Home » » உலகின் மிகச்சிறந்த தத்துவஞானி-அரிஸ்டோட்டில்

உலகின் மிகச்சிறந்த தத்துவஞானி-அரிஸ்டோட்டில்

Written By DevendraKural on Saturday, 26 January 2013 | 22:54

உலகின் மிகச்சிறந்த தத்துவஞானிகளில் தலை சிறந்தவர் அரிஸ்டோட்டில் என்று குறிப்பிடுபவர்,மசிடோனியா மன்னன் அமென்டாஸ் (Amyntas III ) என்பவனுக்கு மருத்துவராக பணியாற்றிய ஸ்நிக்கோ மாக்கஸ் என்பவரின் மகனாக ஸ்டஜிரா(Stageira ) என்ற மாநிலத்தில் அரிஸ்டோட்டில் கி .மு 384 இல் பிறந்தார்.

பிளாட்டோவிடம் அரிஸ்டோட்டில்தந்தையிடம் மருத்துவ கல்வியை பயின்று வந்தபோது கலை ,தத்துவம் ஆகியவற்றிலும் அரிஸ்டோட்டில் ஈடுபாடு கொண்டார் .சொக்ரடீசின்(Socrates )மாணவரான பிளாட்டோ"பிளாட்டோவின் புகழ் அப்போது மசிடோநியாவிலிருந்து அரிஸ்டோடிலையும் கவர்ந்தது .கலை,இலக்கியம் ,தத்துவம் ஆகியவற்றில் வல்லுனராக திகழ்ந்த பிளட்டோவிடம் கல்வி பயில வேண்டுமென்று அரிஸ்டோட்டில் விரும்பினார்ஆனால் தமது தந்தை அதற்கு ஒத்துக் கொள்ள மாட்டார் என்பதை அறிந்து,அந்த ஆசையை அரிஸ்டோட்டில் மனதிற்குள்ளேயே வைத்துக்கொண்டார்.

சிறிது காலத்தில் அரிஸ்டோட்டிலின் தந்தை மறைந்தார்.தனது அறிவுத்தாகத்திற்கு பிளாட்டோவிடம் கல்வி பயில்வதே சிறந்தது என்று எண்ணியிருந்த அரிஸ்டோட்டில்,பிளாட்டோவை சந்திக்க ஏதென்ஸ் நகரிற்கு சென்றார்பிளாட்டோவை சந்தித்து தம்மை மாணவனாக ஏற்றுக்கொள்ளும் படி அரிஸ்டோட்டில் வேண்டினார்.அரிஸ்டோட்டிலின் புத்திக்கூர்மையையும் தத்துவ ஞானத்தையும் கண்டறிந்த பிளாட்டோ மகிழ்ந்தார்.சுமார் இருபது ஆண்டுகள் அரிஸ்டோட்டில் ஏதென்ஸ் நகரிலேயே தங்கி பிளாட்டோவின் மாணவராக இருந்து கல்வி பயின்றார்கி மு 347 இல் பிளாட்டோ மறைந்தார்'

தம் ஆசிரியர் மறைவிற்கு பின்னர் ஏதென்ஸ் நகரத்தில் வாழ அரிஸ்டோட்டில் விரும்பவில்லை.சைராகஸ்(Syrakis )மன்னன் ஹர்மியாஸ் என்பவன் அரிஸ்டாடிலை தம் நாட்டிற்கு அழைத்துக்கொண்டான்.மன்னன் ஜர்மியாசின் சகோதரி பைத்டியஸ் என்ற அழகியை அரிஸ்டோட்டில் காதலித்து திருமணம் செய்து கொண்டார் .சிறிது காலத்தில் மன்னன் ஹரமியாஸ் மரணத்தை தழுவியதால் அரிஸ்டோட்டில் என்ன செய்வதென்று திகைத்தார்அப்போது அரிஸ்டோட்டிலின் அறிவாற்றலைக் கேள்வியுற்ற மசிடோனியா மன்னன் பிலிப் ,தம் மகனுக்கு கல்வி கற்றுக்கொடுக்க அரிஸ்டோடிலை அழைத்தான். அதனால் தாம் பிறந்த மசிடோநியாவுக்கு அரிஸ்டோட்டில் சென்றார் .மசிடோனியாவின் மன்னரான பிலிப்பின் மகனும் எதிர்காலத்தில் மாவீரனாக திகழ்ந்தவனுமான அலெக்சாண்டருக்கு ஆசிரியர் பொறுப்பை அரிஸ்டோட்டில் ஏற்றார்.அரிஸ்டோட்டிலுடன் மாவீரன் அலெக்சாண்டர்பன்னிரண்டு ஆண்டுகள் அலெக்சாண்டருக்கு நண்பராகவும் ஆசிரியராகவும் அரிஸ்டோட்டில் திகழ்ந்தார்.

