Home » » சட்டசபைக்கு வெளியே இந்திய கம்யூ-புதிய தமிழகம் எம்.எல்.ஏ.க்கள் ஆர்ப்பாட்டம்: ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு .

சட்டசபைக்கு வெளியே இந்திய கம்யூ-புதிய தமிழகம் எம்.எல்.ஏ.க்கள் ஆர்ப்பாட்டம்: ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு .

Written By DevendraKural on Friday, 8 February 2013 | 03:31


சட்டசபைக்கு வெளியே இந்திய கம்யூ-புதிய தமிழகம் எம்.எல்.ஏ.க்கள் ஆர்ப்பாட்டம்: ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு
டாக்டர் கிருஷ்ணசாமி

இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா வருவதை கண்டித்து இன்று சட்டசபைக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ.க்களும், புதிய தமிழகம் கட்சி எம்.எல்.ஏ.க்களும் கண்டன வாசகங்கள் அடங்கிய கருப்பு பேட்ஜ் அணிந்து சட்டசபைக்கு வந்தனர். முன்னதாக சட்டசபைக்கு வெளியே அவர்கள் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தினார்கள்.





இந்திய கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ.க்கள் குணசேகரன் தலைமையிலும், புதிய தமிழகம் கட்சி எம்.எல்.ஏ.க்கள் டாக்டர் கிருஷ்ணசாமி, ராமசாமி ஆகியோரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:-

இலங்கையில் இனப்படு கொலை செய்த அதிபர் ராஜபக்சே இந்தியாவில் நுழைய அனுமதிக்கக் கூடாது. அவரை உடனடியாக வெளியேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்க மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானத்தை அமுல்படுத்த மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்.



இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்