Home » , , » ராஜபக்சவை இலங்கையிலிருந்து துரத்த வேண்டும்!-ஜான்பாண்டியன்

ராஜபக்சவை இலங்கையிலிருந்து துரத்த வேண்டும்!-ஜான்பாண்டியன்

Written By DevendraKural on Sunday, 24 March 2013 | 04:29

இலங்கையில் தமிழர்களை படுகொலை செய்த கொடூர அரக்கன் ராஜபக்சேவை அங்கு தமிழ் ஈழம் அமையும் வரை இலங்கையிலிருந்து துரத்த வேண்டும். அப்போதுதான் தமிழர்களுக்கு தனி ஈழம் அமையும் என தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் ஜான்பாண்டியன்
இன்று கன்னியாகுமரியில்  நடந்த தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட அளவிலான அரசியல் பயிற்சி பயிலரங்கத்தின் 2-வது நாள் நிகழ்ச்சியை தொடங்கி வைத்ததன் பிறகு தலைவர் ஜோன் பாண்டியன்  நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கை விவகாரம் தொடர்பாக அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது:-
தி.மு.க- காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகியது அரசியல் நாடகம். 2009-ல் இந்த முடிவை எடுத்திருந்தால் இலங்கையில் 3 லட்சம் தமிழர்கள் காப்பாற்றப்பட்டு இருப்பார்கள்.
கூட்டணியில் இருந்து தி.மு.க. விலகிய பிறகு மு.க. ஸ்டாலின், அழகிரி வீடுகளில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது பழிவாங்கும் நடவடிக்கை.
இலங்கையில் தமிழர்களை படுகொலை செய்த கொடூர அரக்கன் ராஜபக்சவை அங்கு தமிழ் ஈழம் அமையும் வரை இலங்கையிலிருந்து துரத்த வேண்டும். அப்போதுதான் தமிழர்களுக்கு தனி ஈழம் அமையும்.
இலங்கை பிரச்சினையில் இந்தியா பாரபட்சமாக நடந்து வருகிறது.
மீனவர்கள் இலங்கை இராணுவத்தால் படுகொலை செய்யப்படும் போது கூட இந்திய மீனவர்கள் என்று கூறாமல் தமிழக மீனவர்கள் என்று பிரித்து கூறுகிறார்கள். இது கண்டிக்கத்தக்கது.


பரமக்குடி கலவரம், சென்னையில் ஐகோர்ட்டு பிரபல வக்கீல் சங்கரசுப்பு மகன் வக்கீல் சதீஷ் கொலை வழக்கு போன்றவற்றில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டும் இன்னும் சி.பி.ஐ. விசாரணை தொடங்காதது கண்டிக்கத்தக்கது. 
தலித் அமைப்புகளான தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம் ஆகியவை அரசியல் அமைப்பு ரீதியாக ஒன்று சேர வாய்ப்பில்லை. ஆனால் சமுதாய பிரச்சினைக்காக சமுதாய ரீதியில் ஒன்று சேர்ந்து போராடும்’’என்றார்
இவ்வாறு அவர் கூறினார்.
Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்