Home » , » எழுந்து வா இளைய தேவேந்திரகுலமே...

எழுந்து வா இளைய தேவேந்திரகுலமே...

Written By DevendraKural on Sunday, 10 February 2013 | 01:34

மீண்டும் ஒரு சிறிய கட்டுரையின் வாயிலாக எமது இளைய தேவேந்திரகுலத்தை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நீண்ட நாட்களாக தேடிக் கொண்டிருந்த முதுகளத்தூர் கலவரம் என்ற நூலை நேற்று தேடிப்பிடித்து நெல்லை சந்திப்பில் ஒரு புத்தக கடையில் வாங்கி இரவே படித்து முடித்தேன். பதிப்பாசிரியர் கா.இளம்பரிதி அவர்களின் உரையை படிக்கும் பொழுதும் புத்தகத்தை முழுவதுமாக படித்து முடிக்கும் பொழுது ஒரு நீண்ட நெடிய மௌனமே என் மனம் முழுவதும் நிரம்பியது. எம் சமூக மக்கள் எத்தகைய ஒரு போராட்டங்களை தங்கள் வாழ்நாள் முழுவதும் போரடியிருகிறார்கள் அந்த போராட்டம் இன்னும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. எம் மக்களுக்குத்தான் எத்தனை எத்தனை இழப்புகள் பொருளாதார ரீதியாக, அரசியல் ரீதியாக ............. எதனை வழிகளில்லாம் ஒடுக்கப்பட முடயுமோ அத்தனை வழிகளையும் நம்மீது ஏவிஇருக்கிறார்கள் ஆனால் என் சமூகம் அத்தனையும் அடித்து நொறுக்கி உடைத்து எறிந்து இன்று தேவேந்திராகுலமாகவும் மல்லரினமாகவும் நிமிர்ந்து நிற்கிறது.

இத்தனை எழுச்சிக்கும் தன் உயிரை இழந்து சமூக விடுதலைக்கு வித்திட்ட அய்யா இம்மானுவேல் சேகரன் என்றால் மிகையாகாது.

எங்கெல்லாம் தேவேந்திரகுலம் ஒடுக்கபட்டதோ அங்கெல்லாம் முழு எழுச்சியுடன் திமிரி எழுந்து நிற்கிறது. என்றைக்குமே களத்தில் நேரடியாகவே இறங்கி சமூக மக்களின் விடுதலையை முன்னிரறுதியுள்ளது. மூன்று நாட்களுக்கு முன் ராஜபாளையத்தில் இருந்து திருநெல்வேலி வரும் பொழுது சங்கரன்கோவில் நீதிமன்றம் அருகே ஒரு பெரிய ஆர்ச் அமைக்கப்பட்டு அதன் மீது தேவேந்திரகுலத்தின் அடையாள சின்னமாகிய சிவப்பு பச்சை கொடி கம்பீரமாக பறக்கிறது. காந்தி நகர் மற்றும் கக்கன் நகர் திருவிழாவிற்காக ஆர்ச் அமைகப்ற்றுள்ளது.

 எம் சமூகத்தின் விடுதலை க்கான அடையாளமாகவே அக்கொடி கம்பீரமாக பறக்கிறது. எமது மக்களின் வரலாறை படிக்கும் பொழுது நான் என் மக்களுக்காக என்ன செய்துருகிறேன் என நினைக்கும் பொழுது பெரிய பூஜ்ஜியம்தான் காணப்படுகிறது. 

ரத்தம் படிந்த எமது மக்களின் வெற்றியில் என் சமூகத்திற்காக ஒன்றுமே செய்யாமல் நான் வீரநடை போடும் பொழுது என் மனம் குற்றத்தில் குறுகுறுக்கிறது. தேவேந்திரனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் இந்த எண்ணம இருக்கும் என்பதை திண்ணமாக எண்ணுகிறேன். இன்றைக்கு நாம் நன்றாக படித்து நல்ல வேலையில் இருக்கிறேன் என்பதற்காக நமது சமூகத்தை மறந்துவிட வேண்டாம் நமக்கு எதிராக ஏதாவது ஒரு தளத்தில் நமக்கு எதிரான நய வஞ்சக வலையை எதிரிகள் விரிதுகொண்டை இருக்கிறார்கள். அத்தகைய வலையை தேவேந்த்ரகுலம் அறுத்து எறிந்து விடும். எமது சமூகம் என்றைக்கும் யாரையும் எதற்காகவும் எதிர்பதது கிடையாது அது தனக்கான இலக்கை நோக்கி வெற்றி நடை போற்றுகொண்டே இருக்கிறது உண்மையான தேவேந்திர குலப்போரளிகளின் உதவியுடன்.

இளைய தேவேந்திர குலமே ஒரு நிமிடம் சிந்தியுங்கள் நாம் யார் நமது வரலாறு என்ன நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவாக சிந்தித்து முடிவு எடுங்கள். அத்தனை பெரும் களத்தில் இறங்கித்தான் போராட வேண்டும் என்பது இல்லை இச்சமூகத்தில் நமது சமூதாயத்திற்காக ஏதாவது ஒரு வடிவில் இயங்கி கொண்டே இருங்கள் நமக்கான நேரம் வரும்பொழுது அனைவரும் ஒன்றிணைந்து வெற்றியை கைப்பற்றுவோம். உயிர்பலிகளும் பொருளாதார இழப்புகளும் தேவேந்திர குலத்திற்கு ஒன்றும் புதிது அல்ல இவைகளால் எல்லாம் தேவேந்திரகுலத்தை என்றைக்கும் அடக்கி வைக்க இயலாது. வலிமை வாய்ந்த சமூகமாக நமது சமூகம் கட்டமைக்கப்பட வேண்டும். அதற்கு இளைய தேவேந்திரகுலதின் பங்கு அவசியம் தேவை. அதை உணர்ந்து பொறுப்புள்ள தேவேந்திர குல இளைனர்களாக செயல்படுவோம். 

எழுந்து வா இளைய தேவேந்திரகுலமே சரித்திரம் தனது பக்கங்களை திறந்தே வைத்துள்ளது நமது வெற்றியை பொன் எழுத்துகளில் பொறிப்பதற்காக.

வாழ்க தேவேந்திரகுலம் வளர்க மள்ளரின புகழ் ..

                   Vichu Raj


Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்