Home » » சாதி கசக்குது.. ஓட்டு மட்டும் இனிக்குதாக்கும்..?’’-தேவேந்திரர்களின் குமுறல்!

சாதி கசக்குது.. ஓட்டு மட்டும் இனிக்குதாக்கும்..?’’-தேவேந்திரர்களின் குமுறல்!

Written By DevendraKural on Sunday, 26 December 2010 | 23:04

"என்ன உலகம் இது? இவங்கள்லாம் என்ன மனுஷங்க? நாங்கள்லாம் நொந்து போயிருக்கோம்...'''

விருதுநகர் மாவட்டம் - சுக்கிரவார்பட்டியிலிருந்து அழகர் ராஜா என்பவர் உடைந்த குரலில் நம்மை அழைக்க.. அந்த கிராமத்துக்குப் போனோம். 

""கூட்டணிங்கிறாங்க.. அட, அண்ணந் தம்பியாத்தான பழகுறோம்னு சொல்றாங்க.. எல்லாம் ஒப்புக்கு பேசற பேச்சு.. கட்சில பெரிய தலைக சரி சமமா ஒண்ணா ஒக்காந்து பேசிட்டாப் போதுமா? இங்க உள்ளவங்க எங்கள ஏத்துக்க ணுமே? இன்னும் எங்கள அடிமையா நடத்த ணும்னுதான் துடிக்கிறாங்க.. இந்த நாட்டோட சுதந்திரம் எங்களுக்கு இல்லையா? நாங்க ஒண்ணும் அடிமையில்ல.. நம்ம  நாட்டுல தலை விரிச்சாடுற சாதி வெறிக்கு எங்க கிராமத்த உதாரணமாச் சொல்லலாம்.. இது மாதிரி ஏகப்பட்ட கிராமங்க இருக்கு இங்க.. ஏற்றத் தாழ்வு உங்க கண்ணு முன்னால தெரியுதுல்ல.. இது தான் சாட்சி...'''கண் கலங் கிடப் பேசினார் ராஜேந்திரன்.

தாழ்த்தப்பட்ட மக்க ளின் இந்தப் பரிதவிப்புக்கு யார் காரணம்?'

எல்லாம் அரசியல்தான்'' என அவர்களே விவரித்த விவகாரம் இது-

""பிள்ளைமார், தேவர், நாயக்கர், நாடார், தேவேந்திரர், அருந்ததியர் என பல சமுதாய மக்களும் வாழ்ந்து வரும் இந்த கிராமத்தில் பொதுவான ஒரு பொட்டல் இருக்கிறது. அங்கே தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், தே.மு.தி.க., ம.தி.மு.க., சி.பி.எம்., தேவர் பேரவை, நாயுடு பேரவைக்கென பீடங்கள் எழுப்பப்பட்டு கம்பங்களில் கொடிகள் பறக்கிறது. கட்சி ஆரம்பிச்சு 12 வருஷமாச்சு.. பொது வான இந்த இடத்துல நம்ம கட்சிக் கொடியும் பறந்தா நல்லாயிருக்குமே.. இப்பத்தான் அ.தி.மு.க. கூட்டணின்னு ஆயிப்போச்சு... இங்க நம்ம கூட்ட ணிக் கட்சிக்காரங்க தான் மெஜாரிட்டியா இருக் காங்க... தேர்தலும் வரப் போகுது.. இந்த நேரத்துல சாதி பார்க்க மாட்டாங்க... இத விட்டா சரியான தருணம் வாய்க்காது... நம்ம கொடியவும்  பறக்க விட்ருவோம்...''' என தேவேந்திரகுல மக்கள் கூடிப் பேசி புதிய தமிழகம் கட்சிக்கான கொடிக் கம்பம் ஊன்ற பொதுவான அந்தப் பொட்டலில் குழி தோண்டியிருக்கிறார்கள்.  '

வழக்கத்துக்கு மாறா என்ன இது? கொஞ் சம்கூட நல்லாயில்ல...'என கட்சி பாகுபாடில்லாமல் ஆளும் கட்சி, எதிர்க் கட்சி, (சி.பி.எம். தவிர்த்து) பிற தோழமைக் கட்சியினர் என்று அத்தனை பேரும் தேவேந் திரர்களுக்கு எதிராக குரல் கொடுத்திருக்கிறார்கள்.   '""நாமெல் லாம் கூட்டணி கட்சிக்காரங்க இல்லையா? நீங்களே எதிர்த்தா எப்படி?'''என்று தேவேந் திரர்கள் அ.தி.மு.க.வினரிடம் நியாயம் கேட்டிருக்கிறார்கள். '""கட்சி, அரசியலை யெல்லாம் காலம் காலமா இருந்திட்டு வர்ற சாதிப் பழக்க வழக்கத்தோட சேர்த்து  குழப்பாதீங்க.. நீங்க எப்படி எங்களுக்கு சரி சமமா ஆவீங்க? உங்க கொடியும் இந்த மந்தையில பறக்குதுன்னா எங்களுக்கு என்ன மரியாதை?''' என்று எதிர்ப்பில் மேலும் தீவிரம் காட்டியிருக்கிறார்கள்.

