Home » , » தலித்தியம் என்ற மோசடி கருத்தியல்!!

தலித்தியம் என்ற மோசடி கருத்தியல்!!

Written By DevendraKural on Thursday, 10 October 2013 | 12:02

தலித்தியம் என்ற மோசடி கருத்தியல்
===================================
அம்பேத்கார் என்ன நோக்கில் தலித்தியத்தை பார்த்தார், யாரை தலித் என்று சொன்னார் என்றெல்லாம் சற்று அலசி ஆராயாமல், அம்பேத்கார் தீண்டத்தகாதவர்களை,பட்டியல் சாதி மக்களுக்கான ஒரு கருத்தியலாக, அரசியலாக மட்டுமே, அதாவது ஒரு சாதிய குறியீடாக மட்டுமே தலித்தியத்தை வரையறுத்தார் என்ற போக்கு எவ்வளவு அபத்தம் என்பதை இனி பார்ப்போம். இங்கே பல தலித்திய முகமூடிகள் இங்கு கிழியும் என்று நம்புகிறோம்.

அம்பேத்கார் சொன்ன தலித்திய கருத்தியல் என்பது வர்க்கம். சாதியம் அல்ல. எங்கெல்லாம் எவன் என்ன காரங்களுக்காக ஒடுக்கப்படுகிரானோ, அவனை எல்லாம் ஒருங்கிணைக்கும் கருத்தியலே 'தலித்தியம்'. இந்த அடிப்படையில் பார்த்தால்,
* ஆதிக்க சாதியினரால் ஒடுக்கப்படும் பட்டியல் சாதி மக்களை தலித் என்று சொன்னார். தம் மக்களை திரட்டி போராடினார். இதை அப்படியே தலைகீழாக புரிந்து கொண்டு, பட்டியல் சாதி மக்களைத் தான் இவர் தலித் என்று சொன்னார் என்பது மோசடி பிரச்சாரம். எப்படி?

* சூத்திரர்கள் தலித். எதனால் சத்ரியர்களால் ஒடுக்கப்படுவதால்.
* வைசியர்களும், சத்ரியர்களும் தலித் தான். எதனால் பார்ப்பனர் ஒடுக்கப்படுவதால்.
* கள்ளர் ஒருவரால் இன்னொரு ஒரு சேர்வை அடிமையாக்கப்படுகிறார் என்றால், அந்த அடிமையாக்கப்பட்ட சேர்வை தலித்தே.

ஆனால், இங்கு தலித்தியம் என்ற பெயரில் என்ன நடக்கிறது.? பொது எதிரியாங்க பார்ப்பனியத்தை விட்டு விட்டு, சூத்திரர்களுக்கும், மேலே உள்ளதாக இவர்கள் சொல்லும் மற்றவர்களுக்கு இடையே சிண்டு முடிந்து விடும் வேலையை மட்டுமே இந்த தலித்தியவாதிகள் செய்கின்றனர்.(உதாரணம் வன்னியர் பறையர் மோதல்). சரி இந்த இரண்டு பேருக்கு இடையே புகுந்து சூத்திரர்களை மீட்கத்தான் இவர்கள் போராடுகிறார்கள் என்றால் அதுவும் இல்லை. அதனால் தான் இவர்களால் கீழ்க்கண்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை. 'தலித்தியம்' ஒரு உன்னத கருத்தியலாக இருக்கலாம். ஆனால், தமிழ் நாட்டை பொருத்தவரை பிரித்தாளும் சூழ்ச்சியின் ஒரு அப்பட்டமான வடிவம் என்பதை நீங்கள் இப்போது உணர முடியும்.

பட்டியல் சாதி மக்கள் தான் ஒருவேளை நீங்கள் சொல்லுகிற தலித் என்றே வைத்து கொள்வோம். உங்களின் இந்த வரையறை இந்தியா முழுவதும் ஒன்றாக இருக்கிறது என்று வைத்து கொள்வோம். அந்த வரையறையின் படி கீழ் கண்ட கேள்விகளுக்கு மகிழ்நன் மற்றும் ஹரிஹரன் அவர்கள் பதில் கூறுங்களேன்.

* பார்த்தாலே தீட்டு என்று ஒதுக்கப்பட்ட ஒரு சாதி இன்று பிற்படுத்தப்பட்டோர் (ஆதிக்க சாதியில்) உள்ளது. 'தீண்டத்தகாதவர்கள்' தான் தலித் என்ற வரையறை எங்கே போச்சு...?
* காலாடி என்பவன் குடும்பனுக்கு சேவகம் செய்பவன். காலாடி இருப்பதோ பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில். ஆனால் குடும்பன் இருப்பதோ பட்டியல் சாதியில். இந்த முரண்பாட்டை தலித் அளவுகோலால் விளக்க முடியுமா?
* சென்ற மாதம் வரை பிற்படுத்தபட்டோர் பட்டியலில் இருந்த நரிக்குறவர், இந்த மாதம் முதல் பழங்குடியினர் பட்டியலில் உள்ளனர். இந்த ஆதிக்க சாதி to பழங்குடியினர் மாற்றம் பற்றி தலித் அளவுகோல் என்ன சொல்கிறது?
* தமிழ் நாட்டில் இருக்கும் 65 பட்டியல் சாதியில் எத்தனை சாதி பேர் தலித் பட்டியலில் இருக்கிறார்கள்?
* தலித் கலை,தலித் பண்பாட்டில் இங்கு தமிழ் நாட்டில் நீங்கள் சொல்லும் அந்த அத்தனை 65 சாதியின் அடையாளமும் உண்டா...? இருந்தால் கொஞ்சம் காட்டுங்களேன்.


----ம.பொன்ராஜ் காலாடி
Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்