Home » » சாதியத்திடம் மண்டியிடும் மனிதநேயம்.....சாதியத்தின் பின்னணியில் நடந்த கொடூரம்

சாதியத்திடம் மண்டியிடும் மனிதநேயம்.....சாதியத்தின் பின்னணியில் நடந்த கொடூரம்

Written By DevendraKural on Thursday, 9 February 2012 | 19:44

சாதியத்திடம் மண்டியிடும் மனிதநேயம்

ஏற்றத்தாழ்வையே குறிக்கோளாகக்கொண்ட இச்சாதியச் சூழலில், சட்டத்தின் முன் மட்டுமாவது அனைவரும் சமம் என்பதுகூட, எழுத்தளவில்தான் உள்ளதே தவிர யதார்த்தத்தில் இல்லை. அடக்குமுறைக்கு உள்ளாகும் தாழ்த்தப்பட்டமக்களைப் பாதுகாக்க சில சிறப்புச் சட்டங்கள் இருந்தாலும், சராசரி சட்ட வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்வதற்குக்கூட தாழ்த்தப்பட்டமக்களை இச்சாதியச் சமூகம் அனுமதிப்பதில்லை என்பதுதான் உண்மை. இந்நிலையில், நாகரிகமற்ற, மனிதாபிமானமற்ற வன்கொடுமைகளும், கொலைகளும் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படும் போது, அது அதிகாரத்தில் இருக்கும் ஆதிக்க சாதியினரால், தாழ்த்தப்பட்டமக்கள் மீது நிகழ்த்தப்பட்டவை என்று தெரிந்தால், அந்த வழக்கும் விசாரணையும் மழுங்கடிக்கப்பட்டு குற்றவாளிகள் தப்பவிடப்படுகிறார்கள்.

 

தேனி மாவட்டத்தில் கடந்த மே மாதம் 14ம் தேதி எழில்முதல்வன் என்ற கல்லூரி மாணவனும் கஸ்தூரி என்ற B.Ed பட்டதாரியும் கொலை செய்யப்பட்ட வழக்கிலும் இப்படித்தான். பாதிக்கப்பட்டது தாழ்த்தப்பட்ட மக்கள் என்றும் குற்றவாளிகள் ஆதிக்க சாதியினர் என்றும் தெரியவந்ததுமே. இந்த மழுங்கடிப்பு வேலைகள்  ஆரம்பமாகிவிட்டது: மேலும் இந்த வழக்கில் பல அரசு அதிகாரிகளுக்கும் தொடர்புள்ளது என்று தெரியவந்ததும் "முடிந்தது கதை" என்ற அளவில்தான் விசாரணை நடைபெற்றுவருகிறது. தீண்டாமைக் கொடுமைகளும், சாதியக் கொலைகளும் தேனி மாவட்டத்திற்கொன்றும் புதிதில்லை என்றாலும் , பாதிக்கப்பட்டவர்களுக்காகப் போராட இதுவரை எந்த ஒரு முற்போக்கு அமைப்பும் முன்வரவில்லை என்பதுதான் கொடுமை.

 

கொலைசெய்யப்பட்ட எழில்முதல்வன்தான் அவர்கள் குடும்பத்திலேயே பட்டப்படிப்புவரை சென்ற முதல் நபர். கஷ்தூரியும் அவர்களது குடும்பத்தின் முதல் பட்டதாரி. எப்படியோ... ஈராயிராயிரம் வருடங்களாக கல்வி மறுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டுக் கிடந்த இந்த மக்களின் உரிமையில் இந்தத் தலைமுறையின் சாதிவெறியும் மண்ணள்ளிப் போட்டுவிட்டது. 

 


எழில்முதல்வனும் கஷ்தூரியும்

 

 

 

இந்தப்படுகொலை தொடர்பாக,  நான் (மதியவன்), தோழர்கள் பா.சி.முத்துகுமார், சிவமணி, நாசர்கான், தமிழ்மணி,  ஜெயமணி ஆகியோர், பாதிக்கப்பட்ட பெற்றோர்களிடமும் ஊர்மக்களிடமும் கேட்டறிந்த தகவல் மற்றும் பத்திரிகைகளில் வெளியான செய்திகள் அடிப்படையில் இங்கு தொடர்வோம்….

