Home » » நேர்மையான தேவேந்திர அதிகாரி விஷம் கொடுத்து கொலை

நேர்மையான தேவேந்திர அதிகாரி விஷம் கொடுத்து கொலை

Written By DevendraKural on Wednesday, 15 September 2010 | 21:55

Wife on fast to nab hubby killers
Deccan Chronicle –Chennai 14.09.2010

Wife on fast to nab hubby killers

The wife of a civil supplies quality control officer alleged to have been poisoned to death, sat on an indefinite fast along with relatives and friends in heavy downpour on Monday, demanding the immediate arrest of those responsible for his death.
Murugan's wife Selvi alleged that her husband, the quality control officer of the civil supplies godown at Meelavittan, Thoothukudi, whose death was registered by the police as suicide on Sept. 7, was poisoned by his colleagues.
Refusing to receive the body after post-mortem, she alleged that Murugan was forced to consume poison by four of his colleagues Isaack, Ramesh, Ayyapillai and godown manager Chidambaram because he lodged a complaint with the Thoothukudi SIPCOT police against them for malpractice.
"When I saw his body at the Thoothukudi medical college hospital, there were injuries on his neck and right shoulder and his tongue was also injured: he probably bit it while being beaten up," Ms Selvi told Deccan Chronicle.
She said her husband told her that the four had been torturing him at work since he made the police complaint.
Ms Selvi, who petitioned Thoothukudi collector G.Prakash Monday, however, turned down his offer for a job in the civil supplies department and launched her fast in front of the collectorate. Human rights and dalit organisations have assured support to Ms Selvi, who is a dalit.
The officials refused comment, saying it was a suicide as per the post-mortem report. The collector, however, added that a detailed enquiry would be conducted by higher officials from Chennai.
http://www.dc-epaper.com/DC/DCC/2010/09/14/INDEX.SHTML?ArtId=006_028&Search=Y


The Hindu, Madurai – 13.09.2010

Official's death raises suspicion
Tuticorin: M. Murugan (48), an Assistant Quality Control Officer of Civil Supplies Godown under the SIPCOT police limits here, died on Saturday.
According to police, he took poison on September 7 at the workplace and he was taken to the Government Hospital here. He was a resident of Anna Nagar.
His family members and relatives objected to the alleged long time taken for conducting the post-mortem at the GH on Saturday.
Selvi, wife of the deceased, alleged that his husband might have been murdered by some in the department for "exposing irregularities."
She also alleged injuries on some parts of the body.
A large number of residents and relatives of the deceased thronged the hospital. Demanding a proper inquiry into the death, they refused to take the body.
A team of police personnel, led by Sonal Chandra, Assistant Superintendent of Police, and Jayakumar, DSP, pacified them.
http://www.hindu.com/2010/09/13/stories/2010091354860300.htm


The Times of India-Chennai, 14.09.2010

Wife holds protest over official's death

Madurai: The wife of a quality control officer in the Tamil Nadu Civil Supplies Corporation, who died allegedly due to consumption of poison, is on a protest for three days in Thoothukudi, claiming that he had been force-fed poison and demanding that the culprits be arrested.
Selvi, 37, wife of M Murugan, 48, suspects that her husband might have been forced to swallow poison by those involved in alleged misappropriation of goods, as he had given a complaint against the fraud to the police on August 17.
Murugan was deputy inspector of quality control at a civil supplies godown in Thoothukudi. He had complained both to his superior and the police regarding the conduct of some civil supplies employees. On the morning of September 7, his family was informed that Murugan had consumed poison in office and that he was unconscious. He was rushed to the government hospital, where he died on September 11. Police sources said the postmortem had confirmed that it was a case of suicide.
Selvi and her relatives complained to the police that they suspected foulplay in his death and that he might have been attacked by some persons on the instigation of higher officials of the department and later forced to consume poison. They refused to accept the body until the case was registered under section 302 of IPC. At present, a case of suspicious death has been registered under section 174 of IPC.
The relatives, who staged a protest throughout the night of September 11 in front of the Thoothukudi medical college, where Murugan's body has been kept after post mortem examination, continued the protest throughout Sunday and on Monday morning staged a protest in front of the collector's office in Thoothukudi. CPI leader R Nallakannu met Selvi on Monday.
Thoothukudi collector G Prakash held talks with Selvi, who continued her protest in heavy rain, said steps would be taken to get her a government job.


