Home » » எம் இனம் வாழ நீர் உயிர் துறந்தீர்-மாவீரன் அண்ணன் பசுபதிபண்டியன் அவர்களுக்கு வீரவணக்கம் ! வீரவணக்கம் !

எம் இனம் வாழ நீர் உயிர் துறந்தீர்-மாவீரன் அண்ணன் பசுபதிபண்டியன் அவர்களுக்கு வீரவணக்கம் ! வீரவணக்கம் !

Written By DevendraKural on Wednesday, 9 January 2013 | 11:36

"வையத்துள் வாழ்வாங்கு வாழ்வான் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்"

 எனும் தெய்வப்புலவர் வாக்கிற்கமைய வாழ்பவர்கள் இவ்வுலகில் மிகச் சிலரே. கோடானு கோடி மானுடர்கள் இப்புவி மீது பிறந்து மடிந்தாலும் வரலாற்றில் நிலைத்து வாழ்பவர்கள் மிகக் குறைந்த …எண்ணிக்கையினரே. வாழ்க்கையின் முழுமை வாழ்நாளின் எண்ணிக்கையில் அல்ல. வாழும் வகையிலேயே உள்ளது. அங்ஙனம் வாழ்ந்த உயர்வான மனிதர்களுள்  மாவீரன் அண்ணன் பசுபதிபண்டியன் அவர்களும் ஒருவராவார்.

தேவேந்திர குல மக்களின் எழுச்சிக்கு மூல காரணமாய் இருந்தவர் இவர்தான். எங்கேயெல்லாம் தல்தபட்டோர்களுக்கு அநீதி இளைக்கபடுகிறதோ அங்கெல்லாம் அவர்களுக்கு ஆதரவாக கலத்தில் இருந்தார்.
1980,1990 வருடங்களில் பசுபதிபண்டியன் என்ற ஒரு நபர் பல கொலைகளில் அவர் பெயர் அடிபடுகிறது. 

தூத்துக்குடி ஒரு துறைமுகம், முக்கியமான வியாபாரங்கள் நடைபெறும் இடம் என்பதால் கொலை என்பது பல காரணங்களுக்க அவ்வப்போது நடக்கும். பசுபதி பாண்டியன் பதினொன்றாம் வகுப்பு படிக்கும்பொழுதே அவரது பெயர் ஒரு கொலை கேசில் அடிபட்டுள்ளது, காவல் நிலையத்திலும் பதிவகயுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். 

அவர் சிறு வயதில் அவரது சொந்த ஊரான அலங்கரதட்டில் அமைதியான முறையில்தான் படித்து வந்தார். ஆனால் அவர் தல்தபட்டவர்களுக்கு எதிரான சாதியக் கொடுமைகளை கண்டு கொதிதெலுந்தார். கையில் ஆயுதம் ஏந்தி போராட துணிந்தார். அவரை பார்த்து நாடார் மற்றும் இதர சதி இந்து கூட்டம் பயந்தது. சாதி இந்து கூடத்திற்கு அரசியல் செல்வாக்கு இருந்தது. ஆனால் பசுபதிபண்டியன் மனதுனிச்சலோடு தாழ்த்தப்பட்டவர்கள் சமுதாயத்தில் ஓரங்கட்டுவதை எதிர்த்து போராடினர். அந்த காலகட்டத்தில் நாட்டு வெடிகுண்டு, கத்தி, ஈட்டி போன்ற ஆயுதங்கள் எல்லா சமுதயதிர்க்கும் வழங்கப்பட்டது. இதை நக்சலைட்டுகள் நடமாட்டம் என்று கூட அரசியல் வாதிகள் கூறினார். பசுபதிபண்டியன் மற்றும் அவரது கூட்டாளிகள் அனைவரும் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதில் கைதேர்ந்தவர்கள் என்றும் கூறபடுகிறது.

நெல்லையில் உள்ள அருந்ததியர்களை பசுபதி பாண்டியன் அவர்கள் சந்தித்து ஐம்பது கத்தி மற்றும் நாட்டு வெடிகுண்டுகளை குடுத்து இனிமேல் உங்கள் பாரம்பரிய தொழிலான துப்பரவு பணியை செய்யாதிர்கள் என்றும் யாருக்கும் பயப்பட வேண்டாம் என்றும் யாராவது உங்களை தக்க முற்பட்டால் இதனை பயன்படுத்துங்கள் என்றும் கூறினார், உங்களை காக்க வேண்டியது எனது பொறுப்பு என்றும் கூறியதாக ஒரு அருந்ததியர் கூறுகிறார் நெல்லையிலிருந்து.

