Home » » சாகித்ய அகாதெமி விருது பெறும் தேவேந்திரர்

சாகித்ய அகாதெமி விருது பெறும் தேவேந்திரர்

Written By DevendraKural on Friday, 21 December 2012 | 03:21

சாகித்ய அகாதெமி விருது பெறும் தேவேந்திரர்

2012-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருதுக்கு எழுத்தாளர் டி. செல்வராஜின் "தோல்' என்ற நாவல் உள்பட 24 படைப்புகள் தேர்வாகியுள்ளன. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.
சாகித்ய அகாதெமியின் நிர்வாகக் குழுக் கூட்டம் அதன் தலைவர் டாக்டர் விஸ்வநாத் பிரசாத் திவாரி தலைமையில் தில்லியில் நடைபெற்றது.
அதில் 24 மொழிகளில் பல்வேறு எழுத்தாளர்களின் படைப்புகள் பரிசீலிக்கப்பட்டு சிறந்த நாவல் ஆசிரியர்கள், கவிஞர்கள், சிறுகதைகள், சுயசரிதை ஆகிய பிரிவுகளில் விருது பெறுவோர் தேர்வு செய்யப்பட்டனர்.
அதில் "தோல்' என்ற தமிழ் நாவலை எழுதிய டி. செல்வராஜ் சாகித்ய அகாதெமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
செல்வராஜ் நெல்லை மாவட்டம் தென்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர். திண்டுக்கல் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றுகின்றார்.


மருத நிலவன்
Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்