Home » » மலையாள ஆலுக்காஸ் கடைகள் மீது தாக்குதல் :800 போராட்டக்காரர்கள் கைது

மலையாள ஆலுக்காஸ் கடைகள் மீது தாக்குதல் :800 போராட்டக்காரர்கள் கைது

Written By DevendraKural on Wednesday, 9 March 2011 | 00:54



தஞ்சையில் மலையாள ஆலுக்காஸ் கடைகள் மீது தாக்குதல் நடத்திய போராட்டக்காரர்கள் 800 பேர் கைது
செய்யப்பட்டனர்.

 

தமிழ்நாட்டில்  மலையாளிகள் , மார்வாடிகளின் ஆதிக்கத்தால் தமிழர்களின் தொழில், வணிகம், வேலை பறிபோகிறது என்று தமிழ் தேச பொதுவுடமை கட்சியின் பொதுச்செயலாளர் பெ.மணியசரன் கண்டனம் தெரிவித்திருந்தார்.

அவர் மேலும்,  இந்த ஆதிக்கத்தை எதிர்த்து இன்று போராட்டம் நடைபெறுவதாக அறிவித்திருந்தார்.
 
 அதன்படி மலையாளியான ஆலுக்காஸ் ஜூவல்லரி நிறுவனத்தை கண்டித்து , தஞ்சையில் உள்ள ஆலுக்காஸ்
ஜூவல்லரிகள்  முன்பு இன்று தமிழ் தேச பொதுவுடமை கட்சியின் மாவட்ட செயலாளர் பழ.ராசேந்திரன் தலைமையில்  போராட்டம் நடைபெற்றது.


போலீசாரின் தடையை மீறி,  ''தமிழக தங்க நகைத்தொழிலை மார்வாடிகளும்,மலையாளிகளும், வங்காளிகளும்

கைப்பற்றிக்கொண்டு நம் பொற்கொல்லர்களை வீதிக்கு விரட்டி விட்டார்கள்.



வறுமை தாங்காமல் நம் பொற்கொல்லர்கள் தற்கொலை செய்துகொண்டார்கள்'' என்று கோஷமிட்டபடியே  பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பிரான்சிஸ் ஆலுக்காஸ் நகைக்கடை மீது கல்வீசினர்.

இந்த கல்வீச்சில் ஆலுக்காஸின் கடைக்கண்ணாடிகள் உடைந்தன.  போலீஸார் தடுக்க முயற்சித்ததால் கடை வாசலிலேயே முற்றுகை போராட்டம் நடத்தினர்.

தொடர்ந்து இன்னொரு குழுவினர்   பழைய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு பஸ் மறியல் செய்தனர்.   ஜோஸ் ஆலுக்காஸ் கடை முன்பும் மறியல் செய்தனர்.   கடையை முற்றுகையிட நெருங்கியபோது போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.


போராட்டக்காரர்கள் ஆவேசமாக வருவதைப்பார்த்து ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனம் கதவுகளை மூடிக்கொண்டது.


இந்த போராட்டத்தில் ஈடுபட்ட பொற்கொல்லர்கள் மற்றும் தமிழ் தேச பொதுவுடமை கட்சியினர் சுமார் 800க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு தஞ்சை கீழவாசல் அன்னை திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.


''இன்று ஆலுக்காஸ் நாளை மார்வாடி மற்றும் தமிழகத்தை சுரண்ட வந்தவர்களை விரட்டுவோம்'' என்று போராட்டக்காரர்கள்
வேனில் ஏறும்போது ஆவேசமாக கத்தினார்கள்.பதட்டம் நிலவுவதால் தஞ்சையை சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்