Home » » தூக்குத் தண்டனையை ரத்துச்செய்: பெண் தீக்குழித்து இறந்தார் !

தூக்குத் தண்டனையை ரத்துச்செய்: பெண் தீக்குழித்து இறந்தார் !

Written By DevendraKural on Monday, 29 August 2011 | 03:41

ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரின் உயிரை காப்பாற்றக்கோரி தீக்குளித்த இளம்பெண் இறந்தார். காஞ்சி தாலுகா அலுவலகம் நுழைவாயில் முன்பு நேற்று ஓரு இளம்பெண் பெட்ரோல் பாட்டிலுடன் வந்தார். ஞாயிறு என்பதால் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது. பின்னர், பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் அவரது உடல் முழுவதும் வெந்தது.

அக்கம் பக்கத்தினர் உதவியுடன் 108 ஆம்புலென்ஸ் மூலம் காஞ்சி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார்.
தகவலறிந்த சிவகாஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். இதில், காஞ்சிபுரம் அருகே உள்ள ஓரிக்கை என்ற கிராமத்தை சேர்ந்த பரசுராமன் மகள் செங்கொடி (20) என்பது தெரியவந்தது. இவர் தற்போது காஞ்சிபுரம் அருகே உள்ள கீழ்கதிர்பூர் கிராமத்தில் இயங்கிவரும் மக்கள் மன்றத்தில் தங்கி பணியாற்றி வந்தார்.

அங்கு கைப்பற்றப்பட்ட செங்கொடி எழுதிய கடிதத்தில், �இலங்கை தமிழர் பிரச்சனைக்காக தோழர் முத்துக்குமார் உடல் தமிழகத்தை எழுப்பியதுபோல் என்னுடைய உடல் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் உயிரை காக்க பயன்படும் என்ற நம்பிக்கையுடன் நான் செல்கிறேன். இப்படிக்கு செங்கொடி� என கூறியுள்ளார்.
இதுகுறித்து மக்கள் மன்ற நிர்வாகி மகேஷ் கூறுகையில், எப்போதும் இலங்கை தமிழர்கள் விஷயத்தில் செங்கொடி முனைப்புடனும், ஆர்வமுடனும் இருந்து வந்தார். தூக்குத் தண்டனை வழங்கப்பட்ட 3 பேரையும் எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று விரும்பினார்.

எங்களிடம் கூட சொல்லாமல் இப்படி ஒரு காரியத்தை செய்து எங்களையும், தமிழக மக்களையும் மீளா துயரில் ஆழ்த்தி விட்டார்� என கண்ணீர் மல்க கூறினார்.
மருத்துவமனை வளாகத்தில் திரண்ட பெண்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் வந்து கதறி அழுதனர். அவர்கள் கூறுகையில், ��தூக்கு தண்டனைக்கான தேதி வெளியானதும் இடிந்துபோய் காணப்பட்டார். நளினியின் மகள் தனது தாயை பார்த்து 15 ஆண்டுகள் ஆனதாக தொலைக்காட்சியில் பேட்டியளித்த தை பார்த்து கதறி அழுதார். நாங்கள் செங்கொடியை தேற்றினோம்�� என்றனர்.

--------------------------------------------

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 3 தமிழர்களின் உயிர்களை காக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து காஞ்சிபுரத்தில் செங்கொடி எனும் இளம் பெண் தீக்குளித்து தன்னுயிரை தியாகம் செய்த செய்தி கேட்டு அதிர்ச்சியும் அளவற்ற வேதனையும் அடைந்தேன் என ஐயா பழ நெடுமாறன் தெரிவித்துள்ளார். முதல்வரிடம் முறையிடுவது, நீதி மன்றத்தில் வாதாடுவது, மக்களை திரட்டிக் குரல் கொடுப்பது ஆகிய வழிகளில் நாம் இணைந்து ஒன்று பட்டுப் போராடுவதின் மூலமே மூவரின் உயிர்களை காக்க முடியும். நம்மை நாமே அழித்துக் கொள்வதின் மூலம் அதை செய்ய முடியாது என்பதை உணருமாறு அனைவரையும் வேண்டிக் கொள்கிறேன் என ஐயா நெடுமாறன் அவர்கள் அதிர்வுக்கு தெரிவித்தார்.


3 உயிர்களை காக்கத் தொடர்ந்து போராடுவதற்கு பதில் நமது உயிர்களை அழித்துக் கொள்வது என்பது நமது நோக்கத்திற்கே முரணானதாகும். இத்தகைய செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாமென வேண்டிக் கொள்கிறேன் என பழ நெடுமாறன் ஐயா அவர்கள் அறிவித்தல் விடுத்துள்ளார்.
Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்