Home » , » கருணா முன்னிலையில்தான் பாலச்சந்திரன் சுடப்பட்டான்!

கருணா முன்னிலையில்தான் பாலச்சந்திரன் சுடப்பட்டான்!

Written By DevendraKural on Wednesday, 27 March 2013 | 12:44


விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் சிங்கள இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தும் படம் சமீபத்தில் வெளியாகி உலகம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது பாதுகாவல்களில் ஒருவர் பாலச்சந்திரன் கொல்லப்பட்டது தொடர்பாக சில புதிய தகவல்களை அவர் வெளியிட்டார்.
பாலச்சந்திரனுக்கு 5 பேரை பாதுகாவலர்களாக பிரபாகரன் நியமித்திருந்தார். முள்ளிவாய்க்காலில் இறுதி கட்ட போர் நடந்த போது அந்த 5 பாதுகாவலர்களையும் பிரபாகரன் வெளிநாட்டுக்கு தப்ப வைத்தார். அவர்களில் ஒரு பாதுகாவலர் கடந்த வாரம் ஐ.நா. சபையில் இலங்கைக்கு எதிராக ஈழத் தமிழர்கள் நடத்திய போராட்டத்தில் பங்கேற்க வந்திருந்தார்.
பாலச்சந்திரன் கொல்லப்பட்டது தொடர்பாக சில புதிய தகவல்களை அவர் வெளியிட்டார். அவர் கூறியதாவது:-
உங்களைப் பற்றி கூறுங்களேன்? 
நான் தமிழில் பாண்டித்தியம் பெற்றவன். போராடுவது ஒவ்வொரு உயிருக்குமான பிறப்புரிமையாகும். விலங்குகளாகட்டும் மனிதர்களாகட்டும் தத்தமது தேவைகளை யும் உரிமைகளையும் பெற்றுக் கொள்வதற்கும் நிலைநிறுத்துவதற்கும் ஏதோவொரு வழிமுறையில் போராடித் தான் பெற வேண்டி யுள்ளது. நானும் அப்படியே! இன விடுதலைக்காக ஏதாவது செய்யலாம் என நித்தமும் நான் குழப் பிக்கொள்வேன்.
நான் இருந்த சுது மலையில் தலைவரின் கூட்டம் நடந்தது. தலைவரைக் காண பயம் எனக்கு. தலைவரிடம் அறிமுகப்படுத்தினான் என் அண்ணன். பயத்துடனே, ""தலைவரும் தமிழும்'' கவிதையை வாசித்தேன். தலைவரின் கை என் மீது பட அதுவரை என்னுள் இருந்த பயம் ஓடி ஒளிந்தது. பின்னாளில் தலைவரின் இளையமகன் பாதுகாப்பிற்கு நான் பணியமர்த்தப்பட்டேன்.

பாலச்சந்திரன் பற்றி? 
தலைவரின் மகன் என்பதால் 5 புலிகள் காவல். ஐந்தில் ஒருவன் நான். தலைவர் தமிழ் சொல்லிக் கொடுக்கச் சொன்னார். நானும் சொல்லிக் கொடுத்தேன். அவன் ஒரு தனிமை விரும்பி. புத்தகம் வாசிப்ப திலும், நீச்சலிலும் பெருமளவு நேரத் தினை செலவிடுவான். நன்றா கப் படிப் பான். கற்பூர புத்தி. நன்றாக நீச்சல் அடிப்பான். அம்மா ஊட்டும் சாப்பாடு பிடிக்காது. நண்டுக்கறி, வறுவல், இடியாப்பம் ரொம்ப வும் பிடிக்கும். எங்களுடன் சாப்பிடுவதில் பிரியம் அவனுக்கு.
பிறந்ததிலிருந்தே ஆயுதங்களைப் பார்த்ததினால் ஆயுதங்களை அவன் விரும்புவதில்லை. ஒருமுறை தலைவரின் துப்பாக்கியை தண்ணீரில் தூக்கிப் போட்டுவிட்டான். தலைவர் சிரித்துக் கொண்டே அதை எடுத்து கழட்டி, துடைத்தார். முக்கியமான ஒன்று, அவனுக்கு அண்ணனைப் போல், அக்காவைப் போல் போராட்ட குணமில்லை. அப்படிப்பட்ட ஒன்றும் தெரியாத அப்பாவியைக் கொன்றதுதான் வேதனை.
இந்த அப்பாவி சிறுவனைத்தான் கிடாய் ஆட்டை இறைச்சிக்காக கொல்வதற்கு முன் அதற்கு முருக்கங்குலை கொடுப்பது போல் எதையோ சாப்பிடக் கொடுத்துவிட்டு, பாவிகள் அவனை சுட்டுக் கொன்றுள்ளார்கள். தனக்கு நடக்கப் போவது எதையுமே அறியாமல் அந்தப் பாலகன் கொடியவர்கள் கொடுத்ததை கொறித்தபடி அங்குமிங்கும் வேடிக்கை பார்த்தபடி இருந்திருக்கிறான். எவ்வளவு கொடுமை? ஒரு பிஞ்சு உயிரை நேருக்கு நேர் நின்று சுட்டுக் கொல்வதற்கு எப்படி மனம் வந்தது? இவர்களுக்கு.

நாங்கள் தீவை விட்டு வெளியேறிய பொழுது, ஒவ்வொரு ஆர்மிக்காரனிடமும் தலைவரின் குடும்பப் புகைப்படம் பெரிய அளவில் கொடுக்கப்பட்டிருந்தது. அதை வைத்துத்தான் தம்பியை அடையாளம் கண்டிருப்பார்கள் என்று நினைத்திருந்தேன். இப்பொழுதுதான் எங்களுக்குள் பேசிக் கொண்டதால் ஒன்று எமக்கு விளங்கியது. பாலச்சந்திரனின் மரணம், கருணா கண் முன்னே நடந்திருக்கிறது.

உங்களின் அடுத்தக் கட்ட நகர்வு? 
உத்தரவுக்காகக் காத்திருக்கிறோம்.
குழந்தையாக இருந்தபோது பாலச்சந்திரனின்  படங்கள்
Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்