Home » » திருச்சியில் மாணவர்கள் மீது காங்கிரஸ் கட்சியினர் தாக்கினார்கள்

திருச்சியில் மாணவர்கள் மீது காங்கிரஸ் கட்சியினர் தாக்கினார்கள்

Written By DevendraKural on Wednesday, 27 March 2013 | 13:00


திருச்சியில் இன்று காங்கிரஸ் உள்ளாட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம்அரிஸ்டோ ரவுண்டானா அருகில் உள்ள எல்.கே.எஸ். மகாலில் நடந்தது. திருச்சிமாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெரோம் ஆரோக்கியராஜ் வடக்கு மாவட்டதலைவர் ராஜசேகரன் மற்றும் கரூர் பெரம்பலூர் மாவட்ட தலைவர்கள் முன்னிலைவகித்தனர்.  கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன்
எம்.பி எம்.பி யும் கலந்து கொண்டார் .
இன் நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துதிருச்சி அரச சட்டக் கல்லூரி  மாணவர்கள் கருப்புப்கொடி ஏந்தி எதிர்ப்புபோராட்டத்தில் ஈடுபட்டனர்.  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்
ஞானதேசிகன் தலைமையில் கூடியிருந்த காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் திரண்டு மாணவர்கள் மீது உருட்டு கட்டைகள் கூரிய ஆயுதங்கள் போன்றவற்றால் கடுமையாக தாக்கினார்கள் இதனால் பலத்த காயம் அடைந்த மாணவர்கள் அரச பொது மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .
இவ் மாணவர்களை பார்வையிட நாம் தமிழர் விடுதலை சிறுத்தைகள்.
புதிய தமிழகம் போன்ற கட்சி தொண்டர்களும்  வழக்கறிஞ்சர்கள் தமிழ் உணர்வாளர்கள் என  அனைவரும் மருத்துவமனையில் திரண்டிருந்தார்கள் அப்போது மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களை தாக்குவதற்காக காங்கிரஸ் கட்சியினர் சிலர் உள் நுழைய முற்பட்டனர் இதனை அறிந்த தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் ஒன்றாக திரண்டு காங்கிரஸ் கட்சியினரை தாக்கி மருத்துவ மனையை விட்டு வெளியேற்றினார்கள் .
இதன் பின்பு  மாணவர்களை பார்வையிடுவதற்காக ஐயா பழ .நெடுமாறன்அவர்கள் மருத்துவமனைக்க வருகை தந்திருந்தார் சிகிச்சை அளிக்கப்படும்மாணவர்களை பார்வையிட்ட பின் மாணவர்களை கண்மூடித்தனமாக தாக்கிய காங்கிரஸ்கட்சியினரை வன்மையாக கண்டிப்பதோடு காவல் துறை உடனடியாக அவர்களை கைது செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.


Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்