Home » , , , , » போராளி ஜெசிந்தா பாண்டியன் அவர்களின் 7-வது ஆண்டு வீரவணக்கம்

போராளி ஜெசிந்தா பாண்டியன் அவர்களின் 7-வது ஆண்டு வீரவணக்கம்

Written By DevendraKural on Sunday, 7 April 2013 | 03:48



எங்கள் அண்ணி.... இன்று நீங்கள் இல்லை
ஆனால் உங்கள் சிந்தனைகளை நாம்
உள் வாங்கி உணர்வுத் தேவேந்திரர்களின் 
நெஞ்சமதில் அழிந்திடாமல் வாழ்வீர்கள்...

தேவேந்திர மக்களின்
உரிமைக் குரலாய், 
ஊடகவியலாளராய், 
தலைவரின் ஆலோசகராய்
எப்போதும் தேவேந்திர மக்களுக்காய்
தேவேந்திரர்கள் படும் துன்பங்களுக்கு
முடிவு கட்ட வேண்டும் என்று
இரவு பகல் பாராது பணியாற்றினாயே...

தேவேந்திரர்கள் கலவரகரர்கள் என்றவர்களை
இல்லை அவர்கள் போராளிகள்
உரிமைப் போர் செய்கின்ற
சமுதாய  போராளிகள் என்று
உலகுக்கு உணர்த்தினாயே... 

கோயில்கள் இடிக்க படுவதுண்டு
தெய்வங்கள் இறப்பதில்லை
எங்கள் இதய கோயிலில் 
குடிகொண்டவர் நீங்கள்

உங்களை 
நினைவுகூரும்
இந்நாளில்...
எரிமலையாய் 
எழுச்சிகொள்கிறோம்...

பாயும் புலியாய்
உறுமி எழுகிறோம்...

நீங்கள் 
கடந்துவந்த பாதை...
நாங்கள் 
நடந்து பார்க்கும் வரை...
வேரூன்றி நிற்போம்
விழுதாய்...

வீரவணக்கங்களை சமர்ப்பணம் செய்கின்றேம்..
Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்