Home » » நெல்லையில் பிரபல நடிகர் உருவபொம்மை எரிப்பு : மள்ளர் நாடு தொண்டர்கள் கைது

நெல்லையில் பிரபல நடிகர் உருவபொம்மை எரிப்பு : மள்ளர் நாடு தொண்டர்கள் கைது

Written By DevendraKural on Friday, 29 June 2012 | 08:24

நெல்லையில் பிரபல நடிகர் உருவபொம்மை எரிப்பு : மள்ளர் நாடு தொண்டர்கள் கைது


http://www.nellaionline.net/Editor/assets/2012%20MAY/mnadu.jpgநெல்லை டவுணில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் சுந்தர்.சி நடித்த முரட்டுக்காளை படம் திரையிடப் பட்டுள்ளது.இந்த படத்தில் நடிகர் விவேக் பேசும் ஒரு வசனம், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியனை குறை கூறுவது போல உள்ளதாக கூறப்படுகிறது. அந்த வசனத்தை நீக்க வேண்டும் என்றும் பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

இப்படம் முதன்முறையான வெளியான நெல்லை டவுண் தியேட்டரை ஒரு கும்பல் தாக்கியதை தொடர்ந்து வேறு தியேட்டரில் தற்போது படம் திரையிடப்பட்டுள்ளது

 

விவேக் பேசும் வாசகத்தை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி இன்று மள்ளர் நாடு அமைப்பின் மாவட்ட செயலாளர் மகேசுமள்ளர் தலைமையில் குறிப்பிட்ட தியேட்டரை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்,இதனிடையே திடீர் என மறைத்து வைத்திருந்த நடிகர் விவேக் உருவபொம்மையை அவர்கள் தீவைத்து கொளுத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது   

 

இதையடுத்து நெல்லைசந்திப்பு போலீசார் மாவட்டசெயலாளர் மகேசுமள்ளர், நிர்வாகிகள் பொட்டல் ஆசீர்வாதம்,வெல்டிங் குமார்,வைரமுத்து உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தொண்டர்களை கைது செய்தனர்

Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்