Home » » என்ன நிர்ப்பந்தத்தினால் கிருஷ்ணசாமி அதிமுகவுக்கு சென்றார்: ஜான்பாண்டியன்

என்ன நிர்ப்பந்தத்தினால் கிருஷ்ணசாமி அதிமுகவுக்கு சென்றார்: ஜான்பாண்டியன்

Written By DevendraKural on Tuesday, 7 December 2010 | 06:11

''அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக 8 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தேன். நிரபராதியான என் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் தள்ளினார்கள். என்னை சிறையில் தள்ளியவர்களுக்கு வரும் சட்டமன்ற தேர்தலில் பாடம் புகட்டுவேன்.

கிராமம், கிராமமாக சென்று மக்களை சந்திக்க உள்ளேன். முன்புபோல் எனது சமுதாய பணி தொடரும். தேர்தலில் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்று மக்களின் கருத்துக்களை கேட்ட பிறகு தெரிவிப்பேன்.

புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்திருப்பதை தேவேந்திரகுல மக்கள் விரும்பவில்லை. அவர் என்ன நிர்ப்பந்தத்தினால் அங்கு சென்றார் என்று தெரியவில்லை''என்று கூறினார்.
 
சிறையில் ஜான் பாண்டியன் வளர்த்த
மரங்களை வெட்டி சாய்க்க முடிவு

சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ஜான் பாண்டியன், சிறை வளாகத்தில் வளர்த்து வந்த முருங்கை, வாழை மரங்களை வெட்டிசாய்க்க சிறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.


நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜான் பாண்டியன். 1993ம் ஆண்டு கோவையில் நடந்த விவெகானந்தன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜான் பாண்டியன் உள்பட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இதையடுத்து ஜான் பாண்டியன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இடையில் வேலூர், கடலூர் மத்திய சிறைகளுக்கு மாற்றப்பட்ட அவர், கடந்த 2006ம் ஆண்டு ஏப்ரல் முதல் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

இதற்கிடையே, சுப்ரீம் கோர்ட், கோவை கொலை வழக்கில் ஜான் பாண்டியன் உள்பட 5 பேரை விடுதலை செய்து கடந்த 3ம் தேதி உத்தரவிட்டது.

அதன்பேரில், நேற்று சேலம் மத்திய சிறையில் இருந்து ஜான் பாண்டியன் விடுவிக்கப்பட்டார்.


சேலம் மத்திய சிறையில் ஜான் பாண்டியன் உயர்பாதுகாப்பு பிரிவில் அடைக்கப்பட்டு இருந்தார்.

அவர், சேலம் சிறை வளாகத்திற்குள் விதிகளை மீறி முருங்கை, வாழை, கொய்யா, பலா, காட்டு நெல்லி மரங்களை வளர்த்துள்ளார். அதில் விளையும் பழங்களையும் அவரே ருசித்து வந்துள்ளார். அவரது மிரட்டலுக்கு பயந்து, வேறு கைதிகள் பழங்களை பறிப்பதில்லை.


உயர் பாதுகாப்பு பிரிவில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் மரங்கள் வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கைதிகள் வாழை நாரைப்பயன்படுத்தி கயிறு தயார் செய்து தப்பித்து விடுவர் என்பதாலும், முருங்கை மரம் எளிதில் உடையும் தன்மை உள்ளதால் கைதிகள் அதில் ஏறி குதித்து தற்கொலை செய்து கொள்வார்கள் என்பதாலும் இந்த இருவகை மரங்கள் வளர்க்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


ஆனால் சிறை விதிகளை மீறி ஜான் பாண்டியன், இந்த வகை மரங்களை வளர்த்து வந்துள்ளார். சிறைக்காவலர்கள், அதிகாரிகளும் இதை கண்டுகொள்ளவில்லை.


இந்நிலையில் அவர் நேற்று விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கைதிகளின் பாதுகாப்பு கருதி, முருங்கை, வாழை மரங்களை வெட்டி சாய்க்க சேலம் மத்திய சிறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

Share this article :

+ comments + 1 comments

8 December 2010 at 02:47

i am not sure that what is going to happen.. was there any political motive behind this release? if it is there then nothing will happen to our community. people should think about it.. please donot surrender community to any rowdeys.. we are having so many intelligence.... consider this

Post a Comment
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்