உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவது குறித்து சத்யமூர்த்தி பவனில் இன்று ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
தங்கபாலு, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், திருநாவுக்கரசர், யுவராஜ் என்று காங்கிரஸின் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் இந்த கூட்டத்திற்கு வந்திருந்தனர்.
தங்கபாலு தனது அறையில் இருந்து ஆலோசனை கூட்ட அரங்கத்திற்கு வந்தார்.
அப்போது, இளைஞர் காங்கிரஸ் முன்னாள் துணைத்தலைவர் டாக்டர் தாஸ்பாண்டியன், இளைஞர் காங்கிரஸ் முன்னாள் பொதுச்செயலாளர் நாகராஜ் ஆகிய இருவரும் ஆலோசனைக்கூட்டத்திற்கு வந்த தங்கபாலுவை வழிமறித்தனர்.
''பரமக்குடி கலவரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் நமது எம்.எல்.ஏக்கள் குரல் கொடுக்கவில்லை.
இது நமக்கு வெட்கக்கேடு . இதற்கு கண்டனத்தீர்மானம் நிறைவேற்றிய பிறகே இந்த கூட்டத்தை துவக்க வேண்டும்'' என்று கடும் வாக்குவாதம் தெரிவித்தனர். இதற்கு பதில் சொன்னால்தான் உள்ளே விடுவோம் என்கிற நிலையில் வழிமறித்து நின்றனர்.
இதனால் அதிருப்தி அடைந்த தங்கபாலு அவர் அறைக்கே திரும்பினார். பின்னர் சமாதானப்படுத்தி அழைத்து வரப்பட்டு கூட்டமும் நடந்து முடிந்தது.