Home » » காடுவெட்டி குரு மீது உரிமை மீறல் விவாதம்: கிருஷ்ணசாமி வலியுறுத்தல்...

காடுவெட்டி குரு மீது உரிமை மீறல் விவாதம்: கிருஷ்ணசாமி வலியுறுத்தல்...

Written By DevendraKural on Wednesday, 21 November 2012 | 11:36



தருமபுரி மாவட்டம் நாயக்கன் கொட்டாய் கிராமத்தில், காதல் திருமணம் காரணமாக எழுந்த கலவரம் மற்றும் வன்முறை தீவைப்புச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களை இன்று புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது,
"பாமகவைச் சேர்ந்தவரும் வன்னியர் சங்க தலைவருமான காடுவெட்டி குரு போன்றோர் இது போன்ற சம்பவங்களுக்குக் காரணம். சாதீய ரீதியான மோதல்களைத் தூண்டும் வகையில் சிலர் பேசி வருகின்றனர்.
அண்மையில் மகாபலிபுரத்தில் நடந்த வன்னியர் சங்க மாநாட்டுக் கூட்டத்தில் பேசிய காடுவெட்டி குரு, வன்னியர் இனப் பெண்களை வேறு சாதியினர் திருமணம் செய்துகொண்டால் அவர்களை வெட்ட வேண்டும் கொல்ல வேண்டும் என்றெல்லாம் பேசியிருக்கிறார்.
இது அவர் எம்.எல்.ஏ.வாகப் பொறுப்பேற்றுக் கொண்ட செயலுக்கு உகந்தது அல்ல. அவர் எல்லோருக்கும் பொதுவாக சட்ட மன்ற உறுப்பினர் ஆனவர். ஒரு சட்ட மன்ற உறுப்பினர் பதவி ஏற்கும் போது மேற்கொள்ளும் பிரமாணத்தை அவர் மீறியிருக்கிறார். இதற்காக அவர் மீது சட்டமன்றத் தலைவரிடம் உரிமை மீறல் மனு கொடுத்தேன்.
ஆனால், சட்டமன்றக் கூட்டம் விரைந்து முடிந்துவிட்டதால், அப்போது விவாதிக்க இயலாமல் போய்விட்டது. அடுத்து வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் இந்த உரிமை மீறல் குறித்து விவாதிக்கப்படும் என்று நினைக்கிறேன்" என்று கூறினார் டாக்டர் கிருஷ்ணசாமி. 

அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டுக்கு தடை கோரி புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

தலித்துகளுக்கு வழங்கப்படும் 18 சதவீத இட ஒதுக்கீட்டிலிருந்து அருந்ததியர்களுக்கு 2009-ம் ஆண்டு முதல் 3.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த உள் ஒதுக்கீட்டை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் ராஜசேகர் சுப்பையா என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
உள் ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அப்போதைய மாநிலச் செயலாளர் என். வரதராஜன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர் பி. சம்பத் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம், தீர்ப்பு வரும்வரை உள் ஒதுக்கீடு தொடரும் என உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து, அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டுக்கு தடை கோரி புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உள் ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர் பி. சம்பத் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
சென்னை உயர் நீதிமன்றத்திலும், அதன் மதுரை கிளையிலும் உள் ஒதுக்கீட்டுக்கு தடை கிடைக்காததால், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பஞ்சாப் மாநில உள் ஒதுக்கீட்டு வழக்கில் உள் ஒதுக்கீட்டுக்கு எதிராக டாக்டர் கிருஷ்ணசாமி மனு தாக்கல் செய்துள்ளார்.
எனவே, அருந்ததியர் உள் ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக ஜி. ராமகிருஷ்ணன், பி. சம்பத் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இவ்வழக்கில் மூத்த வழக்குரைஞர் என்.ஜி.ஆர். பிரசாத், வழக்குரைஞர்கள் எம். கிறிஸ்டோபர், பெனோ பென்சிகர் ஆகியோர் ஆஜராக இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்