Home » » வீட்டில் சாப்பாடு இருந்தபோது எதற்காக ஓட்டலுக்குச் சென்றார்கள்...போலீஸ் விசாரணை

வீட்டில் சாப்பாடு இருந்தபோது எதற்காக ஓட்டலுக்குச் சென்றார்கள்...போலீஸ் விசாரணை

Written By DevendraKural on Tuesday, 17 January 2012 | 02:26

தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் பசுபதிபாண்டியன் கடந்த 10 ஆம் தேதி திண்டுக்கல்லில் வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் 3 பேர் ஈடுபட்டதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

கொலை தொடர்பாக நெல்லை மாவட்டம் வள்ளியூர் கோர்ட்டில் ஆறுமுகச்சாமி, அருளானந்தம் ஆகிய 2 பேர் கடந்த சில தினங்களுக்கு முன் சரணடைந்தனர். இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் . இதில் அருளானந்தம் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சுபாஷ் பண்ணையாரின் சொந்த ஊரான முள்ளக்காடைச் சேர்ந்தவர் ஆவார்.

சுபாஷ் பண்ணையாரின் தந்தை அசுபதி, தாத்தா சிவசுப்பிரமணிய நாடார் ஆகியோர் பசுபதி பாண்டியன் தரப்பினரால் கொலை செய்யப்பட்டவர்கள். இதற்குப் பழிக்குப் பழி வாங்க பசுபதி பாண்டியன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் .என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சரணடைந்தவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்தனர்.

ஆனால் அவர்களை காவலில் எடுத்து விசாரிக்கும் போலீசாரின் முடிவில் தற்போது பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவர்கள் 2 பேரும் சரணடைந்தது 12ஆம் தேதி. ஆனால், கோர்ட்களுக்கு 13 ஆம் தேதி முதல் பொங்கல் பண்டிகை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறை 17 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால், 5 நாட்கள் வரை அவர்களை காவலில் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது தெரிந்து தான் திட்டமிட்டு சரணடைந்திருக்கலாம் என தெரிகிறது.




சுபதி பாண்டியனின் பாதுகாப்புக்காக இருந்த 20 பேரை போலீசார் கொலை நடந்த சிறிது நேரத்தில் பிடித்து, தனி இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சரணடைந்தவர்களுக்கும் பிடித்து வைக்கப்பட்டுள்ள 20 பேருக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதாக என விசாரிக்க வேண்டுமானால் சரணடைந்த 2 பேரை காவலில் எடுத்து விசாரித்தால்தான் உண்மை வெளிவரும். மேலும் சரணடைந்தவர்கள் உண்மை குற்றவாளிகள்தானா என்ற சந்தேகமும் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.

பசுபதி பாண்டியனுக்கு பாதுகாப்பாக இருப்பவர்களுக்கு எப்போதும் வீட்டில் தான் 3 வேளையும் உணவு வழங்குவது வழக்கம். ஆனால் கொலை நடந்த அன்று பாதுகாப்புக்கு இருந்தவர்கள் அனைவரும் சாப்பிட ஓட்டலுக்குச் சென்றதாக போலீஸ் விசாரணையின் போது தெரிவித்துள்ளனர்.

ஆனால் பாதுகாப்புக்கு இருந்தவர்கள் சாப்பிடுவதற்காக அன்றைய தினம் அவரது வீட்டில் உணவு தயாரிக்கப்பட்டு சாப்பிடாமல் அப்படியே இருந்ததை போலீசார் பின்னர் தான் கண்டுபிடித்தனர்.

இதனால் பாதுகாப்புக்கு இருந்தவர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் அதிகரித்துள்ளது. வீட்டில் சாப்பாடு இருந்தபோது எதற்காக ஓட்டலுக்குச் சென்றார்கள் என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

எனவே பசுபதியின் கூட்டாளிகளே எதிரிகளுக்கு அவரை காட்டிக் கொடுத்திருக்கலாம் அல்லது கூட்டாளிகளுக்கும் கொலையில் தொடர்பு இருக்கலாம் என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

போலீசார் விசாரணையில் உள்ள 20 பேரில் 2 பேர் சகோதரர்கள் ஆவர். இந்தச் சகோதரர்கள் திண்டுக்கல்லைச் சேர்ர்ந்த போலீஸ் ஏட்டுவின் மகன்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அருகேயுள்ள செல்வராஜபுரத்தைச் சேர்ந்தவர் துரைராஜ் இவரது மகன் விக்னேஷ் பசுபதி பாண்டியனிடம் பல ஆண்டுகள் வேலை பார்த்து வந்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னர் வேலை வேண்டாம் என சொந்த ஊருக்கு வந்த்தாதக தெரிகிறது. திண்டுக்கல் போலீஸார் இவரையும் மேலும் சிலரையும் விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

கொலை தொடர்பாக நெல்லை மாவட்டம் வள்ளியூர் கோர்ட்டில் ஆறுமுகச்சாமி, அருளானந்தம் ஆகிய 2 பேர் கடந்த சில தினங்களுக்கு முன் சரணடைந்தனர். இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் . இதில் அருளானந்தம் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சுபாஷ் பண்ணையாரின் சொந்த ஊரான முள்ளக்காடைச் சேர்ந்தவர் ஆவார்.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரி செல்வராஜபுரத்தைச் சேர்ந்த துரைராஜ் மகன் விக்னேஷை போலீசார் விசாரணைக்காக வியாழக்கிழமை அழைத்துச் சென்றனர். பசுபதிபாண்டியனின் தீவிர ஆதரவாளரான இவர், அவருடன் பல ஆண்டுகள் இருந்தாராம்.

கொலைச் சம்பவத்தில் பசுபதி பாண்டியனுடன் இருந்தவர்கள் சம்பந்தப்பட்டுள்ளனரா என்பது குறித்து திண்டுக்கல் போலீ
சார் பலரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதன் பேரில், விக்னேஷை போலீசார் அழைத்துச் சென்றதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்