விலங்குகளை பற்றி முதன் முதலாக ஆய்வு செய்த அறிஞர் அரிஸ்டோட்டில் ,விலங்குகள் பற்றி மக்களிடம் இருந்த தகவல்களைத் தொகுக்கும் முயற்சியில் ஈடுபட்டவரும் அரிஸ்டோட்டில் தான் விலங்கினங்களின் வாழ்க்கை முறையையும்,பழக்க வழக்கங்களையும்,உணவு முறைகளையும் சேகரித்து ,அவற்றை தொகுத்தவரும் அரிஸ்டோட்டில் தான் .அதனால் தான் அவர் 'விலங்கினங்களின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்அலெக்சாண்டர் உலகையே வெல்லும் பேரார்வம் கொண்டு படையெடுத்தான்.இதில் விருப்பமில்லாத அரிஸ்டோட்டில் மீண்டும் ஏதென்ஸ் நகருக்கு சென்றார் .அங்கு ஒரு பள்ளிகூடத்தை நிறுவி மாணவர்களுக்கு கல்வி போதித்து வந்தார் அரிஸ்டோடிலின் குடும்ப வாழ்க்கையும் சிந்தனைகளும்பிதியாஸ் என்ற பெண் குழந்தையை பெற்றெடுத்த அரிஸ்டோட்டிலின் மனைவி சிறிது காலத்தில் இறந்தார்.அதன் பின் ஹெர்பிலிஸ் என்ற பெண்ணுடன் அரிஸ்டோட்டிலுக்கு தொடர்பு ஏற்பட்டது .இந்த உறவில் பிறந்த குழந்தை நிக்கொமக்கஸ் என்று அழைக்கப்பட்டான். இவனும் சிறு வயதிலேயே மரணத்தை தழுவினான்.மனிதன் ,இறைவன் ,அரசியல் என மூன்று பிரிவுகளையும் அலசி ஆராய்ந்து தமது தத்துவ தரிசனமாக உலகிற்கு வழங்கினார் அரிஸ்டோட்டில் இந்த உலகம் இறைவனால் தோற்றுவிக்கப்படவில்லை.ஆனால் இந்த உலகத்தை இயக்குபவன் இறைவனே " மனிதன் தனிமனிதச் சிந்தனை கொள்ளாமல் ,சமூகச் சிந்தனையோடு வாழ வேண்டும்"அரசியல் அதிகாரம் என்பது ஒருவரிடமோ,அல்லது சிலரிடமோ இல்லையெனில் பலரிடமோ இருக்கலாம் .ஆனால் அதிகாரத்தில் இருப்பவர்கள் பொது நன்மைக்காக பாடுபட வேண்டும்.அப்போது தான் சரியான அரசியல் நடப்பதாகப் பொருள் அதை விடுத்து அதிகாரத்தில் இருப்பவர்களின் நலன் மட்டுமே பேணப்படுமாயின் அது மோசமான நிலைமைக்குக் கொண்டு செல்லும் இது போன்ற கருத்துகளை அரிஸ்டோட்டில் தமது நூல்களில் பதிவு செய்தார் .

அரிஸ்டோடிலின் இறுதிக்காலம்அலெக்சாண்டர் மறைந்த பின் ஏதென்ஸ் ,நகர மக்களுக்கும் மசிடோனியா மக்களுக்கும் பகை உணர்ச்சி வளர்ந்தது .அரிஸ்டோட்டில் மசிடோனியாவில் பிறந்தவர் என்பதாலும் அலெக்சாண்டருக்கு ஆசிரியர் என்பதாலும் ஏதென்ஸ் மக்களின் கோபம் அரிஸ்டோட்டில் பக்கம் திரும்பியது.ஏதென்ஸ் இளைஞர்களை தவறான வழிகளில் அரிஸ்டோட்டில் அழைத்து செல்கிறார் .என்ற பொய்யான குற்றச்சாட்டும் அவர் மீது சுமத்தப்பட்டது .தமக்கும் அரசியலுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லையென்றும் ,அலெக்சாண்டர் உலக நாடுகளைக் கைப்பற்ற எண்ணம் கொண்டதும் தாம் மசிடோனியாவை விட்டு வெளியேறி விட்டதாகவும் அரிஸ்டோட்டில் வாதாடினார்ஆனால் ஏதென்ஸ் அரசு அரிஸ்டோட்டிலுக்கு மரண தண்டனை விதித்ததுபிளாட்டோவின் ஆசிரியர் சாக்கிரடீசுக்கும் மரணதண்டனை .பிளாட்டோவின் மாணவர் அரிஸ்டோடிலுக்கும்  மரண தண்டனை.இந்த ஒற்றுமையை நினைத்து கற்றவர்கள் கவலை கொண்டனர் ஆனால் சிலரின் உதவி கொண்டு ஏதென்ஸ் நகரை விட்டு அரிஸ்டோட்டில் தப்பினார் .இருப்பினும் சால்சிஸ் என்ற தீவில் கி .மு 322 இல் அரிஸ்டோட்டில் மரணத்தை தழுவினார்'
Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்