Home » » மதுரை விமான நிலையத்துக்குப் பேர்.??...விஜயகாந்த்து மூணாவது அணி ??

மதுரை விமான நிலையத்துக்குப் பேர்.??...விஜயகாந்த்து மூணாவது அணி ??

Written By DevendraKural on Thursday, 16 September 2010 | 10:21


 
    ""விஜயகாந்த்தும் மூணாவது அணி பற்றித்தானே பேசுறாரு?''

""அவர் தன்னோட தலைமையில மூணாவது அணி அமைக்கணும்ங்கிறதில் கவனமா இருக்காரு. அ.தி.மு.க.வில் 40 சீட்டுக்கு மேலே தே.மு.தி.க.வுக்கு தரமுடியாதுன்னு தொடர்ந்து சொல்லிக்கிட்டிருப்பதால, தன் தலைமையிலான அணி பற்றி விஜயகாந்த் தீவிரமா ஆலோசிச் சிக்கிட்டிருக்காரு. இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பச்சமுத்து சமீபத்தில் விஜயகாந்த்தை சந்திச்சி, "காங்கிரசை நீங்க நம்பவேணாம். அவங்க தி.மு.க.கிட்ட அதிக சீட் வாங்கிட்டு அதே கூட்டணியில் நீடிப்பாங்க. நாம வலுவான கூட்டணி அமைச்சு, ஒற்றுமையா செயல்பட்டா நம் தயவில்லாம யாரும் ஆட்சியமைக்க முடியாது'ன்னு சொல்லியிருக்காரு.''""இந்தக் கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இருக்குமாம்?''

""பா.ம.க.வை  இந்த அணிக்கு கொண்டு வரணும்னு பச்சமுத்து சொல்லியிருக்காரு. அதோடு, திருமாவளவனுக்கு நிறைய உதவிகள் செய்திருப்பதால் தன்னோட பேச்சை அவர் தட்டமாட்டாருன்னும் அவரை இந்த அணிக்கு கொண்டு வர்றேன் னும் சொல்லி யிருக்காரு. மேற்கு மாவட்டங் களில்  அணிக்கு பலம் சேர்க்க கொங்கு முன்னேற்றக் கழகத்தையும் சேர்த்துக்க லாம்ங்கிறது பச்சமுத்து வோட கணக்கு. அ.தி.மு.க. அணியில் புதிய தமிழகம் இருப்பதால், தென்மாவட்டங்களில் சப்போர்ட்டுக்கு பசுபதி பாண்டியன் கட்சியை சேர்த்துக்கலாம்னு சொல்லி யிருக்கிறார். தே.மு.தி.க., பா.ம.க., விடுதலைச்சிறுத்தைகள் ஓரணியில் இருந்தால் வடமாவட்டங்களில் உள்ள பெரும்பாலான தொகுதிகள் இந்த அணி வசம்தான்னும், யார் ஆட்சியமைக்கணும்னாலும் தங்கள் தயவு தேவைன்னும் பச்சமுத்து சொன்னதைப் பற்றி தன் கட்சி நிர்வாகிகளிடம் தெரிவித்த விஜயகாந்த், இதுவும் நல்லாத்தானே இருக்குன்னு சொல்லியிருக்காராம்.''

 
""மதுரை விமான நிலையத்துக்குப் பேர் வைப்பதிலும் குழப்பம் தீரலையே... விரிவு படுத்தப்பட்டு, பன்னாட்டு விமான நிலையமா தரம் உயர்த்தப்பட்டி ருக்கும்  மதுரை ஏர் போர்ட் திறப்புவிழாவில் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், மு.க.அழகிரி, பிரஃபுல் பட்டேல் மூன்று பேரும் முன்னின் றாங்க. இந்த விமான நிலையத் துக்கு இமானுவேல் சேகரன் பெயரை வைக்கச் சொல்லி தேவேந்திர குலவேளாளர்கள் வலியுறுத்தினாங்க. முத்துராமலிங்கத் தேவர் பெயரை வைக்கணும்னு முக்குலத் தோர் குரல் கொடுத்தாங்க. அவர் பெயரை வைத்தால் இவர் சமுதாயமும், இவர் பெயரை வைத்தால் அவர் சமுதாயமும் கலவரத்தில் ஈடுபடும்னு ரிப்போர்ட் போனதால, யார் பெயரையும் வைக்காமலேயே ஏர் போர்ட்டை திறந்துட்டாங்க.''

 சிவகங்கை மாவட்டத்தில் நடந்த படுகொலை, விருதுநகர் மாவட்டத்தில் நடந்த பேனர் கிழிப்பு ஆகியவற்றால் இமானுவேல்  சேகரன் நினைவுநாளில் கலவரம் உருவாகலாம் என இருமாவட்ட காவல்துறையும் முன்கூட்டியே எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து பாதுகாப்பை பலப் படுத்தியது. கடந்த முறை கலவரம் நடந்த பகுதிகள் வழியே அரசுபஸ் உள்பட எந்த வாகனத்தையும் அனுமதிக்கவில்லை. அதுபோல இளையான்குடி பகுதியில் இரு தரப்புக்கு நேர்ந்த மோதலில் போலீசும் காயமடைந்தபோதும், லத்தியை சுழற்றாமல் சமாதான நடவடிக்கை மேற்கொண்டது போலீஸ். இத்தகைய சாமர்த்திய மான நடவடிக்கைகளால் செப் டம்பர் 11 அன்று அமைதியான முறையில் நினைவுநாள் நிகழ்ச்சிகள் முடிந்தன. இதே பாணியை ஒவ்வொரு ஆண்டும் போலீஸ் கடைப்பிடிக்க வேண்டும் என்கிறார்கள் பொது மக்கள்.


Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்