SEEKING JUSTICE: Selvi on protest outside the Thoothukudi collector's office on Monday

http://epaper.timesofindia.com/Default/Client.asp?Daily=TOICH&showST=true&login=default&pub=TOI&Enter=true&Skin=TOINEW&GZ=T&AW=1284538160625


அதிகாரி விஷம் கொடுத்து கொலை

தூத்துக்குடி அண்ணாநகர் 10-வது தெருவைச் சேர்ந்த முத்தையா மகன் முருகன் (48). இவரது சொந்த கிராமம் விளாத்திகுளம் அருகே வேடப்பட்டி ஆகும். இவர், தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் உள்ள குடிமைப்பொருள் வழங்கல் துறை கிட்டங்கியில் தரக்கட்டுப்பாட்டு பிரிவு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். கடந்த 7-ம் தேதி காலை முருகன் வழக்கம்போல் வீட்டில் இருந்து வேலைக்கு புறப்பட்டுச் சென்றாராம். இந்நிலையில் அன்று மாலை 3 மணியளவில் அவர் விஷம் குடித்துவிட்டதாக அலுவலகத்தில் இருந்து குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாம். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சனிக்கிழமை இறந்தார். இந்நிலையில் அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது மனைவி செல்வி அளித்த புகாரில் அலுவலகத்தில் நடைபெற்ற முறைகேடுகளை தனது கணவர் கண்டுபிடித்து போலீஸில் புகார் செய்ய நடவடிக்கை எடுத்ததாகவும், அதனால் அதிகாரிகள் அவருக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டனர் என்றும் தெரிவித்துள்ளார்.
குடிமைப்பொருள் வழங்கல் துறை தரக்கட்டுப்பாட்டு உதவி ஆய்வாளர் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குடிமைப் பொருள் வழங்கல் துறை தரக்கட்டுப்பாட்டு உதவி ஆய்வாளரின் சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அவரது சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் 3-ம் நாளாக திங்கள்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தன் கணவரின் சாவுக்குக் காரணமானோரைக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி முருகனின் மனைவி செல்வி காலவரம்பற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். மனைவி செல்வி தலைமையில் உறவினர்கள், நண்பர்கள், மனித உரிமை அமைப்பினர் 3 நாள்களாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். முருகனின் மனைவி செல்வி 3 நாள்களாக சாப்பிடாமல், காலவரம்பற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக உறவினர்கள் சிலரும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, செல்வி தலைமையில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் திங்கள்கிழமை காலை ஆட்சியர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள் ஆட்சியர் அலுவலக பிரதான வாசல் முன் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். முருகனின் சாவுக்குக் காரணமானோரை உடனே கைது செய்ய வேண்டும் என அவர்கள் முழக்கமிட்டனர். விளாத்திகுளம் எம்எல்ஏ என். சின்னப்பன், மக்கள் உரிமைக் குழு அமைப்பாளர் வழக்கறிஞர் இ. அதிசயகுமார், மனித உரிமைப் பாதுகாப்பு மைய மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் அரிராகவன், சாதி ஆதிக்க எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ராமர், புதிய தமிழகம் கட்சி மாவட்ட மாணவரணிச் செயலர் சு. பாபு, மக்கள் கண்காணிப்பகம் மண்டல ஒருங்கிணைப்பாளர் கணேசன், ஓசை அமைப்பின் முருகேசன், அன்னை தெரசா அறக்கட்டளை இயக்குநர் சண்முகசுதாகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதையடுத்து அங்கு வந்த ஆட்சியர் கோ. பிரகாஷ், செல்வியை சந்தித்துப் பேசினார். அப்போது, சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கையை