Home » , , » மீண்டெழும் பாண்டியன் வரலாறு தடை -திராவிடர் விடுதலை கழகம்

மீண்டெழும் பாண்டியன் வரலாறு தடை -திராவிடர் விடுதலை கழகம்

Written By DevendraKural on Wednesday, 26 June 2013 | 10:14


மீண்டெழும் பாண்டியன் வரலாறு” என்ற கே.செந்தில் மள்ளர் எழுதிய 624 பக்க நூலைதமிழ்நாடு அரசு தடை செய்துள்ளதுஇந்த நூலில் வரலாறுகள் திரித்துக் கூறப்பட்டுள்ளனஎன்றும்பசும்பொன் முத்துராமலிங்க தேவர்காமராசர்அழகு முத்துகோன் போன்றதலைவர்கள் குறித்து தவறான தகவல்கள் இடம் பெற்றிருப்பதால்ஜாதி மோதல்கள் வரும்வாய்ப்புகள் உண்டு என்றும்தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
 அப்படியானால் இன்றும் இந்த நாட்டில் பெரும்பான்மை மக்களான ‘சூத்திரர்களை’,பிராமணர்களின் தேவடியாள் மக்கள் என்று கூறும் மனு சாஸ்திரங்கள் புதிய புதியபதிப்புகளாக அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டு ‘துக்ளக்’, ‘தினமலர்’ ஏடுகள் அதற்கு மதிப்புரைஎழுதி பாராட்டி வருகின்றனவே! “பிராமணர்களுக்கு” கலியுகத்துக்காக உருவாக்கப்பட்டபராசர ஸ்மிருதி’, ‘பிராமணன்’ மற்ற ஜாதியாருடன் சேர்ந்து சாப்பிடக் கூடாது என்றுகூறுகிறதுஅது நூலாக பரப்பப்படுகிறதே!
 செத்துப் போன மூத்த சங்கராச்சாரி சமூகத்தில் நான்கு வர்ணங்களுக்கும் வெவ்வேறுகடமை உண்டு என்று நியாயப்படுத்தி, “ஒருவர் சமைத்ததை இன்னொருவர் சாப்பிடக்கூடாதுஒருத்தரோடு ஒருத்தர் கல்யாணம் பண்ணிக் கொள்ளக் கூடாது” என்று ஏராளமானசமூகப் பகைமையை’ மூட்டி விடும் “தெய்வத்தின் குரல்” நூல் புதிது புதிதாக அச்சுப் போட்டுசந்தைக்கு வந்து கொண்டிருக்கிறதேஅவைகள் எல்லாம் தடை செய்யப்பட்டுவிட்டனவா?
 வர்ணாஸ்ரமத்தை’ நியாயப்படுத்தும் இராமாயணங்கள்நாடகமாக நூல்களாககாலட்சேபங்களாக பரப்பப்பட்டுத்தான் வருகிறது. ‘நான்கு வர்ணங்களையும் நான்தான்படைத்தேன்படைத்த எனக்கே இதை மாற்றக் கூடிய அதிகாரம் கிடையாது’ என்று ‘பகவான்கிருஷ்ணன்’ கூறுவதாக எழுதப்பட்டுள்ள பகவத்கீதை போற்றப்படுகிறதுபரப்பப்படுகிறது.பார்ப்பான் தன்னை “பிராமணன்” என்றும் ஏனையவர்களை ‘சூத்திரர்கள் என்றும் அறிவிக்கபூணூலை’ போட்டுக் கொண்டு வெளிப்படையாக திரிகிறான்இவை எல்லாம் தடைசெய்யப்பட்டுவிட்டதாபார்ப்பன மேல்ஜாதி ஆதிக்கப் பெருமைகளைக் கட்டமைக்கும்நூல்களை அங்கீகரித்துக் கொண்டு ‘மள்ளர்கள்’ நூலை மட்டும் தடை செய்வது எந்த ஊர்நியாயம் என்று கேட்கிறோம்.
 அதற்காக ஜாதியத்துக்கு வரலாற்றுப் பெருமை சேர்த்து அதை நியாயப் படுத்தும்இத்தகைய நூல்களை - கருத்தளவில் நாம் நமக்கு உடன்பாடு கிடையாதுஇத்தகையமுயற்சிகள் பார்ப்பனியம் கட்டமைத்த ‘ஜாதி அடுக்கு’ அமைப்புகளை உறுதியாக்கிபார்ப்பனியத்தை வலிமைப்படுத்தவே உதவும் என்பது நமது உறுதியான கருத்துஇதுமன்னராட்சி காலமல்லஉண்மையான மக்களாட்சிக்காக போராடும் காலம்.  ஜாதிஅடையாளங்களை உதறித் தள்ளும் சமத்துவ சமுதாயத்தைக் கட்டி எழுப்ப வேண்டியகாலம்ஜாதிப் பெருமிதம் - மீண்டும் பழமைக்கே இழுத்துப் போகும்.
 பெரியார் கூறுகிறார்:
சகோதரர்களேஇனி இந்த மாதிரியான சமூக மாநாடுகளில்சாதி உயர்வு தாழ்வு பற்றியபேச்சே இருக்கக் கூடாதுமற்ற சாதியார் என்பவர்களுடன் நாம் எப்படிக் கலப்பதுநாம்எவருக்கும் கீழ் ஜாதியல்ல என்கிற தன்மையை எப்படி அடைவதுநமக்குக் கீழும் நமதுநாட்டில் எந்த ஜாதியும் இல்லைநாம் எல்லோருமே சமமே என்கிறதான சமதர்ம நிலையைஎப்படி உண்டாக்குவது என்கின்ற காரியத்துக்கே பாடுபடவேண்டும்.”  - பெரியார் (1.6.1930 
Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்