Home » » இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம்! நாம் தமிழர் கட்சி ஆதரவு சீமான் அறிக்கை

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம்! நாம் தமிழர் கட்சி ஆதரவு சீமான் அறிக்கை

Written By DevendraKural on Thursday, 14 March 2013 | 08:39



தமிழக கல்லூரி மாணவர்கள் எழுச்சியாக திரண்டு தமிழீழத்திற்கு ஆதரவாக, இனப்படுகொலைக்கு எதிராக ஒருமித்த கருத்துடன் போராடி வருகின்றார்கள். உங்களின் தீரமிக்க போராட்டம் சர்வதேசத்தையே தமிழகம் பக்கம் திருப்பியுள்ளது. இவ்வாறு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இப்போராட்டம் குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
தமிழக கல்லூரி மாணவர்கள் எழுச்சியாக திரண்டு தமிழீழத்திற்கு ஆதரவாக, இனப்படுகொலைக்கு எதிராக ஒருமித்த கருத்துடன் போராடி வருகின்றார்கள்.
தமிழக கல்லூரி மாணவர்கள் முன்வைத்திருக்கின்ற கோரிக்கைகள் இச்சூழலில் மிக அவசியமானது மட்டுமல்ல, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகவே நான் கருதுகிறேன்.
ஈழ விடுதலைக்காக தன் வயிற்றில் பசி என்னும் நெருப்பினை சுமந்து, தமிழீழம் ஒன்றே தீர்வு என்கிற தெளிவான முழக்கத்தோடு, மரணத்திற்கு அஞ்சாமல் போராடும் உங்களின் தீரமிக்க போராட்டம் சர்வதேசத்தையே தமிழகம் பக்கம் திருப்பி உள்ளது.
போராட்டக்களத்தில் துணிந்து நிற்கிற சட்டக்கல்லூரி, பொறியியல், மருத்துவம், கலை, அறிவியல் கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்லூரி மாணவர்கள் ஆகிய உங்கள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் அறவழியில் போராடி வரும் தமிழக மாணவர்களின் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிப்பதோடு மட்டுமல்லாமல் களத்திலும் முழுமையாக துணை நிற்கும் என்றும் உறுதியாக தெரிவித்துக் கொள்கின்றேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்