அதிகாரிகளிடம் கேட்டுள்ளேன். ஓரிரு நாள்களில் முழு விவரம் தெரிந்துவிடும். அதன்பின்பு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். உங்களுக்கு அரசு வேலை வழங்குவது குறித்தும் பரிசீலிக்கப்படும் என ஆட்சியர் உறுதியளித்தார். ஆனால், இதை செல்வி ஏற்கவில்லை. முருகனின் சாவுக்குக் காரணமானோரை உடனே கைது செய்ய வேண்டும் என உறவினர்கள் கோஷமிட்டதால், ஆட்சியர் அங்கிருந்து சென்றார். அதன் பின்பு செல்வி தனது உண்ணாவிரதத்தை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடர்ந்தார்.
தூத்துக்குடியில் அரசு அதிகாரி சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் செவ்வாய்க்கிழமை 4-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். முருகன் மனைவி செல்வி தலைமையில் உறவினர்கள் 4 நாள்களாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கை கொலை வழக்காக மாற்ற வேண்டும். அவரைக் கொலை செய்தவர்களைக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி சடலத்தை வாங்க மறுத்து அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
முருகனின் மனைவி செல்வி தலைமையில் சுமார் 50 பேர் திங்கள்கிழமை காலை முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். திங்கள்கிழமை இரவு விடிய விடிய அவர்கள் ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே இருந்தனர். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அவர்களது போராட்டம் 4-வது நாளாக நீடித்தது. ஆட்சியர் அலுவலம் முன் அமர்ந்து தங்கள் போராட்டத்தை அவர்கள் தொடர்ந்தனர்.செவ்வாய்க்கிழமை நண்பகலில் ஆட்சியர் கோ. பிரகாஷ் சாப்பிடுவதற்காக அலுவலகத்திலிருந்து கிளம்பினார். அப்போது முருகனின் மனைவி செல்வி உள்ளிட்ட 3 பெண்கள் ஆட்சியரின் கார் முன்னால் தரையில் படுத்து தர்னாவில் ஈடுபட்டனர். உடனே ஆட்சியர் காரை விட்டு இறங்கி வந்து, போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே தன்னால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியும் என ஆட்சியர் அவர்களிடம் தெரிவித்தார். ஆனால், அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. இதையடுத்து ஆட்சியர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். பின்னர் மாலையில் போராட்டக்காரர்களுடன் ஆட்சியர் கோ. பிரகாஷ் தலைமையில் சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. எஸ்.பி. கபில்குமார் சி. சரத்கர், மாவட்ட வருவாய் அலுவலர் துரை. ரவிச்சந்திரன், தூத்துக்குடி சார் ஆட்சியர் சவான் சஜன்சிங் ராம்சிங், காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இது தொடர்பாக, டிஎஸ்பி அந்தஸ்தில் உள்ள அதிகாரியைக் கொண்டு விசாரணை நடத்தப்படும். துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்படும் என ஆட்சியர் உறுதியளித்தார். இருப்பினும் முருகனை கொலை செய்தவர்கள் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப் பதிந்து, அவர்களைக் கைது செய்யும் வரை போராட்டத்தைக் கைவிடமாட்டோம் என கூறி தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
முருகனின் மனைவி செல்வி தலைமையில் சுமார் 50 பேர் திங்கள்கிழமை காலை முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இரவும், பகலும் அவர்கள் ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே இருந்தனர். இந்நிலையில், புதன்கிழமை அவர்களது போராட்டம் 5-வது நாளாக நீடித்தது. ஆட்சியர் அலுவலம் முன் அமர்ந்து தங்கள் போராட்டத்தை அவர்கள் தொடர்ந்தனர்.
Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்