Home » » "அனாதையாக தவிக்கிறோம்': மாஜி அமைச்சர் கருப்பசாமி மனைவி கண்ணீர்

"அனாதையாக தவிக்கிறோம்': மாஜி அமைச்சர் கருப்பசாமி மனைவி கண்ணீர்

Written By DevendraKural on Friday, 2 March 2012 | 06:44




சங்கரன்கோவில் (தனி) தொகுதியில், 1996, 2001, 2006 மற்றும் 2011 வரை தொடர்ந்து, அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,வாக, நான்கு முறை பதவி வகித்தவர் சொ.கருப்பசாமி. 2011ல் விளையாட்டுத் துறை அமைச்சராக ஆறு மாதம் பதவி வகித்தார். பின், உடல்நலம் சரியில்லாமல், 2011 அக்., 22ல் இறந்தார். இவரது மனைவி முத்துமாரி, மகள் சீதாலட்சுமி, திருமணமானவர். மகன் மாரிச்சாமி, 25, ஆசிரியர்; டிப்ளமோ படித்தவர். சங்கரன்கோவில் அருகே புளியம்பட்டியில் வசிக்கின்றனர். கணவர் இறந்த பின், தனக்கு அல்லது மகனுக்கு சங்கரன்கோவில் தொகுதிக்கு கட்சி மேலிடம், "சீட்' வழங்கும் என முத்துமாரி நினைத்தார். ஆனால், சீட் வழங்கப்படவில்லை. முன்னாள் எம்.எல்.ஏ., சங்கரலிங்கத்தின் இரண்டாவது மனைவியின் மகள் முத்துசெல்விக்கு சீட் வழங்கப்பட்டது. இதனால் முத்துமாரி, மாரிச்சாமி ஆகியோர் மன வருத்தமடைந்தனர்.


முத்துமாரி கூறுகையில், ""கணவர் இறந்த பின், முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க மகனுடன் சென்னை சென்றேன். 20 நாட்கள் தங்கியிருந்தேன். எனினும், அவர் எங்களை சந்திக்கவில்லை. பின், மீண்டும் மகனுடன் சென்னை சென்றேன். 20 நாட்கள் தங்கியிருந்து முதல்வரை பார்க்க தவம் இருந்தேன். ஆனால், அவரை சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. ஏமாற்றத்துடன் வீடு திரும்பினோம். கட்சி நிர்வாகிகள் யாரும், எவ்வித உதவியும் செய்யவில்லை. கட்சி மேலிடம் சீட் வழங்கும் என நினைத்து, அமைதியாக இருந்தேன். ஆனால், அதுவும் நடக்கவில்லை. மகனுக்கு வேலையாவது முதல்வர் வழங்குவார் என நினைத்தேன். ஏமாற்றமே மிஞ்சியது. ஆதரவு யாரும் இன்றி, அனாதையாக தவிக்கிறோம்'' என, கண்ணீர் மல்க கூறினார்.


மாரிச்சாமி கூறுகையில், ""கட்சியில் பதவி கொடுத்தால் ஏற்றுக் கொண்டு சிறப்பாகச் செயல்படுவேன்'' என்றார்.


அவ்வளவு நேர்மையான அமைச்சராக இருந்தார். நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர், குடும்பம் நடுத்தெருவில் உள்ளது......கருப்பசாமியை மறந்தவர்களை அவரது ஆன்மா மன்னிக்காது.

Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்