இதில் தமிழக வீரர் பெருமாளும் ஒருவர். இவரது மறைவு நேற்று முன்தினம் மதியம் ஒரு மணிக்கு தும்மநாயக்கன்பட்டியில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. மகன் உயிரிழந்தது கேட்டு, பெற்றோர் சோகத்தில் மூழ்கினர். பெருமாளின் வீட்டிற்கு கிராம மக்கள் வந்து ஆறுதல் கூறி வருகின்றனர். பேரையூரிலிருந்து தும்மநாயக்கன்பட்டி செல்லும் சாலையில் பெருமாளுக்கு அஞ்சலி செலுத்தும் பல்வேறு வகையான போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
இன்று உடல் வருகிறது: பேரையூர் பேரூராட்சி தலைவர் குருசாமி கூறுகையில், ‘‘விருதுநகர் எம்பி மாணிக்கம்தாகூர் முயற்சியால் விமானம் மூலம் பெருமாளின் உடல் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் பேரையூர் கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. பெருமாள் உடல் சொந்த ஊருக்கு வெள்ளிக் கிழமை கொண்டு வரப்படும் என்றார்.

கிராமத்தில் 2வது சோகம்: தும்மநாயக்கன்பட்டி சிறிய கிராமமாக இருந்தாலும், இங்கிருந்து ஏராளமானோர் ராணுவம், மத்திய போலீஸ் படை உள்ளிட்டவற்றில் பணிபுரிந்து வருகின்றனர். தற்போது இந்த கிராமத்தை சேர்ந்த 8க்கும் மேற்பட்டோர் ராணுவத்தில் பணிபுரிகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு இதே கிராமத்தைச் சேர்¢ந்த ராணுவ வீரர் பாலமுருகன் குஜராத்தில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் உயிரிழந்தார் என்பது குறிபிடத்தக்கது.
பெருமாளால் மீண்டது குடும்பம்
பெருமாளின் தந்தை லிங்கம் கூறியதாவது: எனக்கு பெருமாள் உள்பட 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். பெருமாள் மட்டும் பிளஸ் 2 வரை படித்துவிட்டு, 2010ம் ஆண்டு சிஆர்பிஎப் வீரராக பணியில் சேர்ந்தார். ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வறுமையில் வாடிய எங்கள் குடும்பம் பெருமாளின் ஊதியத்தில் மீண்டது.
பெருமாள் தன்னுடைய சம்பளத்தில் சகோதரிகளுக்கு திருமணம் செய்து வைத்தார். கடந்த ஜனவரியில் ஊருக்கு வந்த பெருமாளிடம் அவரது திருமணம் குறித்து பேசினோம். பெண் பாருங்கள் வைகாசி பொங்கலுக்கு ஊருக்கு வருகிறேன் எனக்கூறி சென்றார். தற்போது எங்களை துயரத்தில் ஆழ்த்திவிட்டு சென்றுவிட்டார் என கண்ணீர் மல்க கூறினார்.

பெருமாளுக்கு தனி வீடு
நண்பர்கள், உறவினர்கள் கூறுகையில், ‘‘தனது சகோதரிகளின் திருமணத்திற்கு பின்புதான் திருமணம் செய்வதாக கூறி பெருமாளுக்காக அவரது பெற்றோர் தங்கள் வீட்டின் அருகேயே புதியதாக ஒரு வீடு கட்டிவந்தனர். மகன் திருமணத்திற்கு பின்பு அங்கு மருமகளுடன் தங்க வேண்டும் என்பதற்காக அந்த வீடு கட்டப்பட்டது,'' என்றனர்.
உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம்-முதல்வர் ஜெயலலிதா
காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் பெருமாள் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகர், பெமினா பகுதியில் அமைந்துள்ள மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் முகாம் மீது நேற்று முன்தினம் தற்கொலை படை தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.
இதில் மதுரை மாவட் டம், பேரையூர் அருகே உள்ள தும்மநாயக்கன் பட்டி கிராமத்தை சேர்ந்த மத்திய பாதுகாப்பு படை வீரர் பெருமாள் உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். அவரது குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். பெருமாள் உடலை அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்வதற்குரிய அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்ய உத்தரவிட்டுள்ளேன். பெருமாள் குடும்பத்துக்கு ஸீ 5 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
பகை கொண்ட
கொடும் கோலர்
வதை செய்து
உன்னை கொன்றார்....
வேதனையால் வெதும்புகிறது
எம் நெஞ்சம்....
தேவேந்திரர் இளைஞர் நல அமைப்பின் (DYWA) வீர வணக்கம் .