 

தேனிமாவட்டம், கோட்டூர்-ரைச் சேர்ந்த எழில்முதல்வன் மற்றும் கஸ்தூரியும் காணாமல் போனதிலிருந்து  தொடங்குகிறது இந்த வழக்கு. மே 14ம் தேதி காணாமல்போன இவர்களை பற்றி  காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டது. நாட்கள் கடந்தும் எந்தத்தகவலும் இல்லாததால் பெற்றோர்கள் பயத்தில் ஆழ்ந்தனர்.

 

சுருளி check போஸ்ட் ல் 14 ம் தேதி token போட்டு 4 நாட்களாக கேட்பாரற்றுக் கிடந்த எழில்முதல்வன் bike ஐ காவல்துறையினர் பெரிய புலன்விசாரனைக்குப் பிறகு, எழில்முதல்வனின் bike தான் என்று உறுதிசெய்து, பெற்றோருக்குத் தகவல் தெரிவித்தனர். விரைந்துவந்த எழில்முதல்வனின் பெற்றோர்களும் உறவினர்கள் சிலரும் bike நின்றிருந்த வனப்பகுதிக்குள் எழில்முதல்வனை தேட முயன்ற போது வனக்காப்பளர்கள் தடுத்துவிட்டனர். எவ்வளவு கெஞ்சியும் வனப்பகுதிக்குள் அனுமதிக்காததை அடுத்து, வீடுதிரும்பிய எழில்முதல்வனின் உறவினர்கள் அடுத்த நாள் ஊரைக்கூட்டி (கோட்டூர்) விசயத்தைச்சொல்ல, மறுநாள் அதாவது 19ம் தேதி ஊரே திரண்டு சுருளிக்குச் சென்று எழில்முதல்வன் bike நின்றிருந்த வனப்பகுதிக்குள் தேடுவதென முடிவெடுத்தனர்.

அதே போல் முன்னூறுக்கும் மேற்பட்டவர்கள் இரண்டு மற்றும் மூன்று சக்கர வண்டிகளிலும் சுருளிக்குச் சென்றுள்ளனர்.  அன்றும் அதிகாரிகள் மக்களை உள்ளேவிட மறுத்துள்ளனர். மீறி நுழைந்தால் காடுகளையும், காட்டு விலங்குகளையும் சேதப்படுத்துவதாக வழக்குப் போட்டுவிவோம் என்று மிரட்டியுள்ளனர். மக்கள் விடுவதாயில்லை....

 

முடிவோடுதான் வந்துள்ளனர் என்பதை தெரிந்துகொண்ட அதிகாரிகள் "அடர்ந்த வனப்பகுதியில் எங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், வனத் துறையினர் பொறுப்பில்லை" என்று எழுதிக்கொடுப்பவர்கள் மட்டும் உள்ளே செல்லுங்கள் என்றும் பயமுறுத்திப் பார்த்துள்ளனர். காட்டைவெட்டி களனியாக்கி, கொத்துக்காட்டு வேளாண்மை செய்யும் வேளாண்மை மக்கள் அவர்கள் என்பது அதிகாரிகளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான். ஊரே  எழுதிக்கொடுத்துவிட்டு உள்ளே நுழைந்தது. குழுக்களாகப் பிரிந்து தேடியமக்கள், பெரிதாக ஒன்றும் தேடிவிடவில்லை. அதற்குள் பார்த்துவிட்டனர் அந்தக் கொடுமையை.

