித்துவிட்ட, எதையாவது படித்துக்கொண்டு, சமுதாயத்தை மாற்றிவிட துடிக்கும் ஒருவன் அல்லது ஒரு கூட்டம். அடிப்படையில் பாதிக்கபட்டவர்கள், கோபமாக அந்த வலிக்கு மருந்து தேடுபவர்கள், சற்றே கோபமிருந்தாலும் கொஞ்சம் பொதுநலம் கொண்ட கோபம் உடையவர்கள்.நிச்சயமாக அவர்களை உடனடியாக புரிந்துக்கொள்ள முடியாது.

மனிதன் வாழ்கையில் போராட்டம் என்பது அடிப்படை. விந்து, கரு முட்டயை அடைய செல்லும் போதே போராட்டம் தொடங்கி விடுகிறது, போராடுவது மனிதனின் இயல்பு. அது தன் சுயநலத்திற்க்காகவும் இருக்கலாம் அல்லது அதில் பொது நலமும் கலந்திருக்கலாம்.ஆனால் அவர்கள் போராடுவது உறுதி.

ஏன் கடவுளும் போராளி தான் அல்லது ஒரு காலத்தில் போராடியவர்களை நாம் கடவுளாக கும்மிடுகிறோம்.யூத மதத்தின் சடங்கை எதிர்த்த ஏசு, தன் மக்களிடம் சகோதர உணர்வை வளர்க்க போராடிய நபி, போலி சடங்குகளை எதிர்த்த புத்தர், ஏன் அநியாயத்தை எதிர்க்க ஒரு சித்தாந்த்தை போதித்த கண்ணன் என கடவுளரும் போராளிகள் தான்.

குறிப்பாக இளைஞர்கள் உடனடியாக உணர்சியின் வசம் வீழ்வார்கள், மனநலரிதியாக கனவு காணும் அவர்களுக்கு உலகத்தை புரட்டி போடும் எண்ணம் வசியபடுத்துகிறது, எந்தவித பொருப்புகளும் சுமக்காத சூழ்நிலையில், நான் ஏதாவது செய்ய வேண்டும் என்கிற வெறியும், இதனை, இதற்க்கு முன்பு செய்தவர்களின் வழியையும் அவர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்.

போராட்டம் என்றால்?

தன்னை சுற்றியிருக்கும் சமுதாயத்திற்கு கொடுக்கபடும் ’சங்கொலி’, உறங்குபவர்களை தட்டியெழுப்புவது, ஒரு குறிபிட்ட ஆபத்தை தெரியபடுத்துவது சுருக்கமாக சொன்னால் ஒரு விஷயத்தை பற்றிய கவன ஈர்ப்பும் அதற்கான எதிர்ப்பு முறையும்.

சில உதரணங்கள் ஒரு இனம் கேட்கும் விடுதலை, சுயராஜ்ஜியம், ஆளும் முறையை அல்லது சட்டத்தை எதிர்ப்பது, அல்லது ஆதரிப்பது.

போராட்ட முறை:

போராட்டம் என்பது கவன ஈர்ப்பு, அதை எப்படி செய்வது அதற்கான முறை என்ன? பொதுவாக சொன்னால், அது அந்த போராட்டத்தின் அவசரநிலையை பொருத்தது.உயிருக்கும் போராடும் ஒருவருக்கு மருத்துவம் செய்ய சொல்லி போராடும் போது அதன் அவசரத்தை கருதி போரட்ட முறை தீர்மானிக்கபபடுகிறது.பல நேரங்களில் போராட்ட முறை தேர்தெடுக்கபடும் காரணங்கள்,

1.இதற்கு முன்பு வெற்றி பெற்ற முறை.

2.மக்களின் கவனத்தை பெற உதவும் முறை.

3.வன்முறைக்கு பதிலாக தரப்படும் எதிர்-வன்முறை (Counter Terrorism)

பயன்பாட்டில் உள்ள முறைகள்:


1.உண்ணாவிரதம், சத்தியாகிரகம், ஒத்துழையாமை,ஊர்வலம் போன்ற காந்திய வழிமுறை

2.எரிப்பது,குண்டு வீசுவது, குறிப்பிட்டவர்களை கொலை செய்வது போன்ற வன்முறை .


