Home » » இந்தியா எந்த நிலையிலும் இலங்கையைக்காட்டிக்கொடுக்காது..அமெரிக்காவின் நாடகம்!

இந்தியா எந்த நிலையிலும் இலங்கையைக்காட்டிக்கொடுக்காது..அமெரிக்காவின் நாடகம்!

Written By DevendraKural on Friday, 16 March 2012 | 05:18

ஈழப்படுகொலை : இந்தியாவை காக்கும் அமெரிக்காவின் நாடகம்!

விடுதலைப் புலிகள் உடனான இறுதிப்போரின் போது முள்ளிவாய்க்காலில் வைத்து ஏறத்தாழ ஒருலட்சத்திற்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்களை இலங்கை ராணுவம் படுகொலை செய்தது.உலகவரலாற்றிலேயே இப்படியொரு படுகொலையை உலகம் இதுவரை பார்த்ததில்லை.அதற்காக இந்தஉலகம் இலங்கை அரசு மீது இதுவரை குறிப்பிடும்படியான எந்த ஒரு கண்டணத்தையும்தெரிவிக்கவில்லை.

ஆனால்இப்போது முதன்முறையாக அமெரிக்கா இலங்கையின் மனித உரிமை மீறல் சம்பந்தமாகஐநா மனித உரிமைக்கவுன்சிலில் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்துள்ளது.இந்தத் தீர்மானம்சம்பந்தமாக தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும்,ஊடகங்களும் தற்போது விவாதித்து வருகின்றன.
இலண்டனில் இருந்து வரும் சேனல்- 4 விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனின் இளையமகன்சுடப்பட்டுப்பட்டு இறந்து கிடக்கும் காட்சியை ஒளிபரப்பி எரியும் நெருப்பில் எண்ணையைஊற்றியுள்ளது.

 


ஈழத்தில் இந்திய ராணுவம்.


இந்த விவகாரம் இந்திய நாடாளுமன்றத்திலும் தமிழக உறுப்பினர்களால்எழுப்பப்பட்டுவருகிறது.இதில் வேடிக்கை என்னவென்றால் இந்தத் தீர்மானத்தை இந்திய அரசுஆதரிக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் உறுப்பினர்களும் குரல் கொடுக்கிறார்கள் என்பதுதான்!

ஆனால் மாமா மன்மோகன்சிங் இலங்கை அரசுக்கு ஆதரவான கருத்தையே நாடாளுமன்றத்தில்அறிக்கையாக தந்துள்ளார்.மாமாவுக்கு அமெரிக்காவையே எதிர்க்கும் ஆற்றல் வந்துவிட்டதைப்பற்றிபலரும் தமது புருவத்தை உயர்த்துகிறார்கள்.ஆனால் மாமா மிகவும் இயல்பாக இந்த நிகழ்வைஎதிர்கொள்கிறார்.


பேரழிவு ஆயுதங்களை வைத்திருப்பதாகக் கூறி ஈராக்,ஆப்கானிஸ்தான்,லிபியா ஆகிய நாடுகளைதாக்கி ஆக்கிரமித்த அமெரிக்காதற்போது அடுத்ததாக இப்போது ஈரானை தாக்க எத்தனித்துவருகிறது.இதன் ஒரு அங்கமாக ஈரானிடமிருந்து கச்சா எண்ணையை உலக நாடுகள்வாங்கக்கூடாது என்று நிர்பந்தித்துவருகிறது.இதில் நமது மாமா செய்யவேண்டிய வேலையைகொடுத்தும் அனுப்பியுள்ளது.அமெரிக்கா காலால் இட்ட வேலையை தலையால் செய்து முடிக்கும்மாமா அதற்கான அனைத்து பணியையும் தொடங்கிவிட்டார்.

ஆனால் பேரழிவு ஆயுதம் போன்று ஈழப்போரும்,முள்ளிவாய்க்கால் படுகொலையும் கற்பனைநிகழ்வுகள் அல்ல.ஆதாரபூர்வமான உண்மைகள்.இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்துள்ளஅமெரிக்கா,தனது தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று எந்த வகையிலும்இந்தியாவை நிர்பந்திக்கவில்லை.அப்படி அமெரிக்கா செய்யாது என்று நமது மாமாவிற்குநன்றாகவே தெரியும்.
நமது மாமாவிற்கு தனது நாடகத்தில் இந்த கதாபாத்திரத்தை வழங்கியதேஅமெரிக்காதான்.மாமாவிற்கு வழங்கப்பட்டுள்ள கதாபாத்திரத்தில் தம்மையும் இணைத்துகொண்டுள்ளனர் தமிழக அரசியல் கட்சியினர்.மொத்தத்தில் பெரும் நாடகம் நம் கண்முன்னேஅரங்கேறிவருகிறது.

முள்ளிவாய்க்கால் படுகொலை நடந்தபோதும்,இப்போதும் அமெரிக்காவும் தமிழக அரசியல்கட்சியினரும் இப்போரின் கதாநாயகனை,படுகொலையின் சூத்திரதாரியை நன்கு திட்டமிட்டேமூடிமறைக்கின்றனர்.

போரை நடத்தியதும்,முள்ளிவாய்க்கால் படுகொலையை நிகழ்த்தியதும் இலங்கைதான்.இதுஅனைவருக்கும் தெரிந்த சங்கதிதான்.எனவே அனைவருக்கும் தெரிந்த செய்தியை மீண்டும்பேசுவதில் சிக்கல் ஒன்றும் புதிதாக எழப்போவதில்லை.ஆனால் மீண்டும்,மீண்டும் அனைவருக்கும்தெரிந்த செய்தியை பேசுவதன் மூலம் அனைவருக்கும் தெரியாத செய்தி அவர்களுக்குதெரியாமலேயே மூடி மறைக்கப்படுகிறது!