 

100 அடி பள்ளம் ஒன்றில் எழில்முதல்வன் உடலும், ஒரு மேட்டுப் பகுதியில் கஸ்தூரியின் உடலும் அழுகிய நிலையில் கிடந்தது. கஸ்தூரியின் உடல் ஆடைகள் இல்லாமலும், கைகள் துண்டிக்கப் பட்டும், கால்களில் பல இடங்களில் வெட்டுக்காயங்களுடனும், உடல் முழுவதும் கடித்துக் குதறப்பட்ட நிலையில் கோரமாகக் கிடந்திருக்கின்றது. இருவரின் முகங்களும் மண்ணில் வைத்து அழுத்திப் புதைத்து, குப்புற கிடத்தப்பட்டிருந்ததால், முகப்பகுதியில் எலும்பே மிஞ்சியிருந்தது. எழில்முதல்வனின் ஆடைகளைவைத்தும் கஸ்தூரியின் உடல் அருகில் கிடந்த அவரின் செருப்பை வைத்தும்தான் இருவரும் அடையாளம் காணப்பட்டனர். தகவல் கொடுத்து ஒன்னரை மணி நேரம் கழித்து சாவகாசமாக வந்த அதிகாரிகள், இருவரின் உடல்களையும்  கைப்பற்றி அதே இடத்தில் post mortem செய்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

 

பத்திரிகைகள் எழுதத் தொடங்கிவிட்டன. பத்திரிகையில் வெளியான செய்தி தென் மாவட்டங்களைப் பதட்டத்திற்கு உள்ளாக்கியது. "சுருளி வனப்பகுதியில் மாணவி கற்பழித்துக்கொலை, நிர்வாணமாக உடல் மீட்பு"  என்று செய்திதாள்களில் படித்திருக்கலாம். புகைப்படங்கள் வெளியிடப்படாத சலிப்பில் சிலர் வேறு செய்திகளுக்குகூடத் தாவியிருக்கலாம். எழுதிய பத்திரிகைகள் அனைத்தும் எதோ ஆள் நடமாட்டம் இல்லாத கண்காணாத காட்டுப்பகுதியில் நடந்ததாகவே சித்தரித்தது. 

 

உண்மையில், சுருளி என்பது தேனி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான, பொதிகை மலையில் அமைந்துள்ள, இயற்கை எழில் கொஞ்சும் ஒரு சுற்றுலாத்தளம். இங்குள்ள மூலிகை குணம் கொண்ட சுருளிஅருவியில் குளிப்பதற்கு வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் பல சுற்றுலாப் பயணிகள் வந்துபோகும் வழக்கமான சுற்றுலாத்தளம்தான். சுற்றி இருக்கும் ஊர்களிலுள்ள காதல் இணைகளுக்கும் வார விடுமுறைகளில், இந்த சுருளிதான் சொற்கபூமி.

 

அப்படி வரும் காதலர்களிடம் ஒரு கும்பல் பலகாலமாக, சகல பாதுகாப்புகளுடன்  தன் கைவரிசையைக் காட்டி வந்திருக்கின்றது.  காதலர்கள் மலைப்பகுதிக்குள் நுழையும் நேரம்பார்த்து, வனத்துறைக்குத் தகவல் கொடுப்பதுதான் அப்பகுதியில் உள்ள சில கடைக்காரர்களின் வியாபாரமே. தொடந்து தனக்கு சரியான பங்குதரும் குற்றவாளிக்குத் தகவல் கொடுத்து குற்றத்தை முடுக்கிவிடுவது அப்பகுதி வனத்துறையினரின் கடமை. காதலர்கள் நெருக்கமாக இருக்கும் வேளையில் உள்ளே நுழையும் இந்த கும்பல், "போலீசுக்குத் தகவல் கொடுப்போம்" என்று மிரட்டி, நகைகள் மற்றும் கைபேசிகளை பறித்துக்கொண்டு, சில நேரங்களில் பெண்களை வன்புணர்ச்சியும் செய்துவிடுவார்கள். பங்கு வாங்கிக்கொள்வதால் காவல்துறைக்கு இது பற்றி எதுவுமே தெரியாது. சிக்குபவர்களும் பெரும்பாலும் மாணவ-மாணவிகள் என்பதால், பயந்துகொண்டு வெளியில் சொல்வதில்லை. இதுநாள் வரை வெளியுலகத்துக்குத் தெரியவராத இந்தக் கொடூரங்கள், கஸ்தூரி-எழில்முதல்வன் கொலையில் தெரியவந்துள்ளது.

