Home » » 2013 மற்றும் 2014க்கான பட்ஜெட் முக்கிய அம்சங்கள்

2013 மற்றும் 2014க்கான பட்ஜெட் முக்கிய அம்சங்கள்

Written By DevendraKural on Friday, 1 March 2013 | 01:24

2013-14ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மக்களவையில் காலை 11 மணிக்கு மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.




தனி நபர் வருமான வரி விதிப்பில் எந்த மாற்றமும் செய்யப்படாது என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் பெறுவோருக்கு 10 சதவீத கூடுதல் வரி விதிக்கப்பட இருக்கிறது. முதல் முறையாக 25 லட்சம் ரூபாய் வரை வீட்டுக் கடன் பெறுவோருக்கு 1 லட்சம் வரை வட்டி மானியம் வழங்கும் திட்டத்தை பட்ஜெட்டில், நிதியமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்தார். சிகரெட், செல்போன்கள், மார்பிள்கள் போன்றவற்றுக்கான உற்பத்தி வரி அதிகரிக்கப்பட்டுள்ளதால், அவற்றின் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.



இதேபோல், இறக்குமதி செய்யப்படும் சொகுசு கார்களுக்கான வரியும் அதிகரிக்கப்பட்டுள்ளது. திரைப்படத் துறையினரின் கோரிக்கையை ஏற்று திரைப்படங்களுக்கு சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக நிதியமைச்சர் அறிவித்தார். பெங்களூர் - சென்னை இடையே தொழில் மண்டலம், தூத்துக்குடியில் புதிய துறைமுகம் உள்ளிட்ட திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.



அடுத்த ஆண்டுக்குள் அனைத்து பொதுத்துறை வங்கிக் கிளைகளிலும் ஏடிஎம் அமைக்கப்படுவதுடன், பெண்களுக்கான தனி வங்கிகளை அமைப்பதற்கான திட்டமும் செயல்படுத்தப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.



வரும் நிதியாண்டில் வரிகள் மூலம் அரசுக்கு 18 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் 5.2 சதவீதமாக இருக்கும் நிதிப் பற்றாக்குறையை 4.8 சதவீதமாக குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் குறிப்பிட்டார். வேகமாக வளர்ச்சியடைந்துவரும் நாடுகளின் பட்டியலில், சீனா மற்றும் இந்தோனேசியாவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா இருக்கும் குறிப்பிட்ட ப. சிதம்பரம், இந்த வளர்ச்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்கு வெளிநாட்டு முதலீடுகள் அவசியம் என்று கூறினார்.



பொது பட்ஜெட்: செபியில் மாற்றம்

புதுடெல்லி: அந்நிய முதலீட்டுக்கு வழி செய்யும் வகையில் செபி அமைப்பில் மாற்றம் செய்யப்படும்.

பொது பட்ஜெட்: சிகரெட்டுக்கு வரி உயர்வு

புதுடெல்லி: சிகரத்துக்கு விதிக்கப்படு வரி 18% உயர்த்தப்பட்டுள்ளது.

பொது பட்ஜெட்: பங்கு பரிவர்த்தன வரி குறைப்பு

புதுடெல்லி: பங்கு பரிவர்த்தன வரி 0.017% லிருந்து 0.01% ஆக குறைப்பு. தோல் பொருள் தயாரிப்பு தொடர்பான வரி 2% குறைப்பு.

பொது பட்ஜெட்: சொத்து விற்பனைக்கு புதிய வரி

புதுடெல்லி: அசையா சொத்து விற்பனை செய்தால் 1 % புதிய வரி விதிப்பு. விவசாய நிலங்களுக்கு இந்த புதிய அவரியிளிருந்து விளக்கு. ரூ.50,000க்கு அதிகமான சொத்து விற்பனை செய்தால் 1% வரி விதிப்பு.

பொது பட்ஜெட்: திரைத் துறைக்கு சேவை வரி விலக்கு

புதுடெல்லி: திரைத் துறைக்கு சேவை வரி விலக்கப்பட்டுள்ளது.

பொது பட்ஜெட்: கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கத் திட்டம்

புதுடெல்லி: கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கத் திட்டம். நர்ப்புரங்களில் உள்ள கழிவு மற்றும் குப்பைத் தொட்டிகளிளிருந்து மின்சாரம் தயாரிக்கப்படும்.

