Home » » தலைவர் பிரபாகரன் தமிழகத்துக்கு அழைத்து வந்த இரா. ஜனார்த்தனம் காலமானார்

தலைவர் பிரபாகரன் தமிழகத்துக்கு அழைத்து வந்த இரா. ஜனார்த்தனம் காலமானார்

Written By DevendraKural on Thursday, 21 February 2013 | 05:05

உலகளவில் தமிழர்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டவரும், குறிப்பிடத்தகுந்த தமிழ் ஆர்வலருமான டி ஆர் ஜனார்த்தனம் இன்று சென்னையில் காலமானர்.
அவருக்கு வயது 75. அவர் சில காலம் நோய்வாய்ப்பட்டிருந்தார்.
தமிழுக்காக பல்வேறு தளங்களில் அவர் பணியாற்றி வந்தார்.1965 ஆம் ஆண்டு ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்திலும் பங்கு பெற்ற அவர், திமுக நிறுவனர் அண்ணாதுரையின் நாடகங்கள் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்.

1974 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத் தமிழராய்ச்சி மாநாட்டில், தடையை மீறி அவர் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்த போதுதான், போலீசாருக்கும் தமிழ் மக்களுக்கும் மோதல் ஏற்பட, அதையடுத்து நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டனர்.

அச்சம்பவம் இலங்கை தமிழர் போராட்ட வாலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக கருதப்படுகிறது.

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட பலரை தமிழகத்துக்கு முதல் முறையாக அழைத்து வந்தவர் ஜனார்த்தனம் அவர்கள்தான் என்பதும் குறிப்பிடத்தகுந்தது.