3.கவனயீர்பிற்க்கு மாத்திரம் ஆளே இல்லாத இடத்தில் குண்டு வைப்பது, தீக்குளிப்பது போன்ற அதிரடி முறைகள்.

இவையனைத்தும் குழுவாகவோ தனி நபராகவோ செய்வது.

அரசின் நிலைப்பாடு:

பொதுவாக அரசின் கவனயீர்ப்பு கிடைத்தவுடன் குறிபிட்ட அந்த குழுவுடன் அரசு பேச்சு வார்த்தை நடத்தும் பிரச்ச்னைகளை அரசு சுயநலமோ அல்லது ஈகோ அல்லது கையாளும் போது போராட்டம் வெற்றிபெறுகிறது.ஆனால்,

தொடர்ந்து போராடி ஒரு குழு வெற்றிபெறும் பொழுது ஆளும் கட்சி பதவி பயத்தால் அந்த குழுவையோ அல்லது அவர்களின் போராட்டத்தையே ஒழிக்க பார்க்கலாம்.

ஒரு குழுவை தங்கள் சுயலாபத்திர்க்காக அரசியல் லாபங்களுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.

அரசியல் இருக்கும் குறிபிட்ட நபர் அந்த குழுவையோ அல்லது அதில் இருக்கும் சிலரை தன் சுயலாபத்திற்க்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.

மக்களின் நிலைபாடு:

பொதுவாக மக்கள் அமைதியாக எந்தவித தடங்களும் இன்றி வாழவே விரும்புவார்கள். அவர்களின் மிகபெரிய மனநிலையே ’அடாப்ட்டபிலிடி’ ஆதாவது எற்றுக்கொள்ளுதல். அவர்கள் அடிமை வாழ்வை ஏற்றுக்கொள்ளுவார்கள் சுத்ந்திர மனிதனை பார்க்கும் வரை, பசியை ஏற்றுக்கொள்ளுவார்கள் நன்றாக உண்பவனை பார்க்கும் வரை.மக்கள் நம்பிக்கை வரும் வரை போரடும் குழுவையோ அல்லது போராடும் நபரையோ ஏற்றுக்கொள்ளுவது கடினம், ஏற்றுகொண்ட பின் அவர்களை வெறுப்பது கடினம்.போரட்டத்தின் அல்லது போராளிகளின் அடிநாதமே அவர்கள் எவ்வறு மக்களை கவறுகிறார்கள் என்பதில் தான்.போராட்டம் என்பது ஒருவரிடமிருந்து தான் பிறக்கிறது, அவன் நம்பிக்கை அவன் கனவு அதன் பின் இன்னொருவர், இன்னொருவர் என தொற்றிக்கொள்ள்கிறது.

ஒன்று மட்டும் உறுதி இதுவரை மக்களை கவராத,மக்கள் அதரவில்லாத எந்த ஒரு போராட்டம் வென்றதாக சரித்திரமில்லை.

போராளிகளின் வாழ்க்கை முறை:

ஒரு போராளியாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் அந்த நொடி,

1.அவனுக்கு மரணம் எப்பொழுது வேணுடுமானலும் வரலாம், உயிர் பையம் கூடாது.

2.மக்கள் அவனை கவனிப்பார்கள் வாய் சொல்லில் உறுதியும் உண்மையும் வேண்டும்.

3.பதவியாசை கூடாது,

4.சுய ஒழக்கமும், சுய கட்டுபாடும் அவசியம்.

5.அவன் கொள்கைகள் ,சித்தாந்தங்கள் மீது உறுதியான ஈடுபாடு வேண்டும்.

6.நம்பிக்கையும் கனவுகளும் தான் அவனை துடிப்புடனும் வெறியுடனும் இருக்க வைக்கும்.

7.மக்களிடம் தன் போராட்டத்தையும், அரசிடம் அவன் கோரிக்கைகளையும் தெளிவாக எடுத்து சொல்ல தெரிந்திருக்க வேண்டும்.

8.எடுக்கும் முடிவில் உறுதி வேண்டும்.


ஒருவன் பசித்திருக்க - இன்னொருவன்
உணவை ஒளித்து வைக்க,
பசித்தவன் போராளியாகிறான்.

அநியாயத்தை எதிர்க்காத
மௌனம் – மிக பெரிய தீவிரவாதம்.

....தேவேந்திரர் இளைஞர் நல அமைப்பு (DYWA) .
Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்