பொது பட்ஜெட்: உள்கட்டமைப்புத் துறை

புதுடெல்லி: உள்கட்டமைப்புத் துறை க்கு பல வழிகளில் ஊக்குவிக்க அரசு முடி

பொது பட்ஜெட்: ரூ.1 கோடிக்கு வருமானம் இருந்தால் 10% வரி உயர்வு

புதுடெல்லி: ரூ.1 கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 5% கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது. ரூ.10 கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 5% கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 42,800 செல்வந்தர்கள் கூடுதல் வரி செலுத்துவார்கள். இளைஞர்கள் மேம்பாட்டுத் துறைக்கு புதிய திட்டம். தேசிய குழந்தைகள் அமைப்பிற்கு வழங்கப்படும் நன்கொடைக்கு 100% வரி விலக்கு.

பொது பட்ஜெட்: ஆடம்பரக்காருக்கு வரி உயர்வு

புதுடெல்லி: ஆடம்பரக்காருக்கு விதிக்கப்பட்ட வரி 75% 100% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மதிப்பு கற்களுக்கு 2% வரி குறைக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்பட்டு,

பொது பட்ஜெட்: செல்போன் வரி உயர்வு

புதுடெல்லி: ரூ. 2000த்துக்கு மேல் வாங்கப்படும் செல்போன்களுக்கு 6% ஆக வரி உயர்வு.

பொது பட்ஜெட்: காப்பீடு மசோதா

புதுடெல்லி: நடப்பு நாடாளு மன்றக் கூட்டத்தொடரில் காப்பீட்டுத் திட்டம் நிறைவேற்றப்படும்

பொது பட்ஜெட்: பற்றாக்குறை கவலை

புதுடெல்லி: நடப்பு நிதியான்றில் பற்றாக்குறை கவலை அளிக்கிறது.

பொது பட்ஜெட்: புதிய கட்டுப்பாட்டு ஆணையம்

புதுடெல்லி: நெடுஞ்சாலைத் துறை பணிகளை கவனிக்க புதிய ஆணையம் அமைக்கப்படும்.

பொது பட்ஜெட்:ராணுவத்துக்கு ரூ.2,03,000 கோடி நிதி

புதுடெல்லி: நடப்பு ஆண்டில் ராணுவத்துக்கு ரூ.2,03,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

பொது பட்ஜெட்: வருமான வரி உச்ச வரம்பு

புதுடெல்லி: வருமான வரி உச்ச வரம்பில் எந்த மாற்றமும் இல்லை. 5 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வருமானவரியில் ரூ.2,000 தள்ளுபடி. புதிய வருமான வரிச் சலுகையால் வரிச் செலுத்தும் 1 கோடி பேர் பயனடைவர்.

பொது பட்ஜெட்: தொழில் வளர்ச்சி



புதுடெல்லி: சென்னை, பெங்களூர் வழியாக தொழிலாக நெடும்பாதைத் திட்டம் அமைக்கப்பட்டு. தூத்துக்குடி துறைமுக வளர்ச்சிக்கு ரூ.7,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குளிர் சாதனக் கிடங்கு அமைக்க நபார்டு வங்கி மூலம் ரூ.5,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.



பொது பட்ஜெட்: வீட்டுக்கடன் சலுகை







புதுடெல்லி:ரூ.25 லட்சம் ரூபாய்க்கு மேல் வீட்டுக் கடன் வந்கியிருப்போருக்கு ஆண்டுக்கு வருமானத்தில் ரூ 1 லட்சம் வரை வட்டியிலிருந்து கழிவு செய்ய அனுமதி .







பொது பட்ஜெட்: புதிய தொழிற் பூங்கா







புதுடெல்லி: டெல்லி மற்றும் மும்பையில் புதிய தொழிற்பூங்கா அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் உதவியோடு குஜராத்,கொலேராவிலும் மகாராஷ்டிராவிலும் தொழிற்பூங்கா அமைக்கப்படும்







பொது பட்ஜெட்: வரிச்சலுகை







புதுடெல்லி: சிறு , குறு தொழில் செய்பவர்கள் வாங்கியுள்ள கடனுக்கு முதல் 3 ஆண்டு வரை வரிச் சலுகை அளிக்கப்பட்டு







பொது பட்ஜெட்: நிலக்கரி உற்பத்தி







புதுடெல்லி: நிலக்கரி இறக்குமதியைக் குறைக்க அரசு விருப்பம். மேலும் நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்கவும் அரசு விருப்பம் .







