Home » » ஏன் மாயன் சொன்னதில் உலகம் நடுங்குகிறது??

ஏன் மாயன் சொன்னதில் உலகம் நடுங்குகிறது??

Written By DevendraKural on Friday, 21 December 2012 | 03:03

இங்கே சொல்லப்படும் அனைத்து விடயங்களும் ஆதாரத்துடன் தரப்படும் என்பதை முதலில் சொல்லிக் கொள்கிறேன். முழுமையும் படியுங்கள். பின்பு நீங்கள் எனக்கு பதில் சொல்லுங்கள். ஏன் இவர்களை உலகம் இப்படி போற்றுகிறது என்பதைப் பார்ப்போம். ஏன் இவர்கள் சொல்லுவதை நாம் நம்ப வேண்டும் என்று நீங்கள் நினைப்பீர்கள். அங்குதான் இருக்கு சிக்கல். என்ன சிக்கல்? கீழே உள்ள இந்த படத்தைப் பாருங்கள்.இது ஒரு நவீன விண்வெளி வீரரின் படம். விண்ணுக்குச் செல்லும் போது இப்படித்தான் உடை அணிந்து படுத்திருப்பார். இப்போது இந்த படத்தைப் பாருங்கள்.
என்னடா இவன் முழங்காலுக்கும் மொட்டைதலைக்கும் முடிச்சுப் போடுவது போல பேசுகிறான் என்று நினைக்கிறீர்களா? இந்த இரண்டு படத்தை வைத்துமட்டும் கட்டுரையை இடை போடாமல் மேலும் இந்த படங்களையும் பாருங்கள்.இது இன்றைய விண்வெளி வீரர். கீழே கொடுக்கும் படங்களையும் பாருங்கள்.படங்களைப் பார்த்தீங்களா. இதை வைத்து என்ன சொல்ரீங்க? இவர்கள் 5000 ஆண்டுகளுக்கு முன்பே விண்வெளியை ஆராய்ந்திருக்கிறார்கள் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? இன்னும் நம்பிக்கை இல்லாதவர்கள் இந்த படங்களைப் பார்த்து சொல்லுங்கள்.இன்னும் சில படங்களை தருகிறேன் பாருங்கள்.இந்த படத்தில் இருப்பது என்ன என்பதைக் கீழே வரும் படம் விளக்கும்.என்னங்க பயமா இருக்கா? அதுதாங்க மாயங்களின் மேல் இந்த உலகம் வைத்திருக்கும் பயத்திற்குக் காரணம். இதுவரை, 'ரைட் சகோதரர்கள்' விமானத்தைக் கண்டுபிடித்தார்கள் என்று நம்பிக் கொண்டிருக்கும் வேளையில், அவற்றைப் புறம் தள்ளும் பல இரகசியங்கள் எங்கோ ஒரு மூலையில், மத்திய அமெரிக்காவில், எப்போதோ மறைந்திருக்கின்றது என்பது ஆச்சரியம்தானே! அதைவிட ஆச்சரியம், இந்தச் சிறிய விமானங்கள் போலுள்ளவற்றை விஞ்ஞானிகள் ஆராய்ந்த போது, அவை விமானப் பறப்புச் சக்திக்கு ஏற்ப உருவாக்கப்பட்டது என்பதைக் கண்டு கொண்டார்கள். ரைட் சகோதரர்கள் கண்டு பிடித்த விமானம் கூட மிகப் பழமை வாய்ந்தது. ஆனால், இந்த உருவங்கள் நவீன விமானங்கள் போல வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன.

