Home » » பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் போலீசார் விசாரணை

பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் போலீசார் விசாரணை

Written By DevendraKural on Saturday, 21 January 2012 | 10:37

பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் சரணடைந்தவர்களிடம் போலீசார் விசாரணை

 

திண்டுக்கல், ஜன.20 - பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் கோர்ட்டில் சரணடைந்த இருவரிடம் கோர்ட் உத்தரவின் பேரில் போலீசார் கஸ்டடியில் எடுத்து விசாரணை செய்து வருகின்றனர். தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் பசுபதி பாண்டியன் கடந்த 10ம் தேதியன்று தனது வீட்டிலேயே மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை கைது செய்யும்படி மாவட்ட எஸ்.பி. ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார். இதனையடுத்து பசுபதி பாண்டியனின் உறவினர்கள், பாதுகாவலர்கள், அருகில் வசிப்போர் என சுமார் 20க்கும் மேற்பட்டோரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில் நெல்லை மாவட்டம் வள்ளியூர் கோர்ட்டில் இடையார்தவணை ஊரைச் சேர்ந்த ஆறுமுகசாமி, தூத்துக்குடி மாவட்டம் முல்லக்காடு பகுதியைச் சேர்ந்த அருளானந்தம் ஆகிய இருவரும் கடந்த 12ம் தேதி சரணடைந்தனர். 

அவர்களை போலீஸ் காவலில் விசாரிக்க திண்டுக்கல் ஜே.எம். 2 கோர்ட்டில் தாடிக்கொம்பு போலீசார் மனுத்தாக்கல் செய்தனர். அம்மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நேற்றுமுன்தினம் 18ம் தேதி மேற்படி இருவரையும் மாஜிஸ்திரேட் லதா முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினர். போலீசார் துன்புறுத்துவார்கள் என மாஜிஸ்திரேட்டிடம் மேற்படி இருவரும் முறையிட்டனர். இதனையடுத்து எழுத்துப்பூர்வமாக மனுதாக்கல் செய்யுமாறு போலீசாருக்கு மாஜிஸ்திரேட் லதா உத்தரவிட்டு வழக்கு விசாரணை நாளை (நேற்று) நடைபெறும் என்று தள்ளி வைத்தார்.

நேற்றுக்காலை ஆறுமுகச்சாமி மறறும் அருளானந்தத்தை போலீசார் மாஜிஸ்திரேட் லதா முன்புறம் ஆஜர்படுத்தினர். போலீஸ் காவலில் விசாரணை செய்ய 8 நாட்கள் தேவையென தெரிவித்திருந்தனர். ஆனால் மாஜிஸ்திரேட் 3 நாட்கள் மட்டும் அனுமதியளித்து போலீசார் விசாரணை நடத்திக் கொள்ளலாம் எனவும், வருகிற 22ம் தேதி மதியம் 1.45 மணியளவில் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டுமெனவும் உத்தரவிட்டார்.

இதனையடுத்து மேற்படி இருவரையும் ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்