Home » » மரணதண்டனை வேண்டாம் ???

மரணதண்டனை வேண்டாம் ???

Written By DevendraKural on Saturday, 1 December 2012 | 01:10


நடுரோட்டில் ஒரு போலீஸ்காரரை நான்கு ரவுடிகள் சேர்ந்து அடித்து வெட்டி கொலை செய்கிறார்கள்....சக போலீஸால்  அப்போது ஒன்றும் செய்ய முடியவில்லை...

இது ஏதோ படக்காட்சி அல்ல...நிஜம்..சென்ற அக்டோபர் மாதம் 27ம் தேதி குருபூஜை தினத்தன்று வேம்பத்தூர் பகுதியில் காவலில்ஈடுபட்டு இருந்த எஸ் .ஐ ஆல்வின் சுதன் என்பவர்தான் ரவுடிகளால் படுகொலை செய்யப்பட்டவர்...அதுவும் பட்டப்பகலில் மக்கள் நடமாடும் பகுதியில்...

ஒரு போலீசுக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண பொதுமக்களுக்கு என்ன பாதுகாப்பு என்ற அச்சத்தை இந்த சம்பவம் தமிழகம் முழுக்க ஏற்படுத்தியது...

பிறகு அந்த குற்றவாளிகளை கைது செய்தது போலீஸ்...இனி வழக்கு நடத்தி இடையில் அந்த ரவுடிகள் ஜாமீனில் வெளிவந்து இன்னும் பல பேரை போட்டு தள்ளுவார்கள்.ஏன் இந்த வேண்டாத வேலை....

இந்த மாதிரி ரவுடிகளை நடு ரோட்டில் சுட்டு தள்ள  வேண்டாமா?

அதைத்தான் செய்து இருக்கிறார்கள்...நேற்று அந்த ரவுடிகள் இருவரும் என்கவுன்டர் என்ற பெயரில்  இந்த சமூகத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்...இந்த செய்தியை தொலைக்காட்சியில் பார்த்து கொண்டு இருக்கும்போதே இன்னொரு சேனலில் மனித உரிமை என்ற பெயரில் இந்த ரவுடிகளை சுட்டு கொன்றது தவறு,அவர்களுக்கு சட்டம்தான் தண்டனை கொடுக்க வேண்டும் என விதாண்டாவாதம் பேசிக்கொண்டு இருக்கிறார் ஒருவர்...

அய்யா மனித உரிமை ஆர்வலர்களே!எல்லாவற்றையும் ஒரே கோணத்தில் பார்க்காதீர்கள்...இடம்,பொருள்,ஏவல் என்று எதற்காக நாம் தரம் பிரித்து வைத்து இருக்கிறோம்....?மரணதண்டனை வேண்டாம் என நீங்கள் கூறுவது எல்லாவற்றிற்கும் பொருந்தக்கூடிய  ஒன்றா?

மனித உரிமையை காக்கிறேன் என கூறிக்கொண்டு இது போன்ற ரவுடிகளுக்கு எல்லாம் வக்காலத்து வாங்காதீர்கள் ....இவர்கள் எல்லாம் என்ன மனிதர்கள்?அந்த கொடூர ரவுடிகளுக்கு  என்ன மனித உரிமை மண்ணாங்கட்டி?இன்னைக்கு ஒரு எஸ்.ஐ யை  கொன்ற அவர்கள் நாளைக்கு யாரை வேண்டும் என்றாலும் தைரியமாக நடுரோட்டில் வெட்டி கொல்வார்கள் ...பொதுமக்கள் அந்த ரவுடிகளுக்கு அஞ்சி அஞ்சி வாழ வேண்டும்...மிஞ்சி மிஞ்சி போனால் சட்டம் அந்த ரவுடிகளுக்கு ஆயுள் தண்டனை கொடுக்குமா?ஒருவேளை மரண தண்டனை கொடுத்தாலும்  அதையும் செய்ய விடமாட்டீர்கள்...

இந்த மாதிரி ரவுடிகளுக்கு எல்லாம் இதுபோன்ற என்கவுண்டர்தான் சிறந்த முடிவு...இந்த ரவுடிகள் களை எடுக்கப்படவேண்டியவர்கள்....


மனித உரிமை ஆர்வலர்களே ...நீங்கள் மனிதர்களுக்காக மட்டுமே குரல் கொடுங்கள்...அந்த ரவுடிகள் போன்ற மிருகங்களுக்காக அல்ல!
------------------------------------------------------------------------------------------------------------

காவலரை கொன்றது கயவாளித்தனம் , அதற்க்கு அதிகபட்ச தண்டனையை , கொடுமையை உணரும் பொருட்டு குற்றம் செய்தவருக்குகொடுக்கலாம் . 

ஆனால் ஒரு உயிரை திட்டம் இட்டு எடுப்பது அது அரசின் அமைப்பே என்றாலும் கொலைதான் .

கசாபை கூட தூக்கில் போட கூடாது என்று நாம் சொல்லி வருகிறோம் . அப்படி இருக்கையில் , எந்தவித விசாரணையும் இன்றி இது என்ன இப்படி ஒரு படுகொலைகள் ?

என்கவுண்டர்கள் , அரசு செய்யும் படுகொலைகளா ?
Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்