Home » » ஒரு புரட்சியாளரை உருவாக்கிய வீடு

ஒரு புரட்சியாளரை உருவாக்கிய வீடு

Written By DevendraKural on Saturday, 9 October 2010 | 04:28

தியாகி இம்மானுவேல்

மாவீரர் தியாகி இம்மானுவேல் சேகரனின் 86வது பிறந்த நாளில் அவர் ஆற்றிய சமுதாய பணி.தனி ஒரு மனிதனால் ஏற்படுத்தபட்ட மாற்றங்கள் .தேவேந்திர சொந்தங்களே தேவேந்திர குல வேளாளர் என்ற சமுதாயம் ஏதோ! நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அல்ல அது இந்த உலகம் தோன்றிய போதே தோன்றியது .கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய குடி தமிழ் குடி என்பார்கள். தமிழ் குடியில் முதல் குடி (பள்ளு) குடி என்பர். இந்த சமுதாயத்தை பல்வேறு பெயர்களின் மூலம் தன்னை அடையாளப்படுத்தி கொள்கிறார்கள். முற்காலத்தில் இந்த நாட்டை ஆண்ட சமுதாயம் பின்பு படிப்படியாக ஜாதி வெறியாலும் குறு நில மன்னர்களாளும் அவர்களின் எடுபிடிகளாலும் தேவேந்திர குல வேளாளர் மக்களை விவசாய கூலிகளாகவும் பயன்படுத்தி நாளைடைவில் தாழ்த்தப்பட்டவர்களாக்கி ஆளுகின்ற அரசியல்வாதிகளின் அதிகாரத்தின் துணையோடு தீண்டத்தகாதவர்களின் பட்டியலில் சேர்த்தார்கள். தேவேந்திர குல மக்கள் இந்த நாட்டில் சுய மரியாதையுடனும் கௌரவத்துடனும் வாழ முடியாத சூழ்நிலை பல நூறு வருடங்களாக நிலவி வந்தது.இராமநாதபுரம் மாவட்டத்தின் காங்கிரஸ் கூட்டங்களை எல்லாம் 'தீண்டாமை எதிர்ப்பு பிரச்சாரக் கூட்டங்களாக' மாற்றிய பெருமை இம்மானுவேலைச் சாரும். மாவீரன் இம்மானுவேல் மேடைகளில் பேசினால் அனல்பறக்கும். கேட்பவர் இரத்தம் கொதிக்கும்; அந்த அளவிற்கு மேடைப் பேச்சிலேயே வீரஉணர்வூட்டுவார்.'நாய்கள் கூட குளத்தில் சுதந்திரமாக தண்ணீர் குடிக்கிறது. ஆனால்/ தாழ்த்தப்பட்ட மக்கள் தண்ணீர் குடிக்க முடிவதில்லை. இந்த இழிநிலை தொடர நாம் அனுமதிக்கக் கூடாது' என்று வீரமுழக்கமிட்டார்.அவர் காலத்தில் இருந்த அரசியல்வாதிகளைப் போல வார்த்தைஜாலங்களாலும் வெற்று ஆரவாரத்தாலும் பாமர மக்களை ஏமாற்றி அரசியல் ஆதாயம் தேடவில்லை. எதையும் நேருக்கு நேர் துணிச்சலுடன் பேசுகின்ற நெஞ்சுறுதி அவரிடம் இருந்தது. அதே நேரத்தில் பிறரை அநாகரீகமாகவோ/ தரக்குறைவாகவோ பேசியதுமில்லை.இவருடன் எப்போதும் இளைஞர் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும்; கிராமங்களில் கூட்டம் நடத்தும் போது அவருடன் பல கிராமங்களுக்குச் சென்று வருவார்கள். குறிப்பாக அவருடன் பல ஊர்களில் மக்கள் பணி செய்தவர்கள்.

இம்மானுவேல் காண்பவர்களைக் கவர்ந்திழுக்கும் வசீகரத் தோற்றமுடையவர். எளிமையான வாழ்க்கையும்/ இனிய சுபாவமும் அவரை மக்களுடன் நெருக்கமாக பிணைத்தது. கணீரென்று சத்தமாகத்தான் எப்போதும் பேசுவார். எதற்கும் அஞ்சாதவர்/ பிரச்சனைகளை துணிச்சலுடன் அணுகும் மனோதிடம் அவரிடம் இயல்பிலேயே இருந்தது. குற்றமிழைத்தவர்கள் யாரானாலும் நேருக்கு நேர் சந்தித்து தவறை சுட்டிக் காட்டும் அஞ்சாநெஞ்சமுள்ளவர்.

1957 முதுகுளத்தூர் கலவரமும், அதனைத் தொடர்ந்து அரசின் முயற்சியினால் கூட்டப்பட்ட சமாதானக் கூட்டமும், அதற்கடுத்து மிகப்பெரிய சாதி வெறிப் படுகொலைகளை ராமநாதபுரம் மாவட்டத்தில் உண்டாக்கியது.

இந்தக் கூட்டத்தில், 'இம்மானுவேல் சேகரனும், தானும் சமமாக நாற்காலியில் உட்காருவதா?' எனும் உணர்வில், தேவர் உட்காராமல் நின்று கொண்டிருந்தார். (சட்ட சபையில் பி எஸ் சந்தானம் பேசியதில் இருந்து) சமாதானக் கூட்டத்தில் தேவேந்திரர்கள் தலைவரான இம்மானுவேல் சேகரனும், தேவர்களின் தலைவரான முத்துராமலிங்கமும் ஓர் சமாதான அறிக்கையில் கையெழுத்துப் போட்டு அதை மக்களுக்கு 'அமைதி திரும்பிட'வேண்டுகோளாக வைக்கலாம் என கலெக்டர் முன்கை எடுத்தார். இம்மானுவேல் சேகரன் ஒத்துக் கொண்டு கைஎழுத்திட முன் வந்தபோது, இம்மானுவேலை, தமக்கு இணையான தலைவராகவோ, தேவேந்திரர்கள் தலைவராகவோ தம்மால் ஏற்க முடியாது என்று சொன்னார் தேவர்.

