Home » » சிங்கள புத்த பிக்குகள் மீது ஓட ஓட விரட்டித் தாக்குதல்!

சிங்கள புத்த பிக்குகள் மீது ஓட ஓட விரட்டித் தாக்குதல்!

Written By DevendraKural on Saturday, 16 March 2013 | 04:09

இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதற்கு எதிராக ஒட்டுமொத்த தமிழகமும் கொந்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில், அங்கிருந்து சுற்றுலா வந்த சிங்கள புத்த பிக்குகள் தஞ்சாவூரில் ஓட ஓட விரட்டியடிக்கப்பட்டிருக்கின்றனர்.
 இலங்கை இனப்படுகொலைக்கு எதிராக அரசியல் கட்சிகளின் சார்பில்லாமல் தன்னெழுச்சியாக தமிழக மாணவர்கள் பெரும் போராட்டத்தை முன்னெடுத்து நடத்தி வருகின்றனர்.
தமிழகமே உணர்வு அலைகளால் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்தின் குக்கிராமங்களிலும் கூட இந்தப் போராட்டம் வெடித்திருக்கிறது.
இந்நிலையில் இலங்கையிலிருந்து சிங்கள புத்த பிக்குகள் கோஷ்டி ஒன்று தஞ்சாவூருக்கு 'இன்ப சுற்றுலா' வந்திருக்கின்றனர்.
அவர்கள் தஞ்சாவூர் பெரிய கோயிலைப் பார்வையிட வந்த போது இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த, பழனி ராஜேந்திரன்  தலைமையிலான தமிழ்தேச பொதுவுடைமை கட்சியை சேர்ந்தவர்கள், புத்த பிக்குகளை சுற்றி வளைத்து அவர்களை  விரட்டி அடித்தனர்.
இதன்போது ஒரு  புத்த பிக்கு காயமடைந்ததாக தெரிகிறது.
இதர புத்த பிக்குகள்  ஆளுக்கு ஒரு திசையில் ஓடி பொலிசார்  உதவியுடன் அஙகுள்ள தொல்லியல் துறை அலுவலகத்தில்  தஞ்சமடைந்தனர்.
சில மாதங்களுக்கு முன்பும் இதேபோல் இலங்கையிலிருந்து சுற்றுலாவுக்காக வந்த சிங்களர்கள் ஓட ஓட விரட்டியடிக்கப்பட்டு தமிழகத்தை விட்டு வெளியேற்றப்பட்ட சம்பவமும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
2ம் இணைப்பு
தஞ்சையில் புத்த பிக்குவை வெளியேற்றிய த.தே.பொ.க. உள்ளிட்ட தமிழ் உணர்வாளர்கள் கைது!

தமிழீழ இனப்படுகொலைகளுக்கு நீதிகேட்டு தமிழகம் கொந்தளித்துக் கொண்டுள்ள நிலையில், அங்கு நடைபெற்ற இனப்படுகொலைகளை ஆதாரித்து வழிநடத்திய சிங்கள புத்த பிக்குகள் தமிழ்நாட்டிற்கு 'சுற்றுலா' என்ற பெயரில் தொடர்ந்து உலா வருகின்றனர்.
தமிழ்நாட்டு சட்டமன்றம் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டுமென ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி, இலங்கையுடனான சுற்றுலா உறவை முறித்துக் கொள்வதற்கும் முன்னிற்கின்ற போதுகூட, சிங்களவர்கள் தமிழ்நாட்டிற்கு வருவது குறைந்தபாடில்லை.
இன ஒதுக்கல் கொள்கையை அரசியல் கொள்கையாகக் கடைபிடித்து, கறுப்பின மக்களை நசுக்கி வெள்ளை இனவெறி ஆட்சி நடந்த தென்னாபிரிக்கா, ஜிம்பாப்வே ஆகிய நாடுகளுக்கு எதிராக சோவியத் ஒன்றியம் உள்ளிட்ட சோசலிச நாடுகளும், இந்தியா உள்ளிட்ட அணிசாரா நாடுகளும் தூதரக உறவை நீக்கி அந்நாடுகளுக்கு எதிராக பொருளாதாரத் தடை, விளையாட்டு வீரர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள், பக்தர்கள் உள்ளிட்ட யாரும் போகத் தடை, அதே போல் அங்கிருந்து மக்கள் தங்கள் நாடுகளுக்கு வரத்தடை என்ற தடைகளை விதித்து செயல்படுத்தி வந்தன.
ஆனால், இலட்சக்கணக்கான தமிழ் மக்களைக் கொன்றொழித்த சிங்கள புத்த பிக்குகளும், சிங்களவர்களும் தமிழ்நாட்டிற்கு தங்கு தடையின்றி வந்து செல்ல இந்திய அரசு தொடர்ந்து அனுமதித்துக் கொன்றிருக்கிறது.
இந்நிலையில், தமிழ்நாட்டிற்கு வரும் சிங்களவர்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அவ்வப்போது, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு இன உணர்வாளர் அமைப்புகள் போராட்டங்கள் நடத்தி வந்தன.
இதன் தொடர்ச்சியாகஇ இன்று சனிக்கிழமை தஞ்சை பெரிய கோவிலுக்கு வந்த சிங்கள புத்த பிக்கு ஒருவர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தோழர்களால் வெளியேற்றப்பட்டார். அவர் ஓட ஓட விரட்டியடிக்கப்பட்ட காட்சிகள் சத்தியம் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பியது.
போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ.இராசேந்திரன், தஞ்சை நகரச் செயலாளர் தோழர் இரா.சு.முனியாண்டி, தமிழக இளைஞர் முன்னணித் துணைத் தலைவர் தோழர் கெ.செந்தில்குமரன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் நல்லதுரை, விடுதலைத் தமிழ்ப் புலிகள் தோழர் அருள் மாசிலாமணி உள்ளிட்ட 12 பேர் தற்போது கைது செய்யப்பட்டு அரண்மனைக் காவல் நிலைத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.
Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்