மற்றொரு அருந்ததியர் தலைவர் மாதுரி கூறுகையில், பரமக்குடியில் தேவேந்திர குல இளைஞர்கள் அருந்ததிய இளைஞர்களை தாக்கி விட்டதாகவும் அங்கே பதற்றமான நிலைமை நிலவிய பொழுதும் பசுபதி அங்கு சென்று தன இனத்தவர்களை அழைத்து இவர்களை நாம்தான் அரவணைக்க வேண்டும், துன்புறுத்த கூடாது என்றும் கூறி ஒற்றுமை படுத்தினார்

அருந்ததியர்க்கு உள் ஒதுக்கிடு ஒதுக்குவதற்கு பல தாழ்த்தப்பட்ட தலைவர்கள் கூட வராத நிலையில் பசுபதி அண்ணன் அவர்களுடன் போராட்டத்தில் கலந்து கொண்டு உள் ஒதுக்கிட்டின் அவசியத்தை எடுத்து கூறி அருந்ததியர்களுக்கு அதரவ ஆர்ப்பாட்டம் செய்தார்.
எல்லா சாதி தலைவர்களும் அவரவர் சாதிகளுக்காக மட்டுமே குரல் கொடுத்த நிலையில் ஒரு நல்ல தலைவர் இல்லாமல் தவித்த அருந்ததியர்களுக்கவும் குரல் கொடுத்த ஒரே தலைவர் அன்னான் பசுபதி பாண்டியன் மட்டுமே.

ஒரு காலத்திற்கு பிறகு பசுபதி ஆயுதத்தை விட்டுவிட்டு மக்களின் நலனுக்காக அற வழியில் போராட ஆரம்பித்தார். தல்தபட்டவர்களும் தன்மானத்துடன் வழ ஆரம்பித்தனர். இதற்கு இப்பொழுது உள்ள சூழ்நிலையே சான்றாகும். தூத்துக்குடி பகுதியிலும் அருந்ததியர்கள் அடக்கு முறை இல்லாமல் வாழ்கின்றனர். இவை எல்லாவற்றுக்கும் கரணம் அண்ணன் பசுபதி பாண்டியன் ஒருவரே! தூத்துக்குடி பகுதியில் இவரால் தன இந்த மற்றம் வந்தது. மேடைகளில் முழங்கி விட்டு பின்னாடி ஒரு பேச்சு பேசும் சுயநலமுள்ள தலைவர்களுக்கு மத்தியில் இவர் தன்னலமுள்ள தலைவர்.எவரை பற்றியும் கவலைபடாமல் அவர் வழியில் அவர் சென்றார். அவருடன் இருந்த தோழர்கள் பல சம்பவங்களில் இவருக்காக உயிரை தியாகம் செய்தனர். பீர் முஹம்மத் , கர்ணன் இவர்கள் அனைவரும் பண்ணையார் தரப்பினால் உயிரழந்தனர். அவர்களின் குறியிலிருந்து பசுபதி பாண்டியன் தப்பித்து கொண்டே இருந்தார். எதிர்த்து தாக்கவும் அவர் முற்படவில்லை.

அவரது துணிச்சலையும், திறமையையும் பார்த்து பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மருத்துவர் ராமதாஸ் அவருக்கு மாநில இளைஞர் அணி தலைவர் பொறுப்பை கொடுத்தார். சிறிது காலதிலேய அவர் அதிலிருந்து விலகி தேவேந்திர குல இளைஞர் பேரவை என்ற ஒரு அமைப்பை தொடங்கினர். இந்த அமைப்பின் மூலம் சமுதாய மக்களிடம் எழுசியூட்டினர், அதே வேளையில் ஜெசிந்த என்ற பெண்ணை மணந்து கொண்டார். ஜெசிந்த பாண்டியன் ஒரு வக்கீல் அவர். அவரது சொந்த ஊர் திண்டுக்கல். இவர் கணவருக்கு பக்க பலமாக இருந்தார். இவர் இறக்கும் வரை கணவருக்கு ஒரு மிகபெரிய பலமாக இருந்து அவரை பல வழக்குகளில் இருந்து காப்பாற்றினார்.