கடவுள் முதலில் பூமியை உருவாக்கினார். அதன் பின்னர் பூமி இருட்டாக இருக்கிறது என்று கருதி, சூரியனையும், சந்திரனையும் படைத்தார் என்று பைபிள், குரான், யூதமதம் ஆகிய மூன்று பிரதான மதங்களும் சொல்கின்றன. இந்து மதத்தின் உபவேதங்களில் ஒன்றான, 'ஜோதிசம்' எனச் சொல்லப்படும் சோதிடத்தில், பூமியை மையமாக வைத்து நவக்கிரகங்கள் சுற்றுகின்றன என்ற அடிப்படையிலேயே கணிப்புகள் யாவும் இருந்திருக்கிறது.
அஸ்ட்ராலாஜி (Astrology), அஸ்ட்ரானாமி (Astronomy) என்னும் இரண்டு ஆங்கிலச் சொற்களை நாம் அடிக்கடி பாவித்தாலும், அவை இரண்டினதும் வித்தியாசத்தைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. வானத்தில் இருக்கும் கோள்களைப் பற்றியும், நட்சத்திரங்களைப் பற்றியும் இந்த இரண்டுமே சொல்வதால், இவற்றை அனேகர் ஒன்றாகவே பார்க்கின்றனர். ஆனால் அஸ்ட்ரானாமி என்பது விஞ்ஞானம், அஸ்ட்ராலாஜி என்பது சாத்திரம். அதாவது ஒன்று வானவியல் மற்றது வானசாத்திரம். மாயன் காலங்களில் உலகில் உள்ள பல இனத்தவர்கள், வானத்தில் உள்ள நட்சத்திரங்களினதும், கோள்களினதும் நகர்வுகளைக் கவனித்தே வந்திருக்கிறார்கள். ஆனால் எல்லோரும் 'வான சாத்திரம்' என்னும் நிலையில்தான் அவற்றைக் கவனித்திருக்கிறார்கள். மாயன்களோ அவற்றை 'வானவியல்' என்னும் அறிவியல் சிந்தனையுடன் வானத்தை ஆராய்ந்திருக்கிறார்கள். இதுவே இன்று அவர்கள் வசம் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. மாயன்கள் மிகத் துல்லியமாக சூரியன், பூமி, சந்திரன், செவ்வாய், புதன், சனி, வியாழன் போன்ற கோள்களின் அசைவுகளைக் கவனித்திருக்கிறார்கள், கணித்திருக்கிறார்கள்.மாயன் காலங்களில் உலகில் உள்ள பல இனத்தவர்கள், வானத்தில் உள்ள நட்சத்திரங்களினதும், கோள்களினதும் நகர்வுகளைக் கவனித்தே வந்திருக்கிறார்கள். ஆனால் எல்லோரும் 'வான சாத்திரம்' என்னும் நிலையில்தான் அவற்றைக் கவனித்திருக்கிறார்கள். மாயன்களோ அவற்றை 'வானவியல்' என்னும் அறிவியல் சிந்தனையுடன் வானத்தை ஆராய்ந்திருக்கிறார்கள். இதுவே இன்று அவர்கள் வசம் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. மாயன்கள் மிகத் துல்லியமாக சூரியன், பூமி, சந்திரன், செவ்வாய், புதன், சனி, வியாழன் போன்ற கோள்களின் அசைவுகளைக் கவனித்திருக்கிறார்கள், கணித்திருக்கிறார்கள்.
மாயன்களின் வானியல் கணிப்பை உலகுக்கு உரத்துச் சொல்லும் வரலாற்றுப் பதிவொன்று இன்றும் மாயன்கள் வாழ்ந்த இடமொன்றில் நிமிர்ந்து நிற்கிறது. மெக்சிக்கோ நாட்டில் உள்ள யூகட்டான் (Yucatan) மாநிலத்தில், மாயன்களால் கட்டப்பட்ட 'ஷிசேன் இட்ஷா' (Chichen Itza) என்னும் பிரமிட்தான் அது.நான்கு பக்கங்களைக் கொண்ட இந்தப் பிரமிட்டில், வரிசையாக ஒவ்வொரு பக்கமும் படிகள் அமைக்கப் பட்டிருக்கிறது. இந்த நான்கு பக்கங்களும் நான்கு பருவ காலங்களைக் குறிக்கின்றன. ஒவ்வொரு பக்கத்திற்கும் தலா 91 படிகள் இருக்கின்றன. மொத்தமாக நான்கு பக்கங்களும் சேர்த்து 364 படிகள். ஆனால், வருடத்திற்கு 365 நாட்கள் அல்லவா இருக்கிறது. அதை எப்படி நான்காகப் பிரிப்பது? ஒரு படி மிஞ்சுமல்லவா? என்ன செய்தார்கள் மாயன்கள்? கடைசியாக உச்சத்தில் ஒரு மேடையை ஒரே படியாக, சதுரமாகக் கட்டிவிட்டார்கள். மொத்தமாக 365 படிகள் வந்துவிட்டது. ஒரு வருடத்தின் நாட்களை பிரமிட்டாகவே மாயன்கள் கட்டியிருப்பது, ஆராய்ச்சியாளர்களை இன்றும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.பூமி, சூரியனைச் சுற்றிவர 365 நாட்கள் எடுக்கிறது என்பதை மாயன்கள் எப்படிக் கணித்தார்கள்? இந்தத் துல்லியமான வானவியல் கணிப்பு முறையை எப்படி அறிந்து கொண்டார்கள்? நட்சத்திரங்கள், கோள்கள் போன்றவை இயங்கும் விதத்தை எப்படி அவதானித்தார்கள்?

இந்த படத்தைப் பாருங்கள்.இப்படி வானவியலை அறிந்த மாயங்கள் நாள்காட்டி 2012இல் முடிவடைவதுதான் உலக மக்களுக்கு அச்சமாக இருக்கிறது.இப்போது தெரிகிறதா, ஏன் மாயன் மாயன் மாயன் என்று உலகம் அலறுகிறது என்று. மீண்டும் அடுத்த கட்டுரையில் 22ம் தேதி சந்திப்போம்.

நன்றி : ராஜ்சிவன்
Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்