இந்த விவகாரம் மாவட்ட நிர் வாகத்தின் கவனத்துக்குப் போக, ஆர்.டி.ஓ., தாசில்தார், வி.ஏ.ஓ. என அரசு அலுவலர்கள் வந்து அமைதிப் பேச்சு வார்த்தை நடத்தி 'பிரச்சினை பண்ணாதீங்க.. ஒற்றுமையாக இருங்க..' என்று அறிவுறுத்தி விட்டுச் செல்ல.. அனைத்துக் கட்சியினரும் ஒன்று சேர்ந்து ஒரு முடிவெடுத்திருக் கிறார்கள்.  'நம்ம கொடிகளோட வரிசைல அந்தக் கொடியா? அது நமக்கு அவமானம்' என்று  கம்பம் உட்பட கொடிகளையும் சேர்த்து அந்தந்த கட்சியினரே கழற்றியிருக் கிறார்கள். சி.பி.எம். மட்டும் 'தலித் கொடி பறப்பதில் எங்களுக்கு ஆட்சேபணை யில்லை...'என்பதில் உறுதியாக இருந்து தங்கள் கொடியைக் கழற்றவில்லை.

பிற சமுதாயத்தினரின் கருத்தை அறியச் சென்றபோது அ.தி.மு.க.காரரான சிங்கராஜைக் கை காட்டினார்கள்.

""இங்கே சண்டை, சச்சரவு எதுவும் இல்ல.. ஒரு கட்சிக்காரன் கொடிய இன் னொரு கட்சிக்காரன் கழட்டுனாத்தான் குற்றம்.  அப்படி ஒண்ணும் நடக்கலியே..? அ.தி.மு.க. கொடியை எங்க கிளைச் செயலாளரும், துணைச் செயலாளரும் சேர்ந்துதான் கழட்டுனாங்க..  யாரையும் கழட்டச் சொல்லியோ, யாரையும் கொடியேத்தக் கூடாதுன்னோ அ.தி.மு.க.காரங்க இங்க  ஒண்ணும் பிரச் சினை பண்ணலியே..?  இதுல யாரையும் யாரும் குற்றம் சொல்ல முடியாது''  என்று சிரித்தார்.

கொடியேற்றுவதில் ஆர்வமாக இருந்த  தேவேந் திரர்களோ...

""டாக்டர் கிருஷ்ணசாமியே பிரச்சினை வேண்டாம்.. மாவட்டத் தலைவர் அங்கே கொடியேற்ற வரமாட் டாருன்னு சொல்லிட்டாரு.. எங்க சாதி கசக்குது.. எங்க ஓட்டு மட்டும் இனிக்குதாக்கும்.. டாக்டரே சொன்னாலும் இந்த ஊருல எங்க ஒரு ஓட்டு கூட அ.தி.மு.க.  கூட்டணி வேட்பாளருக்கு விழாது.. தி.மு.க.வுக்கும் விழாது.. மதுரைல ஜெயலலிதா நடத்திய ஆர்ப்பாட்டத்துக்கு அழையா விருந்தாளியாத்தான் போனோம். அங்க போயி எங்க கொடியக் கட்டினோம்.  எங்க கட்சிய தீண்டத்தகாத கட்சியால்ல நெனக்கிறாங்க.. இது எங்களோட தன்மானப் பிரச்சினை. அவங்களுக்கு பாடம் கற்பிப்போம்...'' என்று ஒருமித்த குரலில் சொன்னவர்கள்  குறிப்பிட்ட நாளான 19-ம் தேதி சீதா என்ற 13 வயதுச் சிறுமியை வைத்து  புதிய தமிழகம் கட்சிக் கொடியை ஏற்றிவிட்டே ஓய்ந்தார்கள்.

அரைக் கம்பத்தில் கட்சிக்கொடி பறந்தால் துக்கம் அனுஷ்டிப்பதாகச் சொல்வார்கள்.  கொடியை இறக்கி, கொடிக் கம்பத்தையும் பிடுங்கினால் என்ன அர்த்தம்? கொள்கையே இல்லாமல், சாதிகளை மட்டுமே தூக்கிப் பிடிக்கின்ற தங்கள் கட்சிக்காரர்களின் செயலுக்கு அரசியல் கட்சிகள்தான் விளக்கம் சொல்ல வேண்டும். 

-சி.என்.இராமகிருஷ்ணன்
Share this article :

+ comments + 1 comments

1 January 2011 at 21:09

இந்த ஊருக்கு தளபதிஜான்பாண்டியன் வந்தால் தான்சரியான தீர்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன் ராமமூர்த்தி சேர்ந்தகோட்டை பேரையூர்

Post a comment
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்