 

சுருளியில்தான் இந்து அறநிலையத்துறைக்குச்  சொந்தமான புகழ்பெற்ற வேலப்பர் கோயிலும், முப்பத்து முக்கோடி தேவர்களும், சுமார் 48000 ரிஷிகளும் தவம் செய்ததாக சொல்லப்படும் கைலாசநாதர் குகையும் உள்ளது. (இந்த குகைக்குச் செல்லும் பாதையில்தான் கஸ்தூரியின் உடல் கிடந்தது) இங்கு கண்ணுக்குத் தெரியாத சித்தர்கள் வாழ்வதாகவும் நம்பப்படுகிறது, இந்த வனப்பகுதியில் காவியுடையுடன் பல பிடிபடாத சாமியார்கள் சுதந்திரமாத் திரிவார்கள். அவர்கள் கண்ணுக்குத் தெரிவார்கள், அவர்களுக்கும் கண்ணுத்தெரியும். இந்தச் சாமியார்களுக்குத் தெரியாமல் சுருளி வனப்பகுதியில்  எதுவும் நடந்துவிட வாய்ப்பில்லை. எழில்முதல்வன்-கஷ்த்தூரி கொலை பற்றி இந்தச் சாமியார்களில் ஒருவரிடம் கேட்க்கும்போது, சில தீய சக்திகள்தான் இதற்குக் காரணம் என்று தன் கண்டுபிடிப்பைச் சொல்கிறார்.  

 

இந்தக்கொலை தொடர்பாக கைதாகியுள்ள திவாகர் என்பவனும் தங்களிடம் பங்கு வாங்கும் Crime Team police க்கு கைபேசியில் தொடர்புகொண்டு இரண்டுபேரை கஞ்சா போதையில் கொலை செய்துவிட்டதாகச் சொல்லியிருக்கின்றான் , 2 லட்சம் கொடுத்தால் காப்பாற்றுவதாகக் கூறியுள்ளார் அந்தக் காவல்துறை அதிகாரி. திவாகரும் ஒப்புக்கொண்டதால், சம்பவ இடத்திற்கே வந்த காவல்த்துறை அதிகாரி, அடையாளம் தெரியாமல் உடல் அழுகும்வரை வனப்பகுதிக்குள் யாரும் சென்றுவிடாமல் பார்த்துக்கொள்ளுமாறு வனக்காப்பாளர்களிடம் கூறிவிட்டுத்தான் அந்த இடத்தைவிட்டே கிளம்பியுள்ளார். இந்த வனக்காப்பாளரின் விசுவாசம்தான் கோட்டூர் மக்களை வனப்பகுதிக்கு வனப்பகுதிக்குள் செல்லவிடாமல் தடுத்தது.

 

கொலையாளி திவாகர் கொடுத்த வாக்குமூலத்தைப் பார்த்தால், எழில்முதல்வன்-கஸ்தூரியுடன் இன்னொரு காதல் இணைகள் சென்றிருந்ததும், கொலையிலுள்ள சாதியப் பின்னனியும் விளங்கும்.

 

கைது செய்யப்பட்ட கொலையாளி திவாகரின் வாக்குமூலம் இவ்வாறுள்ளது....    

 