2006 ம் ஆண்டு பசுபதியும் அவரது மனைவியும் காரில் தூத்துகுடியிலிருந்து வந்துகொண்டிருந்த பொழுது எப்போதும் வென்றான் ஊர் அருகே பண்ணையார் தரப்பினர் அவரது காரின் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். இதில் அவரது கார் சேதமானது! அப்போது படுகாயமுற்ற அவர்களை வெட்டுவதற்கு இருபது பெரி கொண்ட கும்பல் ஒன்று முற்பட்டது! பசுபதி பாண்டியன் வேறு ஒரு காரில் ஏறி தப்பித்தார். ஆனால் ஜெசிந்த பாண்டியன் அந்த காரில் ஏறுவதற்குள் அந்த கும்பல் பெண் என்று கூட பாராமல் படுகொலை செய்தது. அதன் பிறகும் நான்கு முறை அவர் கொலை முயற்சியில் இருந்து தப்பித்துள்ளார். பின்பு ஒரு முறை தூத்துக்குடி மார்க்கெட்டில் அவரை கொலை செய்ய நடந்த முயற்சியில் எதிரியை கொலை செய்து விட்டு தப்பித்து விட்டார். மற்றோருமுறை வல்லநாட்டில் நடந்த துப்பாக்கி சூட்டில் இருந்து உயிர் தப்பினர். அவர் ஒரு முறை கூட உயிரைப்பற்றி அஞ்சவே இல்லை.

தேவேந்திர குல வெள்ளாளர் சங்கத்தின் தலைவராகி தேவேந்திர குலத்தை SC வகுப்பிலிருந்து நீக்கி MBC வகுப்பில் சேர்ப்பதற்காக மக்களை ஒன்று திரட்டி பல்வேறு போராட்டங்களை நடத்தினர். அதி திராவிடர் என்ற அரசனை எதிர்த்தும் போராடினர். 21 ம் நூற்றாண்டில் தனது குடும்பம், நண்பர்கள் என அனைவரையும் இழந்த பின்னும் சமுதயதிர்க்காக எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் போராடியவர் அண்ணன் பசுபதி அவர்கள்.
2011 ல் முல்லைபெரியார் பிரச்சினையில் தேனியில் ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டு வீடு திரும்பியவரை திண்டுக்கல் நந்தவனபட்டியில் அவரது வீட்டு வாசலிலேயே பண்ணையார் தரப்பினர் வெட்டி படுகொலை செய்தனர். இதனை தொடர்ந்து தென் மாவட்டம் முழுவதும் தேவேந்திர மக்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். 

பேருந்து நிறுத்தம், கல்வீச்சு, தூத்துக்குடியில் கடைகள் உடைப்பு, அரசாங்க அலுவலகங்கள் தாக்குதல் போன்றவயினால் தென்மாவட்டம் முழுவதும் முற்றிலுமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இவரை கொலை செய்த கொலையாளிகளை அரசாங்கமே பாது காப்பு கொடுத்து கைது செய்யாமல் பாதுகாத்து வருகிறது. அனால் இவர்களை தேவேந்திர குலதிடமிருந்து யாராலும் காப்பாற்ற முடியாது என்பதே உண்மை.
வீரம் நிலைநாட்ட
எதிரி புறம் காட்ட
சூழ்ந்த பேயோட்ட
சுட்டெரிக்கும் சூரியனையும்
தொட்டுப் பார்க்கத் துணிந்தவர்கள் தேவேந்திரர்கள்..

மாவீரன் வளர்ப்பில்
யாரும் சோர்ந்தவர்கள் இல்லை
இழப்புகள் கண்டாலும்
உரிமைகளை இழக்கமாட்டோம்
புறப்படுங்கள் தேவேந்திரர்களே !
புதுயுகம் படைத்திடுவோம்......

நெஞ்சமதில் அண்ணன் பெயரெழுதி
நேர்மையின் நெறி பிறழாமல்
பயிற்சி கொண்டு
பாய்ந்து வருவோம்
நாளை வந்து
நாட்டை ஆள்வோம்


மாவீரன் பசுபதிபண்டியன் அவர்களுக்குவேந்திரர் இளைஞர் நல அமைப்பு (DYWA)வின் வீரவணக்கம் ! வீரவணக்கம் !
Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்