சென்னை, டிச.30: ஆங்கிலத்தில் ஷெட்யூல்டு கேஸ்ட் என்ற சொல்லுக்கு தற்போது ஆதிதிராவிடர் என்று பயன்படுத்துவதை மாற்றி வேறு ஒரு சிறந்த மாற்றுப் பெயரை தேர்ந்தெடுப்பதற்காக அமைக்கப்பட்ட செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி தலைமையிலான குழுவின் முதல் கூட்டம் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் குழுவின் துணைத் தலைவரான ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் தமிழரசி, உறுப்பினர்களான சட்டத்துறைத் செயலர் தீனதயாளன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் முதன்மைச் செயலர் விஷ்வநாத் ஷெகாவ்கர், ஆதிதிராவிட நலத்துறை ஆணையர் சிவசங்கரன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டதாக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
+ comments + 1 comments
scheduled caste என்பதன் தமிழ் ஆக்கம் பட்டியல் ஜாதி என்று தான் பொருள் படும்
ஊனமுற்றோரை மாற்று திறனாளி என்று அழைக்க வேண்டும் என்று சொல்கிற அரசு
ஏன் பட்டியல் ஜாதி இனரை தலித் , ஹரிஜன் , தாழ்த்தபட்டவன் , ஆதி திராவிடர் என்று அழைkகிறார்கள்