Home » » IIT-JEE:பீகாரின் 'சூப்பர் 30'-ல் 24 ஏழை மாணவர்கள் தேர்ச்சி

IIT-JEE:பீகாரின் 'சூப்பர் 30'-ல் 24 ஏழை மாணவர்கள் தேர்ச்சி

Written By DevendraKural on Wednesday, 25 May 2011 | 09:19

பீகாரில் 'சூப்பர் 30' திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற 30 ஏழை மாணவர்களில் இம்முறை 24 பேர்  ஐ.ஐ.டி. கூட்டு நுழைவுத் தேர்வில் (IIT - JEE) தேர்ச்சி பெற்றனர்.

இளம் கணித வல்லுனர் ஆனந்த் குமாரால் நிறுவப்பட்ட ராமானுஜர் கணிதப் பள்ளி மையத்தின் மாணவர்கள் அனைவருமே பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியுள்ளவர்கள்.

திறமையின் அடிப்படையில் ஏழை மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, இலவசமாக உரிய பயிற்சிகள் அளித்து, அவர்களை ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வில் தேர்ச்சி அடைய வித்திடுவதே 'சூப்பர் 30' திட்டத்தின் முதன்மை நோக்கம்.

பீகாரின் பாட்னாவில் கடந்த 2002 ஆம் ஆண்டு இந்தத் திட்டத்தை உருவாக்கி தனது 'ராமானுஜன் ஸ்கூல் ஆஃப் மேத்தமெடிக்ஸ்' மூலம் செயல்படுத்தி வருகிறார் ஆனந்த் குமார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக சதமடித்து சாதனை செய்த நிலையில், இம்முறை 6 பேர் வெற்றிப் படியைத் தாண்டவில்லை. 24 பேர் தேர்ச்சி பெற்றனர்.

இதன் மூலம் எட்டு ஆண்டுகளில், 'சூப்பர் 30' மூலம் பயிற்சி பெற்று, ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்களில் சேர்ந்த ஏழை மாணவர்களின் எண்ணிக்கை 236 ஆக உயர்ந்துள்ளது.

இந்த வெற்றி மகிழ்ச்சியைத் தந்தாலும், 6 மாணவர்கள் தடையைத் தாண்ட முடியாமல் போனது சற்று வருத்தத்தை அளிப்பதாக ஆனந்த் குமார் கூறியுள்ளார்.

டைம் மற்றும் நியூஸ் வீக் இதழ்களில் 'சூப்பர் 30' குறித்து பதிவான பின்பு, உலக அளவில் ஆனந்த் குமாரின் கல்விச் சேவை கவனத்தில் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்