Home » » பரமக்குடி கலவரத்துக்கு கண்டனம்: தேர்தல் புறக்கணிப்பு

பரமக்குடி கலவரத்துக்கு கண்டனம்: தேர்தல் புறக்கணிப்பு

Written By DevendraKural on Thursday, 20 October 2011 | 02:22

ராமநாதபுரம் மாவட்டம் பச்சேரி கிராமத்தை சேர்ந்த பழனிக்குமார் என்ற மாணவர் படுகொலை செய்யப்பட்டதையொட்டி பரமக்குடியில் கலவரம் வெடித்தது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிசூட்டில் 6 பேர் பலியானார்கள்.


இந்த சம்பவங்களை கண்டித்து உள்ளாட்சி தேர்தலின் போது மாவட்ட ஊராட்சி உறுப்பினர், ஒன்றிய குழு உறுப்பினர், வார்டு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளுக்கு பச்சேரி கிராமத்தினர் யாரும் நேற்று ஓட்டுபோடவில்லை.


இதனால் பச்சேரி வாக்குச்சாவடியில் 859 ஓட்டுகளும் பதிவாகவில்லை. தேர்தல் அலுவலர்கள் மற்றும் போலீசார் மட்டும் வாக்குப்பதிவு மையத்தில் அமர்ந்து இருந்தனர்.

Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்