Home » » இனி கிராமம், கிராமமாக சென்று தேவேந்திர குல மக்களை சந்திபேன்-சேலத்தில் ஜான்பாண்டியன் பேட்டி

இனி கிராமம், கிராமமாக சென்று தேவேந்திர குல மக்களை சந்திபேன்-சேலத்தில் ஜான்பாண்டியன் பேட்டி

Written By DevendraKural on Monday, 6 December 2010 | 06:11

தேர்தலில் போட்டியிடுவது குறித்து விரைவில் அறிவிப்பேன்:    சேலத்தில் ஜான்பாண்டியன் பேட்டி

தமிழ்நாடு மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் இன்று காலை சேலம் மத்திய ஜெயிலில் இருந்து விடுதலை ஆனார். பின்னர் அவர் திரளான தொண்டர்களுடன் சென்று அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார்.
ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த ஜான்பாண்டியன் இன்று விடுதலை செய்யப்பட்டார். அவர் விடுதலை ஆவார் என்பதை அறிந்த அவரது ஆதரவாளர்கள், கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் என திரளானோர் இன்று அதிகாலை சேலம் மத்திய சிறை முன்பு திரண்டனர்.

நெல்லை, தூத்துக்குடி, கோவை , மதுரை, ராமநாதபுரம், தேனி, கடலூர், உள்பட பல ஊர்களில் இருந்தும் தொண்டர்கள் கார், வேன்களில் வந்து அவரை வரவேற்க காத்து இருந்தனர். ஜான்பாண்டியன் விடுதலை ஆனதைத் தொடர்ந்து தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், மாலை அணி வித்தும் வரவேற்றனர்.

இதனால் சேலம்- ஏற்காடு ரோட்டில் போக்குவரத்து பாதித்தது.சேலத்தில் இருந்து அஸ்தம்பட்டி, கோரிமேடு, அடிவாரம் செல்லும் பஸ்களும், அடிவாரத்தில் இருந்து வந்த பஸ்களும் கன்னங்குறிச்சி வழியாக திருப்பி விடப்பட்டன.

இதையொட்டி சேலம் போலீஸ் கமிஷனரும், ஐ.ஜியுமான சுனில் குமார்சிங் உத்தரவின் பேரில் ஜெயில் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
இதன் பின்னர் அவர் கூறியதாவது:-
 
8ஆண்டுகளுக்கு பின்னர் சிறையில் இருந்து விடுதலை ஆகி உள்ளேன். சில அரசியல் நிர்ப்பந்தத்தால் நான் பழி வாங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டேன்.
 
இனி கிராமம், கிராமமாக சென்று தேவேந்திர குல மக்களையும், பொதுமக்களையும் சந்தித்து அவர்களின் மேம்பாட்டிற்கு உழைப்பேன். அனைவரையும் ஒன்றிணைத்து பணியாற்றுவேன்.
 
தேர்தலில் போட்டியிடுவதா? வேண்டாமா? எந்த கட்சியுடன் கூட்டணி சேருவது? தனித்து போட்டியிடுவதா? என கட்சி நிர்வாகிகளிடம் கலந்து பேசி விரைவில் அறிவிப்பேன்.
Share this article :

+ comments + 3 comments

7 December 2010 at 06:00

மள்ளர் குல மக்களூக்கு வணக்கம்

தளபதி ஜான் பாண்டியன் என்னும் மள்ளர் குல போராளி வெளிய வந்து விட்டார் ஜாதி வெறி பிடித்த
நாய்களூக்கு இனி தூக்கம் கிடை யாது...

ஜெயா சசி - டாக்டர் கிருஷ்ணசாமி கூட்டணியை உடைக்க கலைஞர் கருணாநிதி போட்ட உச்ச நீதி மன்ற ஆணை !

ஐந்து வருடம் கூண்டுக்குள் சிறை பட்ட புலி இனி என்ன செய்ய போகிறது மள்ளர் குல மக்களூக்கு பொருத்து இருந்து பார்போம்...

புலி சீரி பாய போகிறதா
இல்லை பதுங்க போகிறதா ...

ஒரு கோடி மள்ளர் என்ற தேவேந்திர குல வேளாளர் இன மக்கள் சார்பாக உச்ச நீதி மன்ற நீதி அரசர் களூக்கு என் உள்ளம் கணிந்த நன்றி...

- மருத நில வேந்தன்

7 December 2010 at 06:04

மள்ளர் குல மக்களூக்கு வணக்கம்

தளபதி ஜான் பாண்டியன் என்னும் மள்ளர் குல போராளி வெளிய வந்து விட்டார் ஜாதி வெறி பிடித்த
நாய்களூக்கு இனி தூக்கம் கிடை யாது...

8 வருடம் கூண்டுக்குள் சிறை பட்ட புலி இனி என்ன செய்ய போகிறது மள்ளர் குல மக்களூக்கு பொருத்து இருந்து பார்போம்...

புலி சீரி பாய போகிறதா
இல்லை பதுங்க போகிறதா ...

ஒரு கோடி மள்ளர்
என்ற
தேவேந்திர குல வேளாளர் இன மக்கள் சார்பாக உச்ச நீதி மன்ற நீதி அரசர் களூக்கு என் உள்ளம் கனிந்த நன்றி...

- மருத நில வேந்தன்

7 December 2010 at 07:52

please change blog screen and font color. because both dark green and black color are very dark and hard to read.

my humble request.

Post a Comment
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்