Home » » தேவேந்திரகுல வேளாளர் பெயர் மாற்ற கோரிக்கை: நீதிபதி ஜனார்த்தனம் தலைமையில் குழு

தேவேந்திரகுல வேளாளர் பெயர் மாற்ற கோரிக்கை: நீதிபதி ஜனார்த்தனம் தலைமையில் குழு

Written By DevendraKural on Wednesday, 26 January 2011 | 07:07

செய்திக்குறிப்பில், குடும்பர், பண்ணாடி, காலாடி, கடையர், தேவேந்திரகுலத்தார், பள்ளர், வாதிரியார் ஆகிய ஏழு பிரிவுகள் தேவேந்திர குல வேளாளர் என்ற சமூகத்தின் உட்பிரிவுகள் ஆகும் என்றும்; அந்த உட்பிரிவுகள் அனைத்தையும் ஒன்றாக இணைத்து, தேவேந்திர குல வேளாளர் என்று பெயர் மாற்றம் செய்து ஆணையிட வேண்டும் என்றும்; தேவேந்திரர் தன்னார்வ அறக்கட்டளையின் தலைவர் ம. தங்கராஜ் அளிக்கப்பட்ட கோரிக்கை கடையநல்லூர் சட்டப் பேரவை உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் மூலமாக தமிழக அரசின் கவனத்திற்கு வந்துள்ளது.   
 
இந்தக் கோரிக்கை குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் கலைஞர் தலைமையில் நடைபெற்ற கலந்தாலோசனை கூட்டத்தில், நிதியமைச்சர் அன்பழகன், உயர் கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி, செய்தித் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி, ஆதி திராவிடர் நலத் துறை அமைச்சர் ஆ. தமிழரசி, பால்வளத் துறை அமைச்சர் உ. மதிவாணன், எஸ். பீட்டர் அல்போன்ஸ், எம்.எல்.ஏ., தலைமைச் செயலாளர், நிதித் துறை செயலாளர், ஆதி திராவிடர் நலத் துறைச் செயலாளர், ஆதி திராவிடர் நலத் துறை ஆணையர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


இந்தக் கோரிக்கையைச் சட்ட ரீதியாகப் பரிசீலித்து நடைமுறைப்படுத்திட; நீதியரசர் ஜனார்த்தனம் அவர்களைக் கொண்ட ஒரு நபர் குழு அமைத்து, பரிந்துரை பெறலாம் என்று முதல்வர் கலைஞர் இன்று (26 1 2011) ஆணையிட்டுள்ளார். இவ்வாறு தமிழக அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது

Share this article :

+ comments + 1 comments

28 January 2011 at 08:23

சில மாவட்டங்களில், காலாடி, சேர்வை, கோலியர்
போன்ற பல பிரிவுகள் இருக்கின்றனர்.
அது சரி, இவைகளை சேர்ப்பதால் உங்களுக்கு என்ன இலாபம்.
கல்வியில்,
வேலை வாய்ப்பில்,
பொருளாதாரத்தில்
முன்னேற ...
கிராமப் புற இளைஞர் வாழ்வில் வாய்ப்புகளை உருவாக்க
முயற்சி செய்யுங்கள்.
அடிதடி
மது
சினிமா மோகம்
மூட நம்பிக்கை போன்ற
சமூக அவலங்களில் இருந்து
புதிய பாதை அமைதுக்க் கொள்ள
நல்ல தளம் அமையுங்கள்.
உங்களால் முடியும்.
http://thevarsangam.blogspot.com

Post a Comment
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்