"என் அளவு நீ பெரிய ஆளாக, பெரிய தலைவனாக ஆகி விட்டாயா? உன்னோடு சேர்ந்து நானும் இந்தக் கடிதத்தில் கையெழுத்திட வேண்டுமா?" எனச் சொல்லி, தேவர் கையெழுத்திட மறுத்துவிட்டு, வெளியே வந்து தாறுமாறாக தம் தொண்டர்களிடம் பேசிடவே, அடுத்தபடியாக இம்மானுவேல் சேகரன் கொலை செய்யப்பட்டார்.

ஒரு புரட்சியாளரை உருவாக்கிய வீடு.

இம்மானுவேல் சேகரனார் வாழ்ந்த வீடு இன்றளவும் பாழ் அடைந்த நிலையில் தான் மணல் மேடாக காட்சி அளிக்கிறது. அவரின் மறைவுக்குப் பிறகு யாரும் அந்த வீடு பக்கமே செல்லவில்லை. தேர்தல் நேரத்தில் தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்களின் ஓட்டுகளைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பெயரளவில் மட்டுமே இம்மானுவேல் சேகரனாரின் பெயரையும் உருவ படங்களையும் பயன்படுத்தி வருகின்றனர்.


தமிழகத்தில் சுமார் நூறுக்கும் மேற்ப்பட்ட தேவேந்திர குல சமுதாய அமைப்புகள் பல்வேறு தலைவர்களின் தலைமையின் கீழ் இயங்குகிறது. ஒரு கோடிக்கும் மேல் தேவேந்திரர்கள் இருந்தும் அவர் மறைந்து 53வருடங்களாகியும் அவர் வாழ்ந்த சிறு வீட்டை கூட நம்மால் பேணி நினைவுச் சின்னமாக பாதுகாக்க முடியவில்லை.

அவரது பெயரையும் உருவப் படத்தையும் பல்வேறு அமைப்புகளும் கட்சிகளும் பணம் சம்பாதிப்பதற்காகவும் மக்கள் மத்தியில் ஆதரவு பெறுவதற்காகவும் மட்டுமே பயன்படுத்துகின்றனர்.சுய நல நோக்கத்தில் அரசியல் லாபத்திற்காக இந்த புரட்சியாளரைப் பயன்படுத்துகின்றனர்.

இந்த நிலை மாற வேண்டும். தேவேந்திர குல சமுதாய மக்களை அறியாமை என்னும் இருளில் இருந்து விழிப்படைய செய்ய வேண்டும். சுய நல சமுதாய போலி தலைவர்களை அடையாளம் காட்ட வேண்டிய பொறுப்பு இன்றைய இளைஞர்களின் கையில் தான் உள்ளது. தமிழகத்திலேயே பயமறியா இளைஞர்களை கொண்ட சமுதாயம் நம் சமுதாயம்.

ஆகவே நம்மால் அனைத்தும் சாத்தியமே. மாற்று அரசியல் கட்சிகளுக்கும் சுய நல அமைப்புகளுக்கும் பின்னால் அணி திரள்வதை விட்டு விட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சமுதாய உணர்வாளர்களையும் இளைஞகர்ளையும் ஒரு குடையின் கீழ் ஒற்றூமையாக அணி திரட்டி சமுதாய தியாகிகளின் கனவுகளை நினைவாக்குவோம்.

பல்வேறு சமுதாய தலைவர்கள் வாழ்ந்த வீடுகளை எல்லாம் அதை சார்ந்தவர்கள் நினைவுச் சின்னமாக பாதுகாத்து வரும் போது நமக்காக போராடி உயிர் நீத்த புரட்சியாளர் இமமானுவேல் சேகரனாரின் வீடு மட்டும் இன்றும் மணல் மேடாக செல்லூரில் காட்சியளிக்கிறது. இது ஒட்டு மொத்த தேவேந்திரர்களுக்கும் அவமானச் சின்னம்.
புரட்சியாளரின் வீட்டைக் கட்டி எழுப்பி அதை நினைவு இல்லமாக பாதுகாக்கவும் வருங்கால சந்ததியினருக்கு இவரின் வரலாற்றை அறியவும் வழி வகை செய்ய வேண்டும். தியாகி பிறந்த புனித இல்லத்தை ஒரு அழியா வரலாற்றுச் சின்னமாக கட்டி எழுப்ப வேண்டியது ஒவ்வொறு தேவேந்திரகளின் கடமை ஆகும்.

எதையும் தாங்கும் நெஞ்சழுத்தம்…
அலட்டிக்கொள்ளாத ஆழம்…
அலை, அலையாய் புரட்சிகர பிடிவாதம்…
ஏறி அடிக்கையில் எதிரியை மிச்சம் வைக்காத போர்க்குணம்…
தனக்கென துரும்பளவும் வாழாத தூய்மை…
கொண்டாடுவோம்
மாவீரர் தியாகி இம்மானுவேல் சேகரனின் 86வது பிறந்த பிறந்தநாளை.....


தேவேந்திரர் இளைஞர் நல அமைப்பு (DYWA)
இளையவரோடு தோள் சேர் .......
Share this article :

+ comments + 1 comments

13 October 2010 at 01:44

Y we can't join our hands to starts this Planned to Construct the Building???
We r using his name and recall his thoughts on Sep 11 only???

Post a comment
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்