Home » » ஈழத்தமிழர்கள் மேல் நடத்தப்பட்ட போர் குற்றம் தொடர்பான புத்தகங்களை கனடாவுக்கு அனுப்பப்பட்டபோது, கொழும்பு சுங்கத்துறையினர் சட்ட விரோதமாக பறிமுதல்

ஈழத்தமிழர்கள் மேல் நடத்தப்பட்ட போர் குற்றம் தொடர்பான புத்தகங்களை கனடாவுக்கு அனுப்பப்பட்டபோது, கொழும்பு சுங்கத்துறையினர் சட்ட விரோதமாக பறிமுதல்

Written By DevendraKural on Thursday, 19 May 2011 | 22:59

ஈழத்தமிழர்கள் மேல் நடத்தப்பட்ட போர் குற்றம் தொடர்பான புத்தகங்களை கனடாவுக்கு அனுப்பப்பட்டபோது, கொழும்பு சுங்கத்துறையினர் சட்ட விரோதமாக பறிமுதல்

இலங்கை அரசால் நடத்தப்பட்ட ஈழத்தமிழர்கள் மீதான படுகொலைகள் மற்றும் போர் குற்றம் தொடர்பான ஆவணங்களை உள்ளடக்கிய புத்தகங்களான – 'தமிழினப் படுகொலைகள்' மற்றும் 'என்ன செய்யலாம் இதற்காக?' என்ற புத்தகங்கள் தமிழகத்தில் வெளியிடப்பட்டு விற்பனையாகி வருகின்றன.

ஐ.நா. நிபுணர் குழுவினர் அன்மையில், இலங்கை அரசு கடைசி கட்ட போரின் போது, ஈழத்தமிழர்கள் மீது போர் குற்றம் புரிந்துள்ளனர் என்பதற்கான நம்பக தன்மை கொண்ட ஆதராங்களைக் கொண்டு நிருபித்துள்ளனர். இலங்கை அரசு பொறுப்புள்ள வகையில் நம்பக தன்மையுடன் இக்குற்றங்களை பற்றிய விசாரணையை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அழுத்தும் கொடுக்கப்பட்டுள்ள நிலையும், உலக நாடுகள் இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதை கண்டு அஞ்சி வரும் வேளையில், இப்புத்தகங்களை கனடாவுக்கு அனுப்பப்பட்டதை தெரிந்து கொண்ட, கொழும்பு சுங்கத்துறையினர் புத்தங்கள் அடங்கிய 45 பெட்டிகளை பறிமுதல் செய்து, தடை செய்யப்பட்ட புத்தகங்கள் என பொய் காரணம் கூறயுள்ளனர்.

தமிழினப் படுகொலைகள் என்ற புத்தகம், 60 ஆண்டுகளாக ஈழத்தமிழர்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைகள் குறித்த முழு புள்ளி விவரங்களை கொண்டுள்ளது. வுடகிழக்கு மனித உரிமை செயலகத்தால் தொகுக்கப்பட்டு, தமிழகத்தில் மனிதம் பதிப்பகத்தால், இப்புத்தகம் கடந்த 2009-யில் ஆங்கிலத்திலும், தமிழிழும் அச்சிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தின் அனைத்து புத்தக கடைகளிலும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில், கனடா, நார்வே மற்றும் ஐரோப்பா-விலும் வெளியிடப்பட்டு விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. தமிழினப் படுகொலைகள் புத்தகம், டம்ளினில் நடத்தப்பட்ட பன்னாட்டு நீதியரசர்களால் இலங்கை போர் குற்றங்கள் தீர்ப்பாயத்தில் ஒரு குற்ற ஆவணமாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.

என்ன செய்யலாம் இதற்காக? என்ற புத்தகம் அன்மையில் சென்னையில் வெளியிடப்பட்டது. இதை பிரபாகரன் என்பரால் தொகுக்கப்பட்டு, மதுரையில் உள்ள பென்னி குயிக் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இப்புத்தகத்தில், ஈழத்தில் நடைபெற்ற போர் குற்றங்கள் தொடர்பான படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இப்புத்தகமும் தமிழகத்தில் விற்பனையாகி வருகிறது.

இந்த இரண்டு புத்தகங்களை கனடாவில் உள்ள தமிழர்களுக்கு கிடைக்க வேண்டி, 45 பெட்டிகளில், சென்னையில் உள்ள அக்னி சுப்பிரமணியத்தை தலைவராக கொண்டு இயங்கும், மனிதம் இன்டர்நேசனல் என்ற வெளிநாட்டுக்கு பொருட்களை அனுப்பு உரிமம் வைத்துள்ள நிறுவனத்தின் மூலமாக, எல்லாவித இந்திய சுங்கத்துறை ஆவணங்களை பெற்று, முறையாக கடந்த 9-ம் தேதி கப்பல் மூலமாக கனடாவுக்கு அனுப்பப்பட்டது. அக்கப்பல், 11-ம் தேதி கொழும்பு துறைமுகத்திணுடாக, கனடா-வுக்கு புத்தகங்கள் கொண்டு செல்லப்பட வேண்டும். இவ்வேளையில், கொழும்பு துறைமுகத்தையடைந்த கப்பலின் புத்தக பெட்டகங்களை இலங்கை சுங்கத்துறையினர், 14-ம் தேதி சோதனையிட்டு, தடை செய்யப்பட்ட புத்தகங்கள் என பொய்யான காரணத்தை கூறி, புத்தகங்கள் அனைத்தையும் பறிமுதல் செய்து வைத்துள்ளனர்.

இந்திய சுங்கத்துறையினரின் எல்லாவித சோதனைகளையும் முறையாக பார்க்கப்பட்டு, முறையான அனுமதியுடன், நேரிடையாக கனடாவுக்கு அனுப்பப்பட்ட ஏற்றுமதி புத்தகங்களை சுமர்ந்து சென்ற கப்பல், கொழும்பு ஊடாக செல்லும் போது, இலங்கை சுங்கத்துறையினர் பன்னாட்டு சட்டங்களை மதிக்காமல், கொழும்பில் சோதனை செய்துள்ளனர். சோதனையிட்டப் பொருட்களையும், பொய்யான காரணங்களை கூறி, கனடாவுக்கு புத்தங்களை அனுமதிக்காமல் பறிமுதல் செய்து நிறுத்தி வைத்துள்ளனர். இது பன்னாட்டு சட்டங்களின்படி குற்றமாகும்.

"இலங்கை அரசு, உடனடியாக பொருட்களை கனடாவுக்கு விடுவிக்காதபட்சத்தில், இலங்கையின் மீது பன்னாட்டு கடல் வணிக சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்", என்று சென்னையில் உள்ள மனிதம் இன்டர்நேசனலின் உரிமையாளர் திரு. அக்னி சுப்பிரமணியம் தெரிவித்தார்.
 

--
www.manitham.net
manitham@gmail.com

Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்