இந்தப் போரை நடத்தியதால் இலங்கைக்கு என்ன லாபம்இலங்கை இரண்டாக பிளவு படுவதைதடுத்தது இலங்கைக்கு லாபம் என்று பாமரத்தனமாக நாம்  நம்பிக் கொண்டிருக்கிறோம்.இலங்கைஇரு துண்டாவது நின்றுபோனது என்பதை நாம் மறுக்கவில்லை.ஆனால் இந்தப்போரின் மூலம்உண்மையில் ஈழத்தை இலங்கை இழந்துபோனது.ஈழத்தை ஈழத்தமிழர்களிடம் இழக்காத இலங்கை,அதை இந்தியாவிடம் இழந்துவிட்டது.இந்திய ஈழத்தில் இலங்கை தற்போது இந்தியாவுக்காககாவல்காக்கும் பணியைத்தான் செய்துவருகிறது.

ஈழம் இந்தியாவின் பிடிக்குள் வந்துவிட்டது என்றால் அது அமெரிக்காவின் பிடியில் வந்துவிட்டதுஎன்றுப்பொருள்.ஏனென்றால் இந்தியா அமெரிக்காவின் அடிமை.எனவே தனது அடிமையைக்காக்கும் அதே நேரத்தில்தன்னையும் மனித உரிமை போராளியாக தம்பட்டம் அடித்துக்கொள்ளும்நாடகம்தான் ஐநா மனித உரிமைக்கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம்.

அன்று தனது தெற்காசிய மேலாதிக்க நலங்களுக்கு அடிபணியாத இலங்கை அரசை பணியவைக்கஈழத்தமிழர்களின் உரிமைப்போரில் தலையிட்டு ஈழப்போராளிகளுக்கு பயிற்சியும்ஆயுதத்தளவாடங்களையும் தந்து இலங்கை அரசை மிரட்டியதுஅன்றைய இந்திராகாந்தி தலைமையிலானஇந்திய அரசு.

இலங்கை அரசு பணிந்து போன பிறகு,தனது நோக்கத்திற்கு எதிராக நின்ற ஈழப்போராளிகள்மற்றும் ஈழமக்கள் மீது போர் தொடுத்து தோல்வி கண்டது இந்திராவின் மகன் ராஜீவ்தலைமையிலான இந்திய அரசு.

தெற்காசியாவில் தனது மேலாதிக்கத்தை நிலைநாட்டவும்ஈழமக்களுடனான போரில் தனதுதோல்விக்கு பழிதீர்க்கவும் இந்தியா நடத்திய போர்தான் ஈழ இறுதிப் போரும்,முள்ளிவாய்க்கால்படுகொலையும்.

எனவே முன்பு தன்னை தோற்கடித்த விடுதலைபுலிகளை மட்டுமல்ல,ஈழமக்களையும்பழிக்கு,பழிவாங்க இந்திய அரசு நடத்தியப் போர்தான் ஈழ இறுதிப்போர்.இதனால்தான்போராளிகளை மட்டுமல்ல அப்பாவி ஈழத்தமிழ் மக்களையும் உளவு பார்த்து,திட்டம் தந்து,ஆயுதம்தந்து,நிதி தந்து,ராணுவ நிபுணர்களை அனுப்பி முள்ளிவாய்க்காலில் உலகிலேயே மிகப்பெரியமனிதப்படுகொலையை நிகழ்த்தியது இந்தியா.மொத்தத்தில் இந்தியாவிற்காக இலங்கை நடத்தியபோர்தான் ஈழ இறுதிப்போர்.எனவேஇந்தியா எந்த நிலையிலும் இலங்கையைக்காட்டிக்கொடுக்காது.இந்தியா அப்படிச்செய்யும்,செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பதுஏமாளித்தனமேயாகும்.தனது தெற்காசிய மேலாதிக்க நலன்களுக்காக தனது சொந்த நாட்டு தமிழ்மீனவர்களையே இலங்கைக்கு காட்டிக்கொடுக்கும் இந்தியா ஈழத்தமிழர்களுக்கு அதரவாகசெயல்படும்,செயல்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பதை என்னவென்று சொல்வது!


ஈழப்படுகொலையை கண்டிப்பவர்கள் நேர்மையானவர்கள் என்றால் அவர்கள் முதன்மைகுற்றவாளியான இந்தியாவைத்தான் முதலில் கண்டிக்க வேண்டும்.தண்டிக்கவேண்டும்.இந்தியாவையும் இணைத்துதான் ஐநா மனித உரிமை கவுன்சிலில் தீர்மானம்கொண்டுவந்திருக்க வேண்டும்.

ஐநாவும் நேர்மையான சக்தியல்ல.அமெரிக்காவும் நேர்மையா சக்தியல்ல.அமெரிக்காவின்கைப்பாவைதான் ஐநா.எனவே தான் அமெரிக்க நாடகத்திற்கு மேடை அமைத்துத் தருகிறது ஐநா.

அமெரிக்காவின் இந்த நாடகத்தில் துணை நடிகர்களாக நடிக்கிறார்கள் தமிழக அரசியல்கட்சியினர்!மாபெரும் முள்ளிவாய்க்கால் கொலைகாரர்களை மூடிமறைக்கும்இந்த நாடகத்தில் பங்கேற்கநம்மையும் அழைக்கிறார்கள்நீங்கள் தயாரா?
Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்