"நானும் என் கூட்டளிகளும், மே 14 ம் தேதி  கஸ்தூரியின் தோழியும் அவளது காதலனும் சுருளி வனப்பகுதியில் தனியாக இருப்பதைப் பார்த்தோம். அவர்களை மிரட்டி நகை, செல்போன்களைப் பறித்துக்கொண்டோம்.  கஸ்தூரியின் தோழியை என்கூட்டாளிகள் குகைக்குள் தூக்கிச் சென்றனர். அங்கு அவள் என் காலில் விழுந்து அழுதாள். அவளைப் பார்க்கையில் என் தங்கைபோல் தெரிந்ததால் அவர்கள் இருவரையும் விட்டுவிட்டேன், கஸ்தூரியின் தோழி சொன்ன தகவல்படி, எழில்முதல்வன்-கஸ்தூரி இருவரையும் தேடினோம் அவர்கள் கொஞ்சதூரம் தள்ளி தனியாக இருந்தார்கள். எழில்முதல்வனின் கழுத்தில் நான் அறிவாளைவைத்தேன், அவன் "வேணாம்.. வேணாம்.." என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே, என் கூட்டாளிகள் கஷ்தூரியைத் தூக்கிச்சென்றனர். இதைப்பார்த்த எழில்முதல்வன் என்னைத் தள்ளிவிட முயற்சிசெய்தான். அரிவாளை ஓங்கி அழுத்தியதால் கழுத்து அறுபட்டு, இரத்தம்  குபுகுபுவென கொட்டியது. கொஞ்ச நேரத்தில் உயிர் போயிடுச்சு. எழில்முதல்வன் இறந்துவிட்டதை என் கூட்டாளிகளிடம் சொன்னேன். நாங்கள் பேசியதைப் புரிந்துகொண்ட கஸ்தூரி அலறினாள், "கத்தாதே..." என்று என் கூட்டாளி அவள் காலில் வெட்டினான். நிலைகுலைந்து கீழே விழுந்தாள்.  நான் அவளின் கைகள் இரண்டையும் வெட்டித் துண்டித்துவிட்டு, உயிருக்குக்குப் போராடிக்கொண்டிருந்த கஸ்தூரியைக் கற்பழித்தேன், அப்போது அவள் உயிர் பிரிந்தது".

 

இதுவரை 22  க்கும் மேற்பட்ட பெண்களை கற்பழித்துள்ளதாகவும் திவாகர் தன் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

 

இது சாதியத்தின் பின்னணியில் நடந்த கொடூரம் என்பதை மறைக்கத்தான், எழில்முதல்வன்-கஸ்தூரியுடன் சென்ற இன்னொரு இணையின், விவரங்களை காவல்துறை வெளியிடவில்லை. அவசியம் கருதி இங்கே வெளியிடுகிறேன். இதனால் யாருடைய மனதாவது புண்படுமானால் மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன்.

 

எழில்முதல்வன்-கஸ்தூரியுடன் சென்ற அந்த இன்னொரு இணை, கடமலைக்குண்டு தேவர் சமூகத்தைச் சேர்ந்த ராஜ்குமார், மற்றும் அவரது காதலி பாக்யலட்சுமி. அதே சாதியைச் சேர்ந்த கொலையாளியின் உண்மையான பெயரும் "கட்டத்தேவன்" என்பதுதான், திவாகர் என்பதெல்லாம் சும்மா பேருக்கு. ராஜ்குமாரையும் அவரது காதலியையும் மிரட்டி விசாரிக்கும்போது, ராஜ்குமார் என்பவர் கடமலைக்குண்டைச் சேர்ந்த தன் சாதியைச் சேர்ந்தவர் என்பதைத் தெரிந்துகொண்டதால்தான் அவர்களைத் தப்பிக்கவிட்டுள்ளான் கட்டத்தேவன். எப்படியோ கஞ்சா போதையிலும் சாதியப்பாசம் மட்டும் தெளிவாக இருந்ததால், நல்லபடியாக தப்பித்துவிட்டனர்.

 

ஆனால், இந்த சாதியப் பாசம் கஸ்தூரி-எழில்முதல்வன்  பக்கம் திரும்பும் போது சாதிய வெறியாக மாறியிருக்கிறது. கஸ்தூரி-எழில்முதல்வன் தேனி, கோட்டூரைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட மக்களான பள்ளர் பிரிவைச் சேர்ந்தவர்கள். அதனால்தான் சாதாரணமான நகை பறிக்கும் திருடன், கஞ்சா போதையிலும் சாதிவெறிக்கு விசுவாசமாக , எழில் முதல்வனை கொலை செய்துவிட்டு,  கஸ்தூரியை கைகளை வெட்டித் துண்டித்து, கெண்டைக்கால் மற்றும் முட்டிகளில் வெட்டிக் கொடூரமாகக் கொன்று, உடலில் பலஇடங்களில் கடித்துக் குதறி கற்பழித்துள்ளான் கட்டத் தே.