பொது பட்ஜெட்: வீட்டு வளர்ச்சி துறை







புதுடெல்லி: கிராமப்புற வீட்டுவளர்ச்சித் துறைக்கு ரூ.6000 கோடியும், நகர்ப்புற வீட்டு வளர்ச்சித் துறைக்கு ரூ.2000 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.







பொது பட்ஜெட்: பெண்களுக்கு சிறப்பு வங்கி.







புதுடெல்லி: பெண்களுக்கு தனியாக பொதுத் துறை வங்கி அமைக்கப்பட்டு அதன் மூலம் ரூ.1000 கோடி கடன் வழங்கத் திட்டம். இந்த பொதுத் துறை வங்கியை பெண்களே நடத்தத் திட்டம் .







பொது பட்ஜெட்: புதிய துறைமுகம்







புதுடெல்லி: மேற்கு வங்கம் மற்றும் ஆந்திராவில் புதிய இரண்டு துறைமுகங்கள் அமைக்கப்படும்.







பொது பட்ஜெட்: வருமான வரி உச்ச வரம்பு







புதுடெல்லி: வருமான வரி உச்ச வரம்பில் எந்த மாற்றமும் இல்லை. 5 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வருமானவரியில் ரூ.2,000 தள்ளுபடி. புதிய வருமான வரிச் சலுகையால் வரிச் செலுத்தும் 1 கோடி பேர் பயனடைவர்.







பொது பட்ஜெட்: உணவு உத்திரவாத சட்டம்







புதுடெல்லி: உணவு ந்த்திரவாத சட்டம் நடப்பு ஆண்டில் நிறைவேற்றப்பட்டும்.















பொது பட்ஜெட்: வேளாண் கடன் ரூ.7 லட்சம் கோடி











புதுடெல்லி:நடப்பு நிதியாண்டில் வேளாண் கடன் ரூ.7 லட்சம் கோடி விவசாயிகளுக்கு வழங்க அரசு நிர்ணயித்துள்ளது.







பொது பட்ஜெட்: விவசாயத்துக்கு நிதி







புதுடெல்லி:நடப்பு ஆண்டில் விவசாயத்துக்கு ரூ.27, 049 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாய ஆராய்ச்சிக்கு ரூ.3450 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாற்றுப்பயிர் திட்டத்துக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கிராமப்புற வளர்ச்சிக்கு ரூ.80,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.







பொது பட்ஜெட்: கல்வி திட்டத்துக்கு நிதி







புதுடெல்லி:கல்வித்திட்டத்துக்கு ரூ.65,867 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எஸ்.சி, எஸ்.டி. மற்றும் மகளிர் கல்விக்கு ரூ.5284 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.







பொது பட்ஜெட்: மதிய உணவுத் திட்டத்துக்கு நிதி







புதுடெல்லி: மதிய உணவுத் திட்டத்துக்கு ரூ.13,215 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது







பொது பட்ஜெட்: ஊரக மேம்பாட்டுத் துறைக்கு நிதி







புதுடெல்லி:ஜவகர்லால் ஊரக மேம்பாட்டுத் துறைக்கு ரூ.14,873 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.







பொது பட்ஜெட்: மனித வள மேம்பாட்டுத் துறைக்கு நிதி.







புதுடெல்லி: மனித வள மேம்பாட்டுத் துறைக்கு ரூ.65867 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.







பொது பட்ஜெட்: சுகாதாரத் துறைக்கு நிதி.







புதுடெல்லி: சுகாதாரம், குடும்ப நலத் துறைக்கு ரூ.21239 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.







பொது பட்ஜெட்: எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு நிதி ஒதுக்கீடு.







புதுடெல்லி: மகளிர் , குழந்தைகள் , சிறுபான்மையினர் வளர்ச்சிக்கு போதிய நிதி ஒதுக்கப்படும். தாழ்த்தப்பட்டோர் நலனுக்கு ரூ. 41561 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பழங்குடியினர் நலனுக்கு ரூ. 24,598 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் நலனுக்கு ரூ. 110 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்