Home » » இரும்பு மனிதன்! ---உமாசங்கர் ஐ.ஏ.எஸ்

இரும்பு மனிதன்! ---உமாசங்கர் ஐ.ஏ.எஸ்

Written By DevendraKural on Saturday, 1 January 2011 | 09:32

 நேர்மை ஐ.ஏ.எஸ்.,

 

ரும்பு மனிதன்! அதிகார அரசியலுக்கு வளைந்துகொடுக்கும் நாணல்களே அரசு அதிகாரிகள் என்பதைப் பொய்ப்பித்த உறுதி உமாசங்கரின் அடையாளம். 'நான் நன்றாகப் படித்து இருந்தால், ஐ.ஏ.எஸ்., ஆகி, அமைச்ச ரின் கார் கதவைத் திறந்துவிட்டுக்கொண்டு இருந்திருப்பேன்!' என்று ஓர் அமைச்சர் திருவாய் மலர்ந்த அதே சமயத்தில், முரண்டு பிடித்த தமிழக முதல் அமைச்சரைத் தன் வழிக்குக் கொண்டுவந்த 'சாமான்ய' ஐ.ஏ.எஸ்., அதிகாரி. அ.தி.மு.க-வின் 91-96 ஆட்சிக் காலத்தில் சுடுகாட்டுக் கொட்டகை ஊழலுக்குச் சிதை மூட்டியது உமாசங்கரின் முதல் ஹிட். தொடர்ந்த தி.மு.க. ஆட்சியில் கருணாநிதி தான் பிறந்த திருவாரூரைப் புதிய மாவட்டமாக அறிவித்தபோது, இவரைத்தான் அங்கு ஆட்சியராக அமர்த்தினார். அடுத்த அ.தி.மு.க ஐந்தாண்டு ஆட்சிக் காலம் முழுக்க சேலத்தில் அமைதி வாசம். மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் எல்காட், கேபிள் டி.வி. கார்ப்பரேஷன், சிறுசேமிப்புத் துறை போன்ற பந்தாட்டங்களைத் தொடர்ந்து, உமாசங்கரைத் தற்காலிகமாகப் பணிநீக்கியது தமிழக அரசு. 'வளைந்து கொடுக்காதது, இஷ்டத்துக்கு இயங்காதது' போன்றவை காரணங்களாக உலவின. உமாசங்கருக்கு ஆதரவாக சென்னை முதல் நெல்லை வரை ஆர்பாட்டங்கள், கருத்தரங்கங்கள் என்று ஆதர வுக் குரல்கள் அரசின் கழுத்தை நெரித்தன. 'தேர்தல் நேரம்' என்று தயங்கினார்களோ, 'நேர்மையாளன்' என்று உணர்ந்தார்களோ உமாசங்கருக்கு மீண்டும் பதவி தரப்பட்டது.  சாதித்துக் காட்டினார் உமாசங்கர்!

Share this article :

+ comments + 1 comments

28 January 2011 at 08:15

உமாசங்கர் I.A.S., ஆரம்பகாலத்தில் இருந்தே தி.மு.க.அனுதாபிதான்.
அவர் திருவாரூர் மாவட்ட ஆட்சியாளராக இருக்கவேண்டும் என்று கலைஞர் கொடுத்த பெட்டி இன்றும் ஞாபகத்தில் இருக்கின்றது.
மாவட்ட ஆட்சியாளராகப் பல சாதனைகளை செய்தார்.கள்ளச் சாராய ஒழிப்பில் இரவுடிகளிடம் கேட்ட பெயர் வாங்கிக் கொண்டார்.
உமாசங்கர் ஒரு கிறிஸ்துவர் என்பதால் அவர் உண்மைகளை அப்படியே ஒப்புக் கொண்டு பேட்டியும் அளித்திருந்தார்.
எந்த நல்ல அதிகாரியையும், எந்த அரசும் பழி வாங்கக் கூடாது என்பதற்கு உமாசங்கர் மீதான நடவடிக்கை ஓர் உதாரணம்.
உங்கள் இனத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் உமாசங்கர் போல் வாழ்வில் முன்னேறவேண்டும்.
அதே சமயத்தில் உமாசங்கர், கிருஸ்துதாஸ் காந்தி போன்றவர்களுக்கு ஒப்புக்கு ஒரு பதவியை அரசு கொடுத்திருப்பதை
தேவர்சங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது.

"எல்லோரும் இன்புற்று இருக்க வேண்டுவனே அல்லாமல்
யாதொன்றும் வேண்டேன்."
http://thevarsangam.blogspot.com

Post a Comment
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்