 

இப்படி இந்த வழக்கு, ஆதிக்க சாதியினரால், தாழ்த்தப்பட்டமக்கள் மீது நிகழ்த்தப்பட்டது என்பதை தெரிந்துகொண்ட காவல்துறை, கட்டத்தேவன் தங்கள் பிடியில் இருந்தும் , மற்றகுற்றவாளிகளைப் பிடிப்பதில் மெத்தனம் காட்டுகிறது. ராஜ்குமாரும் அவரது காதலியும் சக நண்பர்கள் கட்டத்தேவனிடம் மாட்டிக்கொண்டுள்ளதை காவல்த்துறையிடம் ஏன் தெரிவிக்கவில்லை?

ராஜ்குமாருடைய காதலியின் தந்தை ஒரு வனத்துறை அதிகாரி என்பதற்கும்,  கோட்டூர் மக்களை வனப்பகுதிக்குள் அனுமதிக்காததற்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா? காவல்துறை கைது செய்யச் செல்லும்முன், கட்டைத்தேவன் பூச்சிமருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்து,  அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பிறகே கைதாகியுள்ளான். அவனுக்கு தகவல் சொன்னது யார்?

 எழில்முதல்வன்-கஸ்தூரியின் உடல்கள் மக்களால்தான் மீட்கப்பட்டது என்பதற்கு ஒரு ஊரே சாட்சியாக இருக்கையில், தங்கராஜ் என்ற வனக்காப்பாளர் வழக்கமாக சுற்றிவரும் போது இரண்டு உடல்களும் கண்டெடுக்கப்பட்டதாகவும், சந்தேக மரணம் என்று முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்தது ஏன்?

 

இப்படி பல சந்தேகங்கள் இருக்கும் இந்த வழக்கில், காவல்துறையின் நடவடிக்கையில் நம்பிக்கையில்லை என்றும் வழக்கை CBCID க்கு மாற்றக்கோரியும், ஊர்மக்களும்   பெற்றோர்களும் மாவட்ட ஆட்சியருக்கு மனுக்கொடுத்துள்ளனர்.  

 

 ஆதிக்க சாதிக்கு ஆதரவாக இருக்கும் அதிகார வர்க்கத்தை எதிர்த்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகக் களமிறங்க, ஒரு முற்போக்கு அமைப்புக்கூட முன்வரவில்லை.

பொதுமக்கள் புழங்கும் ஒரு சுற்றுலாத்தலத்தில், 22க்கும் மேற்பட்ட பெண்களை வன்புணர்ச்சி செய்துவிட்டு, சர்வ சாதாரணமாக, காலை வெட்டினோம்.. கையை வெட்டினோம்.. கற்பழித்தோம் என்று வாக்குமூலம் கொடுத்துள்ள குற்றவாளிகளுக்கு எதிராக, நியாயமாக மனித சமுதாயமே கொதித்தெழுந்திருக்கவேண்டும். அனால் ஒன்னரை மாதமாகியும் எந்த ஒரு அரசியல் கட்சியோ, மனித உரிமை அமைப்போகூட வாய்திறக்கவில்லை. சாதியத்திடம் மனிதநேயமும் மண்டியிட்டே நிற்கின்றது.

 

தோழமையுடன் - மதியவன்

Share this article :

+ comments + 2 comments

9 February 2012 at 22:47

namakku arasum, athigarikalum thunai nirpathillai. naam sattathai nam kaiyil eduthal than namakku vidivu enbathu ini. Sinthiyungal Devendrargale, nammil oru uyir ponal ethirikku pala uyir poga vendum. appo than nammai evanum ini theenda mattan.

10 February 2012 at 00:12

veeramigu devendirarkale namadhu porattangal arasaiyum athikarigalaiyum sthambikka seiya vendum, appo dhan namakku sevi kodupparkal ,veeramigu devendirarkale namakkethirana aneethiyai ethirthu veeramudan puratchi seivom ,ethirkalathil ethirikal nammai kandu anjuvarkal.

Post a comment
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்