தமிழகத்தில் பிறந்து வாழ்ந்தாலும், ஈழத்தமிழ் மக்களை தன் இதயங்களில் சுமந்தபடி வாழ்ந்து வந்த உலகத்தமிழர் பேரவையின் தலைவர் இரா. ஜனார்த்தனன் நேற்று முன்தினம் 20ம் திகதி சென்னையில் காலமானார்.
என்ற சோகமான செய்தியை உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தலைமைச் செயலகம் உலகத் தமிழர்களோடு பகிர்ந்து கொள்கின்றது.நமது உலகத் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தோடு நீண்ட காலத்தொடர்பை கொண்டிருந்த வண்ணம் நாம் நடத்திய அனைத்து உலக மாநாடுகள் அனைத்திலும் தவறாது பங்கு கொண்ட மறைந்த இரா. ஜனார்த்தனன் அவர்கள் ஈழத்தமிழர்களை தனது இதயங்களில் சுமந்தபடி வாழ்ந்து வந்த ஒரு தீவிரமான தமிழ்த் தேசியத்தின் பற்றாளர் என்பது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு மறைந்த உலகத் தமிழர் பேரவையின் தலைவர் இரா. ஜனார்த்தனனின் மறைவு குறித்து உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தலைமைச் செயலகம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.மேற்படி தலைமைச் செயலகத்தின் சார்பில் உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தலைவர் வேல். வேலுப்பிள்ளை, செயலாளர் நாயகம் துரை. கணேசலிங்கம், சர்வதேச ஊடகப் பொறுப்பாளர் ஆர். என். லோகேந்திரலிங்கம் ஆகியோர் இணைந்து கையெழுத்திட்டுள்ள மேற்படி அனுதாபச் செய்தி இன்று வெளியாகியுள்ளது.மேற்படி அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-மறைந்த இரா. ஜனார்த்தனன் அவர்கள் நமது உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தோடு நீண்ட காலத்தொடர்புகளை மேற்கொண்டிருந்த ஒரு தமிழர் அறிஞர் ஆவார். நமது இயக்கம் நடத்திய பல உலக மாநாடுகளில் தவறாது பங்குபற்றி உலகத் தமிழர்களுக்காகவும் குறிப்பாக ஈழத்தமிழ் மக்களின் விடுதலைக்காகவும் தனது குரலை ஓய்வின்றி எழுப்பியவர்.1965ம் ஆண்டு ஆண்டு தனது மாணவப் பராயத்தில் சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவனாக இருந்தபோது அவர் மாணவர் பேரவையின் தலைவரான இருந்து பல தமிழ் மொழி ஆதரவுப் போராட்டங்களை நடத்தியவர். தனது 75வது வயதில் காலமாகியுள்ள அவர் தனது இறுதிநாட்கள் வரையிலும் தமிழ் மொழிக்காகவும் உலகத் தமிழர்களுக்காகவும் தனது நேரத்தையும் பொருளையும் செலவிட்டவர்.1965ம் ஆண்டு அவர் மாணவத் தலைவராக இருந்த போது அண்ணாத்துரை அவர்கள் தமிழகத்தின் முதல்வராக இருந்தபோது மாணவர்களை திரட்டி இந்தி எதிர்ப்பு போராட்டத்தை தமிழகம் எங்கும் நடத்தியவர். அந்த நேரத்தில் முதல்வராக இருந்த அண்ணாத்துரை அவர்கள் வழங்கிய மறைமுகமான ஆதரவு அவரது போராட்டத்தை வெற்றியடையச் செய்யது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.இலங்கைத் தமிழர்களுக்கு இலங்கையில் இனரீதியான பிரச்சனைகளும் அடக்குமுறைகளும் உள்ளன என்பதை நன்கு உணர்ந்து கொண்ட இவர் தந்தை செல்வாவோடு தனது உறவுகளைப் பேணியவண்ணம் செயலாற்றி 1972ம் ஆண்டு தந்தை செல்வாவை தமிழகத்திற்கு அழைத்து அவரை தந்தை பெரியாரோடும் கலைஞர் கருணாநிதியோடும் தொடர்புபடுத்தியவர் என்ற பெருமையும் மறைந்த இரா. ஜனார்த்தனன் அவர்களுக்கு உண்டு.தந்தை செல்வா மீது கொண்ட அபாரமான பற்றின் காரணமாக தனது புதல்வனுக்கு செல்வா என்ற பெயரையும் தனது புதல்விக்கு ஈழச்செல்வி என்ற பெயரையும் சூட்டிய பெருமகன் என்பதை நாம் அறிகின்றபோது, ஈழத்தமிழ் மக்கள் எந்தளவிற்கு இவர் மீது மரியாதை செலுத்த வேண்டும் என்பது நன்கு புலனாகும்.தொடர்ச்சியாக ஈழத்தமிழ் மக்கள் மீது பற்றுக்கொண்டு அவர்களுக்காக குரல் கொடுத்து வந்த இரா. ஜனார்த்தனன் அவர்கள் 1983ம் ஆண்டு இலங்கையில் மிகப் பயங்கரமான முறையில் தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைகள் மற்றும் சொத்துக்கள் அழிப்பு ஆகியவை இடம்பெற்ற போது இந்திய மத்திய அரசு அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு இலங்கை அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை என்ற காரணத்தை முன் வைத்து தனது மேலவை உறுப்பினர் பதவியை தூக்கி எறிந்து அதனை இராஜினாமாச் செய்தவர் என்பதை நமது உலகத்தமிழ் மக்கள் கவனிக்கவேண்டும்.1974ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெற்றபோது மேற்படி மாநாட்டிற்கு அவர் அழைக்கப்பட்டிருந்தார். ஆனால் சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகம் அவருக்கு விசா வழங்க மறுத்துவிட்டது. ஆனால் தனது முயற்சியில் சோர்வடையாத இரா. ஜனார்த்தனன் அவர்கள் சென்னையிலிருந்து மலேசியா சென்று அங்கு தனது செல்வாக்கைப் பிரயோகித்து இலங்கைக்கான விசா பெற்று கொழும்பிற்கு பறந்து சென்று பின்னர் யாழ்ப்பாணம் சென்று மேற்படி உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் உரையாற்றினார்.அவர் உரையாற்றிக்கொண்டு இருக்கும் போதுதான் இலங்கை அரசுக்கு செய்தி போனது சென்னையில் விசா மறுக்கப்பட்ட இரா. ஜனார்த்தனன் அவர்கள் யாழ்ப்பாணத்தில் வீரசிங்கம் மண்டபத்தில் உரையாற்றிக்கொண்டு இருக்கின்றார் என்று. உடனடியாக அவரைக் கைது செய்யும் படி கொழும்பிலிந்து பொலிஸ் தலைமையகம் யாழ்ப்பாண பொலில் தலைமையகத்திற்கு செய்தி அனுப்புகின்றது இரா. ஜனார்த்தனை கைது செய்யும்படி. ஆனால் அங்கிருந்து தலைமறைவாகி பாதிரியார் வேடத்தில் கடல்மார்க்கமாக சென்னைக்கு மீண்டவர் இந்த தமிழ்ப்போராளி இரா. ஜனார்த்தனன் அவர்கள்.இவ்வாறான எழுச்சியான குணாம்சங்களைக் கொண்ட நமது தமிழ்த் தேசியப் பற்றாளர் இரா. ஜனார்த்தனன் அவர்கள் சுமார் 50 ஆண்டு காலமாக ஈழத்தமிழர்களுக்காகவும் தமிழகத் தமிழர்களுக்காகவும் போராட்டங்களை நடத்தியவர். அத்துடன் நமது உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தோடு நீண்ட காலத் தொடர்பை கொண்ட வண்ணம் நமது மக்களுக்காக குரல் கொடுத்தவர் என்பதை நாம் என்றுமே மறக்கமுடியாது.இவ்வாறு உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்