Home » » பொறியியல் கல்லூரி மாணவர் படுகொலை -டாக்டர் கிருஷ்ணசாமி கண்டனம்

பொறியியல் கல்லூரி மாணவர் படுகொலை -டாக்டர் கிருஷ்ணசாமி கண்டனம்

Written By DevendraKural on Friday, 22 February 2013 | 23:07

பலியான மாணவரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கவேண்டும். டாக்டர் கிருஷ்ணசாமி 

புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நெல்லையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:

பள்ளர், குடும்பர், காலாடி, பண்ணாடி என அழைக்கப்படுபவர்களை தேவேந்திரகுல வேளாளர் என அர சாணை பிறப்பிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இக் கோரிக் கையை வலியுறுத்தி கடந்த 20ம்தேதி முதல் மாவட்டம்தோறும் புதிய தமிழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. நெல்லையில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதைத்தொடர்ந்து மார்ச் 20ம் தேதி முதல் ஒன்றிய அளவில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது. நெல்லை வல்லநாடு அருகே பக்கப்பட்டியை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் திவாகர் ஒரு கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது கண்டிக்கத்தக்கது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் செல்லும் பஸ்களில் ஜாதி வெறியைத் தூண்டும் வகையில் பாடல்கள் ஒலிபரப்புவதை அரசு தடை செய்ய வேண்டும். இதையும் மீறி அரசு மற்றும் தனியார் பஸ்களில் ஜாதி மோதல்களை ஏற்படுத்தும் வகையில் பாடல்கள் ஒலிபரப்புவதை தடை செய்யவேண்டும். தனியார் பஸ்களில் மட்டுமே ஜாதி மோதல்கள் ஏற்படுகிறது. இதை தடுக்காத தனியார் பஸ்களையும் அந்த வழித்தடங்களையும் ரத்து செய்யவேண்டும். பலியான மாணவரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கவேண்டும்.

காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பை மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. இது மட்டும் இப்பிரச்னைக்கு நிரந்த தீர்வாகாது. ஆனால் தண்ணீரை பெற தொடர்ந்து போராட வேண்டியது வரும். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் சுட்டுக் கொல்லப்பட்டது, 20ம் நூற்றாண்டில் மிகப்பெரிய மனித உரிமை மீறல். இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவித்து சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரணை நடத்தவேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவிததார்.
Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்